Ads

தீபாவளி திருநாள்

தீபாவளி திருநாளில் தீபாவளி  நல்வாழ்த்துக்கள்.

  • 1678
  • More
  • 1125
  • More
  • 1182
  • More
  • 1140
  • More
  • 1124
  • More
  • 1151
  • More
  • 1105
  • More
  • 1191
  • More
  • 1144
  • More
  • 1137
  • More
  • 1126
  • More
  • 1038
  • More
Comments (0)
Login or Join to comment.
  • 3
·
Added a post
வரம் 1. நோயில்லா உடல் இருந்தால். 2. போதிய அளவு பணம் இருந்தால். 3. கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் இருந்தால். 4. மகனும் மருமகளும் போதிய அளவு கவனித்தால். 5. மகளும் மருமகனும் ஆதரவாக இருந்தால். 6. உடன்பிறந்தோர் ஒற்றுமையாக இருந்தால். 7. நினைவாற்றல் சரியாக இருந்தால். 8. சம வயது தோழர்கள் அவ்வப்போது தொடர்பில் இருந்தால். 9. கோயில்கள் சென்று இறை வழிபாடு செய்ய முடிந்தால். 10. படுத்தவுடன் தூக்கம் வந்தால். 11. மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் இருந்தால். 12. வீட்டிலும் வெளியிலும் கீழே விழாமல் இருந்தால் முதுமை என்பது வரம்!  இவற்றுக்கு எதிர்மறையாக மேற்சொன்ன 12 ம் இருந்தால் முதுமை என்பது சாபம்!
  • 5
  • 8
·
Added a post
பசுக்களுக்கு பழங்களும், கீரைகளும் பொதுவாகவே கொடுப்பது நல்லதாகும். மேலும் பசு மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படுவதால், பசுவிற்கு உணவு தானமாக வழங்கப்படுவது அதிர்ஷ்டத்தை தரும் என்றும் நம்பப்படுகிறது.பசுவிற்கு அகத்திக்கீரையை தானமாக வழங்கும்போது வீட்டில் நீண்ட நாளாக தடைப்பட்டுக்கொண்டிருக்கும் அனைத்து விஷேசங்களும் விரைவில் நடைபெறும். நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்று சொல்லப்படுகிறது. பிரமஹத்தி தோஷமே சரியாகும் பசுவிற்கு அகத்திக் கீரையை கொடுக்கும்போது என்று சொல்லப்படுகிறது.நம் மூன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் விட்ட பாவம் கூட பசுவிற்கு 16 அகத்திக்கீரையை கொடுக்கும் போது நீங்குமாம். பசுவை ஒருமுறை பிரதக்ஷணம் செய்தால் பூலோகம் முழுவதும் பிரதக்ஷணம் செய்ததற்கான பலன் கிடைக்கிறது என்று சாஸ்திரம் கூறுகிறது. பசுவை பூஜிப்பது பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.பசுவிற்கு புல் கொடுத்தாலோ அல்லது கழுத்தில் தடவிக்கொடுத்தாலோ கோடி புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. பசு நடக்கும்போது ஏற்படும் புழுதி நம் மீது படுவது கூட புண்ணியமாக கருதப்படுகிறது. பசுவின் கால் பட்ட மண்ணைத்தான் தசரத சக்ரவர்த்தி, ரகு சக்ரவர்த்தி பூசிக்கொண்டார்களாம்.பசு ‘அம்மா’ என்று அழைப்பது அந்த இடத்தில் மங்கள ஒலியை உருவாக்குகிறது. பசு இருக்கும் இடத்திற்கு பக்கத்திலிருந்து செய்யப்படும் பூஜையால் அதிக பலன்கள் கிடைக்கும். சாதாரண மனிதர்கள் கண்களுக்கு தெரியாத எமதூதர்கள், எமன் போன்றோர் பசுமாட்டின் கண்களுக்கு தெரியுமாம். அதனாலேயே யாராவது இறக்க போகிறார்கள் என்றால் பசுமாடு ரொம்பவே சத்தம் போடுமாம்.அகத்திக்கீரையை முனிவிருக்ஷம், வக்ரபுஷ்பம் என்றும் அழைப்பார்கள். வானத்தில் அகத்திய முனிவரின் நக்ஷத்திரம் தோன்றும் நேரம் அகத்திக்கீரையும் பூ பூப்பதால் இதற்கு அகத்திக்கீரை என்ற பெயர் வந்தது.
  • 14
  • 20
·
Added a post
தமிழ்நாட்டில் - ராஜபாளையம் நகரில் தலைமுறைகளாக மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர், முதுநிலை பட்டதாரி மருத்துவர் Dr. ராஜசேகர் (பழமையான பெயர் கண்ணா டாக்டர்). தன்னை அழைக்கும் நோயாளியின் பொருளாதார நிலைமை அல்லது இடம் எதுவாக இருந்தாலும், அவர் அதைக் கருத்திலெடுக்காமல், தனது ஆக்டிவா வாகனத்தில் எந்த மூலை முடுக்காக இருந்தாலும் சென்று பரிசோதனை செய்து மருந்து எழுதித் தரும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.எந்தவொரு சமூக அங்கீகாரத்தையும் எதிர்பாராமல், சிக்கனமான கட்டணத்தில் தனது சேவையை மக்களுக்கு வழங்கி வரும் அவரது மனப்பான்மை பாராட்டத்தக்கது.அவரது எளிமையும், உன்னதமான சமூக சேவையும் மதிப்பிற்குரியது என்பதற்காக, ரோட்டரி கிளப் ஆஃப் ராஜபாளையம் சூப்பர் கிங்ஸ் சார்பாக “Man of Simplicity – மக்கள் மருத்துவர் Dr. ராஜசேகர் (கண்ணா டாக்டர்)” அவர்களுக்கு சிறப்பு மதிப்பூட்டும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இவர் போல் ஒரு மனிதர் நம்மிடையே இருக்கிறார் என்பது நமக்கு பெருமை!
