Ads
Empty
கர்மா என்பது என்ன என்பதை விளக்கும் முகமாக ஒரு குரு தன் சீடர்களுக்கு கதையொன்றைக் கூறினார்! அந்த கதை இதோ:ஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான்! அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம்.. “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்!அடுத்த நாள் அந்த மந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான்! அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான்! அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான்! அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை! கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர்! சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர்! நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான்! “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன்! அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன்! அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது! இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி!மிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான்! தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான்! அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான்! அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான்! அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான்! அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான்! அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான்! அந்தப் பொற்காசுகளால் அவனது வறுமை தீர்ந்தது! இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான்! அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்!குரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன?” என்றார்! பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்!!குரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார்.. “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “நாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த நேர்மறை எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும்! மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும்..நாம் எதை தேடுகிறோமோ அதுவே கிடைக்கும்.நாம் எதை நினைக்கிறோமோ அதுவே நடக்கும்...எனவே, நல்லதையே தேடுவோம்... நல்லதையே சிந்திப்போம்...
- 63
பிக்பாஸ் சீசன் 6ல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்த விக்ரமனுக்கு பார்வையாளர்களின் நீடித்த ஆதரவு கிடைத்ததால், அவர் வெற்றி பெறுவார் என பலரும் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக அசீம் டைட்டிலை கைப்பற்றினார்.விக்ரமன் தனது நீண்டநாள் காதலியான ப்ரீத்தி கரிகாலனை, சென்னையில் நேற்று திருமணம் செய்தார். ப்ரீத்தி என்பவர் இயக்குநர் பார்த்திபனின் உதவியாளராக ‘கோடிட்ட இடங்களை நிரப்பவும், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் போன்ற படங்களில் அவருடன் பணியாற்றி வருகிறார்.விக்ரமன் மற்றும் ப்ரீத்தி கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினர் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது. புகைப்படங்கள் விக்ரமனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
- 107
உலகம் முழுவதும் பல நிறுவனங்களில் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் Work From Home நடைமுறையில் உள்ளது. பணியாளர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்ப்பதால் அலுவலக பராமரிப்பு உள்ளிட்ட செலவினங்கள் குறைவதால் பல நிறுவனங்கள் இந்த வசதியை ஆதரிக்கின்றன.ஆனால் இவ்வாறு வீட்டிலிருந்தே பணி செய்பவர்களின் மனநிலை, அலுவலகம் சென்று பணிபுரிபவர்களின் மனநிலையை விட மோசமடைந்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவை சேர்ந்த சேப்பியன் லேப்ஸ் ஆய்வு நிறுவனம் 65 நாடுகளை சேர்ந்த 54 ஆயிரம் ஊழியர்களிடையே ஆய்வுகளை மேற்கொண்டது. வீடுகளில் இருந்து பணிபுரிவதால் சக ஊழியர்களோடு உறவு நிலை மேம்படாமல் இருப்பது, தனிமையில் இருப்பது, வீட்டிலிருந்து பணி செய்வதால் வேலை நேரத்தை தாண்டி பணி செய்ய வேண்டிய நிலை ஏற்படுவது போன்ற பல்வேறு காரணங்களால் ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வீட்டிலிருந்து வேலை செய்பவர்களை விட அலுவலக பணியாளர்களின் மன ஆரோக்கியம் மேம்பட்டிருப்பதாகவும், அதற்கு காரணம் சக ஊழியர்களுடனான நேரடி தொடர்பு மற்றும் தனிமையில் இருந்து விடுபட்டிருத்தல் ஆகியவையே என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
