
கழிவறையில் விழுந்து இளம் நடிகர் சாவு
ட்விஸ்ட்டுகள், சர்ச்சைகள், சண்டைகள் என பரபரவென கடக்கும் Splits Villa நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலிவுட் நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத். இவர் நேற்று மும்பை உள்ள அந்தேரி வீட்டில் சுயநினைவு நினைவு இழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் ஆதித்யாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்து இருக்கிறார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.
ஆதித்யா சிங் உயிரிழந்தது தொடர்பாக அவரது நண்பர் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளத்திற்கு பேசியிருக்கிறார். அவர் பேசும் போது, “ கழிவறையில் வழுக்கி விழுந்து சுயநினைவை இழந்த ஆதித்யா சிங்கை நண்பர் ஒருவர் அங்குள்ள காவலாளி உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்.
கழிவறையில் வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் அடிபட்டு இறந்திருக்கலாம் அல்லது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம். காவல்துறை ஆதித்யா சிங் இறப்பு தொடர்பான விசாரணை தொடங்கி விட்டனர். நாங்கள் அனைவரும் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்து இருக்கிறோம்.” என்றார்.
மேலும் போதைப்பொருளை அதிகமாக எடுத்துக்கொண்டதால் அவர் இறந்து விட்டார் போன்ற தகவல்கள் வெளியானது தொடர்பாக அவரிடம் கேட்ட போது அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆதித்யா தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து வெளியே சென்று இருக்கிறார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
மாடலாக தன்னுடைய கலைபயணத்தை தொடங்கிய ஆதித்யா சிங் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பாலிவுட்டில் நடிகராக வலம் வந்தார். சோசியல் மீடியாவிலும் ஆதித்யா மிகவும் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.















