  • 22
·
Added a post
நின்று கொண்டு இருப்பவர் உசைன் போல்ட். வணங்குபவர் Gatlin. இது நடந்த இதே stadium த்தில் Gatlin போதை பொருள் உபயோகித்து ஓடியத்திற்காக 2012 இல் தடை செய்யப்பட்டு cheat பட்டம் வாங்கினார்.உலக தடகள வீரர்கள் மத்தியில் அவரை ஒரு ஏமாற்றுக்காரர் என்று ஏசினார்கள். ஆனால் அதே போட்டியில் தங்கம் வென்ற போல்ட் அவரைப் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. பல பேட்டிகளில் அவரை நோண்டி நோண்டி கேட்ட போது அவர் சொன்னது.Galtin ஒரு திறமையானவர். அவர் போதை பொருளை உபயோகித்தால் தடை செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் என்னைப் பொருத்தவரை அவர் போதை பொருளை உபயோகிக்காமல் இன்னும் முயற்சி எடுத்து இருந்தால் கண்டிப்பாக என்னை கூட ஜெயிக்கலாம் என்றார். உலகம் அவர் செய்த தவறை மட்டும் பார்க்கிறது. நான் அவரின் திறமையை மட்டும் பார்க்கிறேன் என்றார்.அப்போது எல்லோரும் சிரித்தார்கள். ஒரு கருப்பருக்கு இன்னொரு கருப்பர் வக்காலத்து வாங்குகிறார் என்று.ஆனால் அந்த பேட்டி Galtin க்குள் ஒரு பெறும் மாறுதலை உண்டாக்கியது. 6 வருடம் உழைத்து போதைகளை விட்டு விட்டு மீண்டும் களத்துக்கு வந்தார்.அதே களத்தில் அவர் உசைன் போல்ட்டையே வென்றார்.அவர் தரையில் அமர்ந்து போல்ட்டை வணங்கிய காட்சிதான் இது. அவர் வணங்கியது அவரை ஏசிய மக்களை பார்த்து அல்ல. அவரின் திறமையை பார்த்து அதன் வலிமையை உணர்த்திய போல்டை.அதனால் இந்த உலகத்தில் ஒருவரின் திறமையை பாருங்கள். அவரின் குணத்தை பார்க்காதீர்கள். திறமை குணத்தை வெல்லும்.
  • 25
·
Added a post
* 2 டேபிள் ஸ்பூன் வெங்காய ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் சிறுநீரகக் கற்கள் பிரச்சினை சரியாகும்.*நம் முன்னோர்கள் இந்த பனங்கற்கண்டை சளி மற்றும் இருமலுக்கு பயன்படுத்தினர். மேலும் இது தொண்டைக் கரகரப்பு, சளியை வெளியேற்றுதல் மற்றும் இருமல் குறைதல் போன்றவற்றை செய்கிறது. இதற்கு இதை நீங்கள் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை முழுங்கினால் போதும்.*உங்கள் வாய் துர்நாற்றம் வீசுகிறதா? கொஞ்சம் சீரகம் மற்றும் பனங்கற்கண்டை வாயில் போட்டு மென்று தின்றால் போதும் உங்கள் வாய் துர்நாற்றம் காணாமல் போகும்.*உங்களுக்கு எப்பொழுதும் சோர்வாக இருப்பது மாதிரி தோன்றுகிறதா? அதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் பசு மாட்டு நெய்யுடன் சிறிது பனங்கற்கண்டு மற்றும் சிறிது நிலக்கடலை சேர்த்து சாப்பிட்டால் போதும் மிகவும் சுறுசுறுப்பாக மாறிவிடுவீர்கள்.*தீராத சளி பிரச்சினை இருந்தால் அதற்கு 2 பாதாம் பருப்பு, 1 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு, 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் பொடி சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி பண்ணி பாலுடன் கலந்து குடித்தால் போதும் உங்கள் சளி பிரச்சினை காணாமல் போகும்.*தொண்டைக் கட்டிக் கொண்டு பேச முடியாமல் கஷ்டப்படுகிறீர்களா? 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள், 1/2 டேபிள் ஸ்பூன் நெய் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை வலி குணமாகும்.சிறிது பனங்கற்கண்டு, பாதாம் பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து இரவில் படுப்பதற்கு முன் சாப்பிட்டு வந்தால் உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும். மேலும் கண்பார்வை அதிகரிக்கும்.*உங்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பனங்கற்கண்டை பாதாம் மற்றும் மிளகுத் தூளுடன் சேர்த்து வாரத்திற்கு 2 முறை சாப்பிட்டால் போதும் உங்களை எந்த நோயும் அண்டாது.
  • 25
·
Added a news
யாழ் பிரதம தபாலக சுற்றுவட்டத்தை அண்டிய தீவக பகுதிக்கான போக்குவரத்தை முன்னெடுக்கும் பிரதான வீதியாக காணப்படும் கொட்டடி மின் சந்தை மார்க்க வீதியின் அபிவிருத்தி தொடர்பில் துறைசார் அதிகாரிகள் அசமந்தமாக இருப்பதால் மக்களின் வரிப்பணம் ஒவ்வொரு தடவையும் வீணடிக்கப்பட்டு சூறையாடப்படும் துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாக பொதுநல விரும்பிகள் குற்றம் சாட்டுகின்றனர்.யாழ்ப்பாணம் பிரதான வீதியின் கொட்டடி சுற்றுவட்ட பகுதியில் தீவகத்திற்கான போக்குவரத்தின்  பிரதான வீதியாக இருக்கும்  குறித்த வீதி ஒவ்வொரு மழையுடனான காலத்திலும் மிக மோசமாக சிதைவடைந்து குன்றும் குழியுமாகவும் மழை நீர் நிரம்பி விபத்துக்களை ஏற்படுத்தும் களமாகவும் காட்சியளிப்பது வழமை.அவ்வாறு சிதைவுற்ற பின்னர் மக்கள் பல்வேறு துன்ப துயரங்களை சந்தித்த பின்னர் துறைசார் திணைக்களம் அவசர அவசரமாக நிலையான திட்டமிடல் ஏதும் இல்லாது அந்த வீதியை தற்காலிகமாக சீரமைத்துக்கொள்வதுமான நடவடிக்கைகளே பல வருடங்களாக இருந்து வருகின்றது.தற்போது சில தினங்களுக்கு முன்னர் பெய்த சிறு மழையை அடுத்து மீண்டும் யாழ் தபால் நிலையச் சந்தியில் இருந்து தொலைத்தொடர்பு நிலைய சந்தி வரையான குறித்த வீதியின் சுமார் 25 மீற்றர் வரையான தூரம் பாரியளவு சேதமடைந்து கனரக வாகனங்கள் கூட பயணிக்க முடியாத வகையில் பாரிய குன்றும் குழியும் நிறைந்ததாக காணப்படுகின்றது.இதனால் குறித்த வீதியூடான போக்கவரத்தை மேற்கொள்வதில் பொதுமக்கள் பல்வேறு இடர்பாடுகளை சந்திக்க நேரிடுகின்றது. அத்துடன் தொடர்ந்தும் ஒவ்வொரு மழைகாலங்களிலும் சிதைவுற்று குன்றும் குழியுமாக மாறுவதும் இந்த வீதியில் பல விபத்துக்கள் ஏற்படும் சந்தர்ப்பங்கள் இருந்துள்ளன.இவ்வாறு அடிக்கடி பாதிக்கப்படும் குறித்த வீதியை துறைசார் திணைக்களம் உரிய பொறிமுறை இன்றி ஏனோதானோ என மக்களின் பணத்தை கொட்டி ஒவ்வொரு தடவையும் சீரமைப்பதும் பின்னர் அந்த வீதி ஒரு சிறு மழை பெய்தவுடன் மீண்டும் உடைந்து குன்றும் குழியுமாக மாறும் நிலையுமாக இருக்கும் நிலைக்கு ஏன் நிரந்தர தீர்வை மேற்கொள்ள முடியாது அதிகாரிகள் அசமந்தமாக இருக்கின்றனர் என பொதுமக்களும் பயணிகளும் கேள்வி எழுப்புகின்றனர்.எனவே இம்முறையாவது குறித்த வீதியை சீரமைக்கும்போது தூரநோக்குடன் சரியான பொறிமுறையை உள்ளடக்கிய வகையில் சீரமைத்து மக்களின் வரிப்பணத்தை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.அத்துடன் குறித்த பகுதியில் யாழ் நகரின் பிரதான மீன் சந்தை, பல கடைத் தொகுதிகள், தனியார் இரவுநேர தூர இடங்களுக்கான போக்குவரத்து சேவை,  முற்றவெளி மைதானம் உள்ளிட்ட பல முக்கியத்துவம் மிக்க இடங்களாக இருப்பதும், இவ்விடங்களில் யாழ் மாநகர சபை தமக்கான வரி அறவீடுகளை செய்வதுமான நிலை இருந்தும் கூட யாழ் மாநகரசபையும் இவ் வீதியின் நலன் குறித்து அக்கறை செலுத்தாதிருப்பது வேதனையானது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.000
  • 193
·
Added a news
நேற்றையதினம் தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளனர். பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றனர். இதன்போது அங்கு வந்த பெண் வீட்டார் குறித்த யுவதியை பிரிப்பதற்கு முயற்சி செய்தபோதும், இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தலாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது, அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழலாம் என மல்லாகம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இவ்வாறான பின்னணியில் வழக்கு நிறைவடைந்து வரும்போது பி.ப 4.37 மணியளவில் பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் அந்த இளைஞனை தாக்கிவிட்டு யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர். இந்நிலையில் இது குறித்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பழை பொலிஸார் குறித்த இளைஞனை தேடும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது000
  • 200
·
Added a news
இந்த ஆண்டின் இரண்டாவது மின்கட்டண திருத்தம் தொடர்பான பொது மக்களின் கருத்துக்களைக் கோரும் நடவடிக்கை நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.  இந்த நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில் முன்னெடுக்கப்படுமென, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு முன்மொழிந்துள்ள போதிலும், குறித்த முன்மொழிவு ஆண்டின் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டணத் திருத்தத்தைவிடக் குறைவானதாக இருக்குமென, இலங்கை மின்சார சபை அண்மையில் தெரிவித்திருந்தது. கடன் நெருக்கடியை நிர்வகிப்பதே மின்கட்டணங்களை அதிகரிப்பதன் நோக்கம் என்றும், இதில் பல காரணிகளும் அடங்குகின்றன என்றும் இலங்கை மின்சார சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதியிலிருந்து மின்கட்டணத்தை 18.3 சதவீதத்தால் அதிகரிக்க வேண்டுமென பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை யோசனை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 200
·
Added a news
மே மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.  14 இலட்சம் அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்காக, அரசாங்கம் 11 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தொகையை ஒதுக்கியுள்ளது.  அதன்படி, அஸ்வெசும நலன்புரி திட்டத்தைப் பெறும் பயனாளிகள் தங்களது வங்கிக் கணக்குகளின் மூலம் மே மாதத்துக்கான கொடுப்பனவினைப் பெற்றுக்கொள்ள முடியும் என, நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.000
  • 200
·
Added a news
நாட்டிலுள்ள அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சி சபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 27 ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.000
  • 198
·
Added a news
பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வீரர்களான ஷஹீன் ஷா அப்ரிடி, பாபர் அஸாம் மற்றும் மொஹமட் றிஸ்வான் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.ஆகிப் ஜாவிட்டுக்கு பதில் கடந்த வாரம் நியமிக்கப்பட்ட பாகிஸ்தான் புதிய பயிற்சியாளரான நியூசிலாந்தின் மைக் ஹேசனின் கீழ் அந்த அணி பங்களாதேஷ் அணியை எதிர்கொள்ளவுள்ளது. பாகிஸ்தான் வரும் பங்களாதேஷ் அணி ரி20 தொடரில் ஆடவுள்ளது.எனினும் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சுப்பர் லீக் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ரி20 தொடரிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.எனினும் இந்த தொடருக்கு சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் ரி20 குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது.இதில் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி கடைசியாக நியூசிலாந்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த ரி20 தொடரில் ஆடியபோதும், பாபர் அஸாம் மற்றும் ரிஸ்வான் இருவரும் தொடர்ந்து இரண்டாவது ரி20 தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மந்தமாக ஓட்டங்களை சேகரிப்பதாக விமர்சனம் உள்ளது.நியூசிலாந்து தொடரில் இடம்பெறாத சயிம் அயூப் மற்றும் பகர் சமான் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். கடந்த ஆண்டு மே மாதம் தொடக்கம் பல்வேறு காயங்களால் அணியில் இடம்பெற தவறிய ஹசன் அலியும் அழைக்கப்பட்டுள்ளார்.பாகிஸ்தான் குழாம்: சல்மான் அலி அகா (தலைவர்), ஷதாப் கான், அப்ரார் அஹமது, பஹீம் அஷ்ரப், பகர் சமான், ஹரிஸ் ரவூப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலத், குஷ்தில் ஷா, மொஹமட் ஹாரிஸ், மொஹமட் வசீம், மொஹமட் இர்பான் கான், நசீம் ஷா, ஷஹிப்சதா பர்ஹான், சயிம் அயூப். 000
  • 202
  • 241
·
Added a post
இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் அதிசய ஆலயம்!ஒருவனின் நேரத்தை விஞ்ஞானத்தால் கணிக்கவே முடியாது.அப்படிப்பட நேரத்திற்காக ஒரு கோயில் இருக்கிறது என்றால், அதை நம்ப முடிகிறதா?தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார் பட்டி எனும் கிராமத்தில் உள்ள காலதேவி கோவில். கோயிலில் கோபுரத்திலே எழுதப்பட்டுள்ள வாசகம் *”நேரமே உலகம்”*புராணங்களில்வரும் காலராத்திரியைதான் இங்கு காலதேவியாக கருதுகின்றனர்.இவள் இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகிறது. - காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி காலதேவிக்கு உண்டு.நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றமுடியும், என்பதுதான் இக்கோயிலின் தத்துவம்.சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு நடைதிறக்கப்பட் டு, சூரிய உதயத்திற்கு முன் நடை சாத்தப்படுகிறது.இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக, இங்கு நடை திறந்திருக்கும். இப்படி இரவு முழுவதும் நடை திறந்திருக்கும் ஒரு கோயில் உலகிலேயே இது ஒன்றுதான்.பவுர்ணமி, அமாவாசை தினங்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருக்கும். கால தேவிக்கு உகந்த நாட்களாக இவை கருதப்படுகிறது.கோயிலை தலா 11சுற்றுகள் வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால்போதும்.கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பதுதான் இக்கோயிலின் நம்பிக்கை.காலச்சக்கரத்தின் முன்னிருந்து வேண்டும் போது, எனக்கு அதைக்கொடு, இதைக் கொடு, அவனை பழிவாங்கு என வேண்டுதல்கள் இல்லாமல்,“எனக்கு எது நல்லதோ அதைக் கொடு’ என வேண்டினால் போதும்.மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பேருந்தில் ஏறி எம். சுப்பலாபுரம் மெயின்ரோட்டில் இறங்கி கோவிலுக்கு நடந்தோ, அல்லது ஆட்டோவிலோ செல்லமுடியும். இடம் தெரியாதவர்கள் சாதாரண நாட்களில் செல்வதைவிட பெளர்ணமி, அமாவாசை நாட்களில் செல்வதே சிறப்பு.ஏன் என்றால் இரவு நேரக்கோவில் என்பதால் போதிய வசதிகள் சாதாரண நாட்களில் கிடைக்காது. விழாக்காலத்தில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படுகிறது.
