நடிகர் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது
சரத்பாபு 40 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணம் செய்தவர். 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார். நடிகர் ரஜினிகாந்த்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்த ‘அண்ணாமலை’ திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்து மிகவும் பிரபலமானார்.
அவர் சிறுநீரகம், நுரையீரல், கல்லீரல் போன்ற முக்கிய உறுப்புகளை பாதிக்கும் செப்சிஸ் நோயால் அவர் பாதிக்கப்பட்டு இருந்தார்.
இதனையடுத்து அவர் நேற்று மதியம் 1.32 மணிக்கு சிகிச்சை பலனின்றி காலமானார். சரத்பாபு மரண செய்தி அறிந்ததும் திரையுலகில் அவரது நண்பர்கள், இயக்குநர்கள் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலை 6 மணிக்கு அவரது உடல் ஹைதராபாத் ஃபிலிம் சேம்பருக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பலர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் சரத்பாபுவின் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் தமிழ் திரையுலக பிரபலங்கள் மற்றும் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு இன்று நடிகர் ரஜினிகாந்த் சூர்யா, கார்த்தி, பாக்யராஜ், பார்த்திபன், சுஹாசினி, சரத்குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்துக்கு கொண்டு வரப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதிச் சடங்குகளுக்குப் பின் சரத்பாபுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva