
அவர் ஒரு சைக்கோ என கணவரை பற்றி கூறிய பாடகி வைக்கம் விஜயலட்சுமி
பிரபல செய்தி ஊடகத்தில் ஒளிபரப்பாகும் "மனிதி வா" என்ற நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலந்து கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு நடிகை கவுதமி நடத்தி கொண்டிருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டிருந்தார். அதில் தான் திருமணம் செய்து கொண்டபின் நடந்த நிகழ்வுகளையும் அவர் ஏன் மிமிக்ரி கலைஞர் மேரி அனுப்பை விவாகரத்து செய்தார் என்ற விவரத்தையும் கூறினார்.
என்னை திருமணம் செய்த நபர் சேடிஸ்ட் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை முழுநேர பணியாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார். அதையெல்லாம் விட எனது பாடல் தொழிலை மேற்கொள்வதற்கு பல நிபந்தனைகளை விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் எப்போதுமே பாடல்களுக்கு முன்னுரிமை தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு, பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை. உங்களுக்கு பல்வலி என்றால் அதை பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு அளவுக்கு அதிகமானால் அதை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை" என்று வைக்கம் விஜயலக்ஷ்மி கூறியுள்ளார்.















