  • 305
  • 300
  • 301
தமிழ்நாட்டில் - திருவாரூர் கமலாலய குளத்தின் நடுவாண் கோயில் இன்னும் இரண்டு நாட்களில் தெப்ப திருவிழா கோலாகலம்..மே 23,24,25 திருவாரூர் திருவிழா2025மிகப் பிரமாண்டமாக அமைந்துள்ள கமலாலய திருக்குளத்தின் நடுவே நாகநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த நாகநாதர் திருக்கோயில் நடு கோயில், நடுவன் கோயில், நடுவான் கோயில் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. குளத்தின் கரையில் இருந்து பார்க்கும்போது இந்த கோயில் மிக சின்னதாக தெரியும்.திருக்கடல் போன்று திகழும் கமலாலயக் குளத்தின் நடுவே நடுவாண் கோயில் அமைந்துள்ளது. நடுவனக் கோயில், நடுவணாங் கோயில், நடுக்கோயில், நாகநாத சுவாமி கோயில் என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. ‌இந்தக் கோயிலில் அருளும் ஶ்ரீநாகநாதரும் ஶ்ரீயோகாம்பாளும் யோகக் கலைகள் ஸித்திக்க வரம் தரும் தெய்வங்களாகத் திகழ்கிறார்கள்.கரையில் இருந்து பார்த்தால் சிறியதாகத் தோன்றும் கோயில், அருகில் நெருங்கினால் பிரமிக்க வைக்கிறது. குளத்தின் நடுவே சுமார் ஒரு ஏக்கர் பரப்பில் இக்கோயில் அமைந்துள்ளது; இரண்டு திருச் சுற்றுக்களைக் கொண்டது. மூலவர் சந்நிதியின் நுழைவு வாயிலில் உள்ள சுதைச் சிற்பத்தில் முசுகுந்த சக்கரவர்த்தி இறைவனை பூஜிக்கும் காட்சியைக் காணலாம். விநாயகர், ஜேஷ்டாதேவி, நாகர், சண்டிகேஷ்வரர், நந்தி, அவருக்கு அருகில் ஓர் சிவலிங்க மூர்த்தி ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.நாகநாதர் கோயிலைச் சுற்றிலும் 16 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றுக்கு நடுவே அமைந்த ஆலயம் என்பதாலும் இது நடுக்கோயில் எனப் பெயர்பெற்றது என்பர்.இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். இக்கோயில் நுழைவுப் பகுதியில் யானை சிலை ஒன்று உள்ளது. கனமழை பொழியும் காலங்களில் கமலாலய குளத்தின் நீர்மட்டம், இந்த யானையின் கால்களைத் தொடுவிட்டால் மழை நின்றுவிடும் என்பது நம்பிக்கை.‘அஞ்சனை வேலியாரூ ராதரித் திடங்கொண்டார்’ எனும் திருநாவுக்கரசரின் பதிக வரிகள் இக்கோயிலின் மேன்மையைச் சொல்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் ஐந்து பிரதோஷங்கள் இந்தக் கோயிலுக்குச் சென்று, அபிஷேகத் தயிரை வாங்கி அருந்தினால் விரைவில் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.பிரதோஷ காலம் மட்டுமன்றி சோமவாரம், சிவராத்திரி, திருவாதிரை போன்ற சிவபெருமானுக்கு உகந்த புண்ணிய தினங்களில் இந்த ஆலய இறைவனையும் அம்பிகையையும் தரிசித்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்; வியாபாரம் பெருகும்.இந்தக் கோயிலுக்குப் படகில்தான் செல்ல முடியும். குளத்தின் வடகரையிலிருந்து படகு மூலம் அர்ச்சகர் சென்று வருவார்.தினமும் மாலை 5 முதல் 6 மணி வரை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ தினங்களில் மதியம் 2 முதல் இரவு 10 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிவராத்திரி அன்று, இங்கு நான்கு கால பூஜை நடைபெறும்.