- 108
தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த பழனிசாமி-வக்தசலா தம்பதியருக்கு ஏழு வயது மகன் இருந்தார். சமீபத்தில், வைரஸ் காய்ச்சல் காரணமாக மகன் பலியான நிலையில், அவரது மறைவுக்குப் பின்னர் பெற்றோர் மன உளைச்சலில் இருந்தனர். கோவையில் ஒரு ஹோட்டலில் ரூம் புக் செய்து, அந்த ரூமில் விஷம் குடித்து பழனிசாமி-வக்தசலா தம்பதி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிசாமி-வக்தசலா தற்கொலை குறித்து அவரது சகோதரர் முருகனுடன் பேசியபோது, பழனிசாமிக்கு ஏழு வயது மகன் இருந்ததாகவும், வைரஸ் காய்ச்சலால் மகன் இறந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
- 111
அரசியலில் களமிறங்கியுள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக மாநாட்டை நடத்தி முடித்தார். விஜய்யின் அரசியல் வருகைக்கு ஆதரவு தெரிவித்து வந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அதன்பின்னர் விஜய்யின் கொள்கை வேறு, தங்கள் கொள்கை வேறு என அறிவித்தார்.கூட்டம் ஒன்றில் பேசியபோது விஜய்யையும், தவெக கட்சியையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. சீமானை கண்டித்து மதுரை வடக்கு மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதில் சீமானை அரசியலின் செல்லாக்காசு என குறிப்பிட்டு விமர்சித்துள்ள அவர்கள் விஜய்யிடம் சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.2026 சட்டமன்ற தேர்தல் உதயநிதி மற்றும் விஜய் என்று இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சீமான் மற்றும் விஜய் மோதல் நடந்து வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 112
இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தெலுங்கர்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி விளக்கம் அளித்த நடிகை கஸ்தூரி, தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவறாக பேசவில்லை என்றும், அவர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றுதான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.தனியார் செய்தி தொலைக்காட்சியில் நடந்த விவாதம் ஒன்றில் பேசிய அவர், இடஒதுக்கீட்டின் மூலம் அரசு பணிகளில் வந்தவர்கள் லஞ்சம் வாங்கி நாட்டை கெடுத்துவிட்டதாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் அவ்வாறு தவறாக சித்தரிப்பதை ஏற்க முடியாது என விவாத நெறியாளர் மறுத்ததால், நடிகை கஸ்தூரி விவாத நிகழ்ச்சி முடியும் முன்னரே அங்கிருந்து புறப்பட்டார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், கஸ்தூரியின் இந்த கருத்திற்கு கடும் கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
- 114
அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும், இந்நாள் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இன்று அதிபர் தேர்தல் தொடங்கி நடந்து வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள 7 மாகாணங்கள்தான் வெற்றியை தீர்மானிப்பவையாக உள்ளன. அமெரிக்க நாட்டிற்கு ஹவாய், அலாஸ்கா உள்பட மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இதில் பெரும்பாலான மாகாணங்களில் காலம் காலமாகவே குடியரசு கட்சிக்கோ அல்லது ஜனநாயக கட்சிக்கோ அதிக வாக்குகள் கிடைப்பது வழக்கம். அவை தவிர்த்து 7 மாகாணங்கள் ஸ்விங் ஸ்டேட்ஸ் எனப்படுகின்றன.இந்த மாகாணங்களில் எப்போது எந்த கட்சி வெல்லும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அதனால் பொதுவாகவே இங்கு போட்டிகள் கடுமையாக இருக்கும். ஸ்விங் ஸ்டேட்ஸ்களான அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்ச்ன் ஆகிய மாகாணங்களின் வெற்றி நிலவரமே அதிபரை தேர்வு செய்வதில் முக்கிய திருப்பு முனையாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ட்ரம்ப் அதிபராக இருந்த காலத்திலேயே மெக்ஸிகர்களில் சட்டவிரோத உள்நுழைவை கடுமையாக எதிர்த்தார். மெக்ஸிகர்கள் உள்நுழைவால் அரிசோனா உள்ளிட்ட எல்லையோர பிராந்தியங்களில் உள்ள அதிருப்தியை ட்ரம்ப் தனக்கு சாதகமான வாக்குகளாக மாற்றிக் கொள்ள இயலும். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின்படி, மேற்குறிப்பிட்ட ஸ்விங் ஸ்டேட்ஸ்களில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.
- 117
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த 21 வயது ஜூனிபர் பிரைசன் என்ற பெண், தனக்கு பிறக்க போகும் ஆண் குழந்தையை தத்தெடுக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என நீதிமன்ற ஆவணங்களின்படி பதிவு செய்திருந்தார். இது குறித்து அவர் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், குழந்தையை கொடுப்பதற்காக அதிக பணம் கொடுக்க வேண்டும் என பேரம் பேசியதாகவும் தெரிகிறது. ஒரு சில தம்பதிகள் பணம் கேட்டவுடன் பின் வாங்கியதாக கூறப்படும் நிலையில், குழந்தையை விற்று கிடைக்கும் பணத்தில் புதிய கார் வாங்க அவர் திட்டமிட்டுள்ளார்.வில்லியம்சன் என்பவர் அவருடைய குழந்தையை வாங்கியதாக பேஸ்புக்கில் பகிர்ந்ததால், பலரும் பேஸ்புக் மூலம் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாதுகாப்பு சேவை மையத்துக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், குழந்தையை விற்பனை செய்த பிரைசன் கைது செய்யப்பட்டார்.
- 118
ஷாருக்கானுக்கு கடந்த சில ஆண்டுகளாக அவர் நடித்த எல்லா படங்களும் ப்ளாப் ஆகின. இதையடுத்து ஒரு நீண்ட பிரேக் எடுத்துக்கொண்டு இப்போது மீண்டும் ஹிட் பாதைக்கு திரும்பியுள்ளார். அடுத்த ஆண்டில் கிங் என்ற படம் ரிலீஸாகவுள்ளது.கடந்த 2017 ஆம் ஆண்டு சிகரெட் பழக்கம் குறித்து பேசிய ஷாருக்கான் தான் ஒரு நாளில் 100 சிகரெட் வரைப் புகைப்பதாகக் கூறியிருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் அவர் கிரிக்கெட் மைதானத்திலேயே சிகரெட் பிடித்து சர்ச்சையில் சிக்கினார்.தன்னுடைய 59 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை சந்தித்த ஷாருக்கான் ஒரு இனிய செய்தியாக “நான் புகைப்பிடிப்பதை நிறுத்தி விட்டேன். அதை நிறுத்திய பிறகு மூச்சுத் திணறல் பிரச்சனை நின்றுவிடுமென நினைத்தேன். ஆனாலும் இன்னும் அந்த உணர்வு உள்ளது. கடவுள் ஆசியால் அதுவும் விரைவில் சரியாகிவிடும் என நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.
- 117
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2024 ஆம் ஆண்டில் நடத்தப்படவுள்ள இலக்கிய விழாவில் "இளம் கலைஞர்" விருதுக்கு ஊடகவியலாளர் தங்கவேல் சுமன் (எஸ்.ரி.சுமன்) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இந்த மாதம் இறுதி பகுதியில் திருகோணமலையில் குறித்த விழா நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தங்கவேல் சுமன் சிறு வயது முதல் தற்போது வரை கூத்துக்கலையில் சிறப்பாக ஈடுபட்டுவருகின்றதன் அடிப்படையில் இளம் கலைஞர் விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட விளாவட்டவான் கிராமத்தை சொந்த இடமாக கொண்ட தங்கவேல் சுமன் யாழ்ப்பாணத்தில் தொலைக்காட் ஒன்றில் ஊடகவியலாளராக தற்போது பணிபுரிகின்றமை குறிப்பிடத்தக்கது000
- 301
ஹொங்கொங் சிக்சர்ஸ் எனப்படும் 6 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது. ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-174 மூலம் இந்தியாவின் பெங்களூரிலிருந்து இன்று காலை 05:25 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி இடம்பெற்ற குறித்த தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.000
- 369
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்புக்காக 186.5 மில்லியன் பேர் தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் இதுவரை 78 மில்லியன் பேர் வாக்களித்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.000
- 381
நிகழ்நிலை முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தமாத இறுதி வரை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த முறையின் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரத் தேவையின் காரணமாக நபர் ஒருவர் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பாராயின், அவர் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பதில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.000
- 361
அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார். கம்பஹா - கெப்பெட்டிபொல தேசிய பாடசாலையில் இடம்பெற்ற குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ சீருடையில், கடந்த வருடம் நூற்றுக்கு 70 வீதத்தையும் இந்த வருடம் 80 வீதத்தையும் சீனா நன்கொடையாக வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான 100 வீத சீருடைகளை வழங்குவதற்கு தமது அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்துள்ளார்.000