  • 307
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்நண்பர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதரரின் வகையில் அலைச்சல் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். ரகசிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு ரிஷபம்மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மூத்த சகோதரர்களால் பயனடைவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா மிதுனம்மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நெருக்கமானவர்களின் பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்பு ஏற்படும். வேலையாட்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோகத்தில் சில நுட்பங்களை அறிவீர்கள். முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நிறைவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் கடகம்எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிதானமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். கலைத்துறைகளில் ஆர்வம் ஏற்படும். தானியம் தொடர்பான வியாபாரத்தில் ஆதாயம் அடைவீர்கள். ஆலய திருப்பணிகளில் ஆர்வம் உண்டாகும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகத் துறைகளில் திறமைகள் வெளிப்படும். கவனம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சிம்மம்விலகி சென்றவர்களைப் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். வேலையாட்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். கால்நடை சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். மனதில் நேர்மறை எண்ணங்களுடன் செயல்படவும். அலுவலகம் தொடர்பான பணிகளில் அலைச்சல்கள் மேம்படும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கன்னிமனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். சகோதரர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். சுபகாரியம் சார்ந்த பேச்சு வார்த்தைகள் நிறைவு பெறும். வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு மேம்படும். வீடு, வாகனம் சார்ந்த பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் உண்டாகும். கவலை விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் துலாம்நெருக்கமானவர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த தாமதம் விலகும். உலக வாழ்க்கைப் பற்றிய புதிய கண்ணோட்டங்கள் பிறக்கும். உத்தியோகத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். களிப்பு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை விருச்சிகம்திறமைக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்து செல்லவும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். பயம் விலகும் நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு தனுசுஎழுத்து சார்ந்த துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். உறவுகளிடத்தில் பொறுமை வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். கால்நடை தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மகரம்அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். வெளிவட்டத்தில் மதிப்பு உயரும். புதிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சிக்கல் மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை கும்பம்குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். நண்பர்களின் உதவியால் சில பிரச்சனைகள் தீரும். வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். மறதி சார்ந்த பிரச்சனை குறையும். வியாபாரத்தை விரிவு செய்வதில் ஆலோசனை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்நிறம்  மீனம்உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். பாடங்களில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கால்நடை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சேமிப்பு சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். பயனற்ற வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. பெற்றோரின் வழியில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். சாதனை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
  • 330
விசுவாவசு வருடம் வைகாசி மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை 22.5.2025.இன்று இரவு 08.58 வரை தசமி. பிறகு ஏகாதசி.இன்று பிற்பகல் 01.49 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.நாமயோகம் : இன்று மாலை 06.59 வரை விஷ்கம்பம். பிறகு பிரீதி.கரணம் : இன்று காலை 09.59 வரை வணிசை. பின்னர் இரவு 08.58 வரை பத்தரை. பின்பு பவம்.அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.52 வரை அமிர்த யோகம். பின்னர் சித்த யோகம்.நல்ல நேரம்:காலை : 10..30 முதல் 11.30 மணி வரைபகல் : 12.30 முதல் 01.30 மணி வரைமாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
  • 309
  • 306
Good Morning...
  • 310
·
Added a news
கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி மீது தற்போது கனடியர்களுக்கு கூடுதல் நம்பிக்கை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முதற்கால ஆட்சியிலும், அவரது கடைசி நாட்களிலும் இருந்ததை விட கார்னி மீதான நம்பிக்கை அதிகமாக உள்ளது என புதிய கருத்துக்கணிப்பு ஒன்று வெளிக்காட்டியுள்ளது.புருப் ஸ்டெடர்ஜீஸ் கன் ட்ரஸ்ட் இன்டெக்ஸ் Proof Strategies CanTrust Index எனப்படும் இந்த வருடாந்த கருத்துக்கணிப்பை, தி டொகிட் குரூப் The Logit Group மே 5 முதல் மே 14 வரை நடத்தியது. இதில் 1,250 கனடியர்கள் பங்கேற்றனர்52% கனடியர்கள் மார்க் கார்னி மீது நம்பிக்கை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஜனவரியில் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு இருந்த 26% நம்பிக்கையைவிட இரட்டிப்பு அளவு நம்பிக்கை கார்னி மீது மக்கள் கொண்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு நடந்த Proof Strategies கருத்துக்கணிப்பில், முன்னாள் பிரதமர் ட்ரூடோவுக்கு 46% நம்பிக்கை இருந்தமை குறிப்பிடத்தக்கது. கன்சர்வேட்டிவ் கட்சி தலைவரான பியர் பொய்லிவ் மீது நம்பிக்கை தற்போதும் உயரவில்லை என கணிப்பு தெரிவிக்கிறது.
  • 420
·
Added article
பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் மகன் ஹம்சவிர்தன். இவர், 'புன்னகை தேசம்', 'ஜூனியர் சீனியர்', 'மந்திரன்', 'பிறகு' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இவர் மனைவி சாந்தி, கடந்த 2021-ம் ஆண்டு கரோனா பாதிப்பால் உயிரிழந்தார். இதையடுத்து கேரளாவை சேர்ந்த மாடலிங் கலைஞர் நிமிஷாவை காதலித்து வந்தார். இருவீட்டு சம்மதத்துடன் புதுச்சேரியில் இவர்கள் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இந்த திருமணம் நடைபெற்றது. நிமிஷாவின் சொந்த ஊரான வயநாட்டில் கடந்த 18-ம் தேதி திருமண வரவேற்பு நடைபெற்றது. இதற்கிடையே ஹம்சவிர்தன், தனது பெயரை லியோ ஹம்சவிர்தன் என மாற்றி இருக்கிறார்.
  • 443
·
Added a news
உண்மை, பொய் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஐக்கிய இராச்சிய முதலீட்டாளரின் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலையொன்று இன்று முற்றிலுமாக மூடப்பட்டு 2000 பேர் வீதிக்கு வந்துள்ளனர். 2028 முதல் கடனை அடைக்க தற்போது 5% பொருளாதார வளர்ச்சி விகிதம் எமக்கு தேவையாக காணப்படுகிறது. தொழிற்சாலைகள் மூடப்பட்டிருக்கும் போது இந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அடைவது சாத்தியமில்லை.200 ஆடைத் தொழிற்சாலைகள் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, ​​அதை ஆரம்பிப்பதைத் தடுப்பதற்கு மிரட்டல் விடுத்தவர்களும் இருந்தனர். இத்தகைய சூழ்நிலையில், நாம் 5% பொருளாதார வளர்ச்சி விகிதத்தை கொண்டு வர வேண்டும். அவ்வாறு இல்லையெனில், 2028 முதல் நமது கடன்களை மீளச் செலுத்த முடியாமல் மீண்டும் வங்குரோத்து நிலையை அடைவோம். இது நடந்தால், நாடு பொருளாதார சுனாமிக்கு முகம் கொடுக்க நேரிடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
  • 461
·
Added a post
1893-ஆம் ஆண்டு அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றிச் சொற்பொழிவுகள் செய்தார். அவர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு, இந்தியாவின் பல பகுதிகளுக்கும் சென்றார். அப்போது அவர் பிரபலமாகவில்லை. அந்த நிலையில் ஒரு சமயம் விவேகானந்தர் ஓர் ஊரில் தங்கினார். அவரை பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அவர் அவர்களிடம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இந்த நிகழ்ச்சியைப் பற்றிப் பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தர் இவ்விதம் கூறியிருக்கிறார்: நம்புவதற்கே உங்களுக்குக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் மூன்று நாள்கள் இரவும் பகலும் எனக்கு ஒரு விநாடிகூட ஓய்வே கிடைக்கவில்லை. தூக்கம், உணவு எவையும் அறவே எனக்கு இல்லாமற் போய்விட்டன. யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவும் இல்லை. மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். நானும் அவர்களுடன் பேசிக்கொண்டே இருந்தேன். மூன்றாம் நாள் இரவு வந்தது. அநேகமாக எல்லோரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது தாழ்ந்த சாதியைச் சேர்ந்த, செருப்புத் தைக்கும் தொழிலாளி ஒருவன் என்னிடம் வந்தான்.அவன் என்னிடம், சுவாமிஜி! நீங்கள் மூன்று நாள்களாக உணவு, தூக்கம் எதுவுமே இல்லாமல் பேசிக்கொண்டிருந்ததை நான் கவனித்தேன். அதனால் என் மனம் வேதனையில் துடிக்கிறது. பசியும் களைப்பும் உங்களுக்கும் இருக்கத்தானே செய்யும்! மூன்று நாள்களாக ஒரு டம்ளர் தண்ணீர்கூட நீங்கள் குடிக்கவில்லையே! என்று பரிவுடன் கூறினான். அவனது அன்பு என் மனத்தை நெகிழச் செய்தது. நான் அவனிடம், சாப்பிடுவதற்கு நீ எனக்கு ஏதாவது தருகிறாயா? என்று கேட்டேன். அதற்கு அவன், நீங்கள் சாப்பிடுவதற்கு ஏதாவது தர வேண்டும் என்றுதான் என் மனம் ஏங்குகிறது. ஆனால் என்ன செய்வேன்? நான் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன்; சக்கிலியன். நான் சப்பாத்தி செய்து உங்களுக்குத் தர முடியாது. கோதுமை மாவும் மற்ற பொருள்களும் நான் உங்களுக்குக் கொண்டுவந்து தருகிறேன். நீங்களே சமைத்துச் சாப்பிடுங்கள் என்று கேட்டுக்கொண்டான். நான் அவனிடம், பரவாயில்லை. நீயே சமையல் செய்துகொண்டு வா. நான் சாப்பிடுகிறேன் என்றேன். இவ்விதம் நான் கூறியதைக் கேட்டு அவன் நடுங்கிவிட்டான்.காரணம், சக்கிலியனான அவன் ஒரு துறவிக்கு உணவளித்தது மற்றவர்களுக்குத் தெரிந்தால் தண்டிக்கப்படுவான். ஏன், நாடு கடத்தவும் செய்வார்கள். ஆனால் நான் அவனைச் சமாதானப்படுத்தி, உனக்குத் தண்டனை கிடைக்காமல் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று உறுதியளித்தேன். அவன் எனது உறுதியை அவ்வளவாக நம்பவில்லை. இருந்தாலும் அவனுக்கு என்மீதிருந்த அன்பு காரணமாகச் சப்பாத்தி செய்து கொண்டு வந்தான். அதை நானும் சாப்பிட்டேன். தேவர்களுக்குத் தலைவனான தேவேந்திரன் ஒரு தங்கக்குவளையில் தேவாமிர்தத்தை எனக்குத் தந்திருந்தால் – அதுகூட அப்போது அவ்வளவு ருசியாக இருந்திருக்காது என்றே எனக்குத் தோன்றியது. என் இதயம் அன்பாலும் நன்றியாலும் நிறைந்தது. என் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன. இதற்கிடையில், விவேகானந்தர் தாழ்ந்த சாதியைச் சேர்ந்த ஒருவன் கொடுத்த உணவைச் சாப்பிடுவதைப் பார்த்த உயர் சாதியினர் சிலர் கோபம் கொண்டார்கள். அதை அவர்கள் விவேகானந்தரிடமே தெரிவித்தார்கள். அவர்கள் கூறியதைப் பொறுமையாகக் கேட்டார் விவேகானந்தர். பிறகு அவர்களைப் பார்த்துக் கூறினார்: நீங்கள் என்னை மூன்று நாள்கள் தொடர்ந்து பேச வைத்தீர்கள்!இடையில் நான் ஏதாவது சாப்பிட்டேனா, ஓய்வெடுத்தேனா என்று ஒருமுறைகூட நீங்கள் யாரும் கவலைப்படவில்லை. நீங்கள் பெரிய மனிதர்கள், உயர்ந்த சாதியினர்! ஆனால் இங்கே பாருங்கள், தனக்குத் தண்டனை கிடைக்கும்! என்று தெரிந்திருந்தும், மனிதநேயம் என்ற ஒரே காரணத்தால் அவன் எனக்கு உணவு தந்தான். அவனைத் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவன் என்று நீங்கள் ஒதுக்குகிறீர்களே! இது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? சில நாட்களில் விவேகானந்தருக்கு கேத்ரி மன்னருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது. அப்போது விவேகானந்தர், செருப்பு தைக்கும் தொழிலாளி தனக்கு உதவியதைப் பற்றி மன்னரிடம் தெரிவித்தார். எனவே மன்னர், உடனடியாகச் செருப்பு தைக்கும் தொழிலாளியைத் தன் அரண்மனைக்கு வரவழைத்தார். தொழிலாளி, என்னை மன்னர் அழைத்திருக்கிறாரே! என் தவறுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறதோ! என்று பயந்துகொண்டே வந்தான். ஆனால் கேத்ரி மன்னர் அவனுடைய பயத்தைப் போக்கியதுடன், அவனுடைய செயலைப் புகழ்ந்து பாராட்டினார். மேலும் அரசர் அவனுக்குப் பொன்னும் பொருளும் தாராளமாகக் கொடுத்தனுப்பினார்.