- 365
அவுஸ்திரேலிய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக அதன் தலைவர் மொஹமட் றிஸ்வான் அதிகூடுதலாக 44 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார். பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி 33.3 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஜொஸ் இங்லிஸ் 49 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.000
- 380
பங்களாதேஷ் (Bangladesh) கிரிக்கெட் அணியின் அனைத்துத்துறை ஆட்ட வீரர் சகிப் அல் ஹசனின் (Shakib al Hasan) பந்து வீச்சு முறை குறித்து ஆய்வு செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.இங்கிலாந்தின் கவுண்டி செம்பியன்சிப்பில் போட்டி தொடரில் சர்ரே அணியுடனான ஆட்டத்தின்போது, அவருடைய பந்து வீச்சு முறை குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.நடுவர்களால் இந்த சந்தேகம் எழுப்பப்பட்டதை அடுத்து, அவரது பந்துவீச்சு நடவடிக்கையை பகுப்பாய்வு செய்யுமாறு இங்கிலாந்து கிரிக்கட் சபை கோரிக்கை விடுத்துள்ளது.37 வயதான பங்களாதேஷ் வீரர், இந்த கவுண்டி பருவத்தில் இதுவரை 11 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.இந்தநிலையில் அவர், அடுத்து வரும் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை என்றாலும், அங்கீகரிக்கப்பட்ட வசதியில் மேலும் சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.இதன்படி பகுப்பாய்வு செயற்பாடுகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது000
- 377
வெளிமாவட்டத்தைச் சேர்ந்த பெண் யாகசர்கள், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் மதுபோதையில் நடமாடுகின்றனர் என்றும், அவர்களால் சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியில் இரவு வேளையில் கடைகளுக்கு முன்னால் ஏராளமான பெண் யாசகர்கள் உறங்கும் நிலையில், அவர்களில் பலர் மதுபோதைக்கு அடிமையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், தமது பிள்ளைகளைப் பயன்படுத்தியும் துன்புறுத்தியும் யாசகம் எடுத்துவிட்டு அந்தப் பணத்தை அடாத்தாகப் பறித்து மதுபானத்தைக் கொள்வனவு செய்து பருகுகின்றனர் என்றும் பொலிஸாரிடம் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், அவர்களைக் கைதுசெய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.இந்த யாசகர்களைக் கட்டுப்படுத்த யாழ்ப்பாணம் மாநகர சபை முறையான நடவடிக்கைகள் எதையும் எடுக்காமை தொடர்பில் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். 000
- 378
பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் தீர்மானிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்ணல் நளின் ஹேரத் தெரிவித்தார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டையில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டின்போது, வடக்கிலுள்ள முகாம்களை அகற்றுமாறு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதா?' என கேள்வி எழுப்பப்பட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,முகாம்களை அகற்றுவதாயின் அதற்கென வழிமுறையொன்று காணப்படுகிறது. அதற்கமைய முதலில் அச்சுறுத்தல் மதிப்பீடொன்று மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அச்சுறுத்தல் மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இதன்போது அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.இவ்வாறு உயர் பாதுகாப்பு வலயத்தின் கீழ் காணப்பட்ட யாழ்ப்பாணம் - பலாலி வீதியில் வசாவிளான் மத்திய கல்லூரியிலிருந்து அச்சுவேலி - தோலகட்டி சந்தி வரையிலான வீதி சுமார் 3 தசாப்தங்களின் பின்னர் மக்கள் போக்குவரத்துக்காக கடந்த முதலாம் திகதிமுதல் திறக்கப்பட்டது. பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்த மதிப்பீட்டின் பின்னரே அந்த வீதியைத் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.அந்த வகையிலேயே முகாம்களை நீக்குவதற்கான நடவடிக்கைகளும் முறையான வழிமுறையைப் பின்பற்றி எடுக்கப்படும். பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் மிகுந்த கரிசனையுடன் முப்படையும் பொலிஸாரும் செயற்பட்டு வருகின்றனர் என்றார்.