  • 477
·
Added a post
“மழைல நனைஞ்சு நனைஞ்சு சுரேஷ் நினைக்கிறார், இப்பவே 6 ஆகுது..மதியம் சாப்பிட வேற செய்யல! பசிக்குது! ... கடைசி பார்சல் இருக்குது சாப்பிட்டுவிட்டு நாளை போய் கொடுக்கலாமா? அல்லது இப்போ கொடுத்து முடிக்கலாமா ? என்று.ரவி மாமாவுக்கு.இதயமருந்து வேற. டெய்லி எடுத்தா தான் அவருக்கு முடியும்னு சொன்னாங்க.மருந்து இல்லை என்றால் ஆபத்துன்னு கூட சொன்னாங்க.சரி... இந்த ஒரு டெலிவரி முடிச்சா தான் நிம்மதியா தூங்க முடியும்னு தோணுது.”(வீட்டுக்குப் போறாரு – கதவைத் தட்டுறாரு)“மாமா... கூரியர் … கதவ திறங்க!”(ஒரு நிமிஷம் கழியிது)(மறுபடி)“மாமா... மருந்து பாக்ஸு கொண்டு வந்தாச்சு மாமா...”(மூணு நிமிஷம் கழிச்சும் இன்னும் பதிலே இல்ல)“ஏதோ சரியில்லை போல இருக்கு…”(ஜன்னல வழியா உள்ளே பார்க்க)“ஒளி இருக்கே... ஆனா... ஒரு சத்தம்கூட இல்ல. நிழலும் தெரியலை...” மாமா மதியம் மட்டும் தானே தூங்குவாரு! சரியில்லை என்று எண்ணி..(அயலவரிடமே போய்ப் பேசுறாரு)“அம்மா, ரவி மாமா உள்ளே இருக்குற மாதிரி தான் இருக்கு. ஆனா கதவ திறக்கல. மூணு முறை தட்டினேன். பதிலை இல்ல…”(அயல்வீட்டு பாட்டி)“ஐயையோ... நானும் அவர இரண்டு நாளா வீட்டில இருந்து வெளிய வந்தத பார்கல ப.. நானும் வறேன். என்ன என்று பார்க்கலாம் ...அனைவரும் குரல் கொடுத்தும் பலனில்லை!அவங்க போலீஸுக்கும் ஆம்புலன்ஸுக்கும் கூப்பிட்டாங்க.சுரேஷ் கூடவே பயத்தோட, பதற்றத்தோட கதவு முன்பே நின்னான்.கதவுத் தட்டும் கையால இப்போ உள்ளே நுழைய போறான்.கதவு உடைக்கப்படுது...அந்த நொடி...வீட்டுக்குள்ள – அமைதி...ஒரு சத்தமும் இல்லாத அமைதி...தரையில ரவி மாமா சாய்ந்தே கிடந்தார்.கண்ணை மூடாம விழிச்ச மாதிரி. ஆனா அந்த விழிப்புல உயிர் இல்ல.(சுரேஷ் மெதுவா நடக்கிறான், அதிர்ச்சியோட சொல்லுறான்)“மாமா... மாமா! என்னங்க இது? இப்படி...”மாமாவால பேசவே முடியல. கையை அசைக்க கூட முடியல. மூச்சே மெதுவா தான் இருக்கு... உயிர் உள்ளதா இல்லையா என்பதையே புரிஞ்சுக்க முடியலை.கண்ணில் ஒரு கேள்வி மட்டும் தெரிஞ்சுது...“யாராவது வருவாங்களா?”(சுரேஷ், மெல்ல கீழே விழுந்துகிட்டு அழுகிற மாதிரி கவலை கொண்டார்)“ஒரே ஒரு கதவுதான்... அது திறக்காம நின்னதால இப்படி ஒரு நிலைமையா என்று...”(அடுத்த நாள், மருத்துவமனையில்... ரவி மாமா சிரிக்கிற மாதிரி, மெதுவா சொல்லுறாங்க)“அய்யா... நீ கதைவை தட்டிட்டு அப்படியே போயிருந்தா?நான் உயிர் பிளைத்திருப்பேனா ?நன்றிகள் கோடி உனக்கு என்று கையில் முத்தம் கொடுத்தார் ரவி மாமா!ஒரு கதவைத்தட்டியதால ஒரு உயிர் பிழைத்தது.நம்மால ஒரு நிமிஷம் நேரம் பொருக்க முடியாம போயிருச்சுனா, இன்னொரு உயிர் போயிருக்கும்னு யோசிக்கணும்.சில நேரம்...ஒரு சின்ன தட்டுதல் தான் — ஒரே பெரிய உதவி ஆகிடும்,உண்மைதானே?
  • 486