- 367
கனடாவில் உள்ள இந்து கோயில் ஒன்றின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து இந்திய பிரதமர் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகள் அந்த கோயிலுக்குள் இருந்த போதே இந்தத் தாக்குதல் நடந்துள்ளமை குறித்து பிரதமர் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே இருந்த நல்லுறவு கடந்த சில மாதங்களில் மிக மோசமான நிலையில் உள்ளது.கனடாவில் குடியுரிமைப் பெற்ற காலிஸ்தான் உறுப்பினர் ஹர்தீப்சிங் கொலையில் இந்திய அரசுக்கு தொடர்பு இருப்பதாகக் கனடா குற்றஞ்சாட்டியதே இந்த முறுகலுக்கான காரணமாகும்.எனினும், இந்திய மத்திய அரசு இந்த குற்றச்சாட்டைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தநிலையில், இரண்டு தரப்பும், இராஜதந்திரிகளை திருப்பியனுப்பும் நடவடிக்கைகளையும் அண்மையில் முன்னெடுத்தன.இந்தச் சூழலில் கடந்த வாரம், ஒன்ராறியோவின் பிராம்ப்டன் பகுதியில் உள்ள கோயிலில் இந்திய உயர்ஸ்தானிகரகம் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.இதன்போது, அந்த கோயில் நுழைவாயில் அடையாளம் காலிஸ்தானிய ஆதரவாளர்களால் தேசப்படுத்தப்பட்டது.இது குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள பிரதமர் மோடி, கனடாவில் இந்துக் கோயில்கள் மீது வேண்டுமென்றே திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.அத்துடன் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.00
- 397
பெரிய வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல பகுதியில் ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபா வரையில் அதிகரித்துள்ளதாகச் சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெரிய வெங்காயத்திற்கான விசேட பண்டவரி அண்மையில் 20 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டிருந்தது. அதன்படி, 10 ரூபாவாக காணப்பட்ட பெரிய வெங்காயத்திற்கான இறக்குமதி வரி 30 வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. இந்தநிலையில், கேள்விக்கு ஏற்ற வகையில் பெரிய வெங்காயத்தின் கையிருப்பு சந்தையில் இல்லாததன் காரணமாக விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது
- 368
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 19ஆம் தேதி மேஷம் -ராசி: எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். தடையாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திடீர் இடமாற்றங்கள் நேரிடும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் ரிஷபம் ராசி: எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். எதிர்மறை கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் மனதளவில் சஞ்சலம் ஏற்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை மிதுனம் -ராசி: குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பயணங்களால் ஆதாயமும், அறிமுகமும் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் கடகம் -ராசி: மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். எதிர் பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரங்களில் முன்னேற்றம் உண்டாகும். பயம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் சிம்மம் -ராசி:பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் விலகும். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். திடீர் பயணங்களின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னி -ராசி: வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கல்விப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரம் நிமித்தமான உதவிகள் சாதகமாக அமையும். பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு துலாம் -ராசி: புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் நினைத்த பணிகளை செயல் வடிவில் மாற்றுவீர்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் ஏற்படும். சோதனை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் விருச்சிகம்- ராசி: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும், லாபமும் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் தனுசு -ராசி: நினைத்த பணிகள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். அரசு செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். தற்பெருமையான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். உணர்ச்சி விவேகம் இன்றி பொறுமையுடன் இருக்கவும். வாடிக்கையாளர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் மகரம் -ராசி:உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு பணிகளில் கவனம் வேண்டும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். ஆராய்ச்சி நிமித்தமான பயணங்கள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் போட்டிகளை சமாளிப்பீர்கள். மனதில் பணி மாற்றம் நிமித்தமான சிந்தனைகள் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். சிரமம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கும்பம் –ராசி:சகோதரர் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். புதிய நண்பர்களால் உற்சாகம் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். வியாபாரப் பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உதவிகள் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மீனம் -ராசி: உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆதரவு மேம்படும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயப் பணிகளில் சில நுட்பங்களை கற்பீர்கள். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். உழைப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 481
ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 5.11.2024சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 10.29 வரை சதுர்த்தி. பிறகு பஞ்சமி.இன்று காலை 09.06 வரை கேட்டை. பின்னர் மூலம். பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 478