Ads

சனிப் பெயர்ச்சி 2020

சனிப் பெயர்ச்சி 2020: உங்கள் ராசிக்கு நடக்கப்போகும் மாற்றங்கள் 

0 0 0 0 0 0
 • 848
 • 130
 • 146
 • 132
 • 148
 • 133
 • 139
 • 131
 • 139
 • 143
 • 165
 • 120
Comments (0)
Author
 ·   · 13 albums
 •  · 11 friends
 •  · 11 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 5
 • 7
 • 6
 • 6
 • 8
 • 9
 • 10
 • 9
 • 7
 • 11
 • 9
 • 9
 • 17
 • 12
 • 14
 • 15
 • 13
 • 11
 • 13
 • 17
 • 16
 • 14
 • 16
 • 18
 • 19
 • 18
 • 17
 • 15
 • 19
 • 79
 • 89
 • 84
Added news 
நயன்தாரா தற்போது வெள்ளை நிற சேலையில் கேரள மணப்பெண் போன்று அலங்கரித்து போஸ் கொடுத்திருக்கும் போட்டோக்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, அவரது ரசிகர்களிடையே ‘ரகசிய திருமணமா இருக்குமா?’ என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
 • 53
Added news 
பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர், அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார். அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு.அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார். பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க கவர்ச்சியான புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் வெறும் பனியனில் முன்னழகு வளைவு தெரியும்படி செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
 • 54
Added news 
முன்னாள் பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதினார். அதில், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முக்கிய விசயம் தடுப்பூசி போடும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். மக்கள் தொகையில் எத்தனை சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம் என்பதில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கான உரிமம் பெற்ற நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்றும் அவர் மத்திய அரசிடம் கேட்டு கொண்டார். இந்த நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
 • 53
Added news 
கட்டாய தனிமைப்படுத்தலுக்கு இணங்காத பயணிகளுக்கு அபாரதம் விதிக்கப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்படி கட்டுப்பாட்டை மீறுவோருக்கு 1,500 யூரோக்கள் வரையான அபராதம் விதிக்கப்படுமென அரச ஊடக பேச்சாளர் கேப்ரியல் அட்டல் தெரிவித்துள்ளார்.இந்த சட்டத்தை இரண்டாவது தடவை மீறுவோர் 3,000 யூரோக்கள் அபராதம் செலுத்த நேரிடும் என அவர் தெரிவித்தார்.பிரேஸில், அர்ஜெண்டினா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், பயணிகள் 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகவேண்டும் எனவும், அதன் பின்னரே வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • 54
Added news 
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளது.மேலும் 204 பேர் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 97,000 ஆக உயர்ந்துள்ளது.தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளவர்களில் 3 ஆயிரத்து 269 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் அதேவேளை 618 பேர் உயிரிழந்துள்ளனர்.
 • 55
Added news 
ஒன்றாரியோ மாகாணத்தின் தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க முதல்வர் டக் ஃபோர்ட் வெளிநாட்டு உதவியை நாடியுள்ளார்.ஒன்றாரியோவிற்கு கொவிட்-19 தடுப்பூசி அதிக அளவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஃபோர்ட் உலகெங்கிலும் உள்ள தூதரகங்களை அணுகத் தொடங்கியுள்ளதாக மாகாண முதல்வரின் செய்தித் தொடர்பாளர் இவானா யெலிச் உறுதிப்படுத்தினார்.இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அஸ்ட்ராஸெனெகாவின் வயது வரம்பைக் குறைப்பது குறித்த கூட்டாட்சி முடிவுக்காக நாம் காத்திருக்கும்போது, மற்றும் மொடர்னா ஏற்றுமதிகளில் சமீபத்திய வெட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, நம் பன்னாட்டு நட்பு நாடுகளிடமிருந்து ஒன்றாரியோவிற்கு அதிகமான தடுப்பூசி விநியோகத்தை முயற்சிக்க மாகாண முதல்வர் தூதரகங்களை அணுகத் தொடங்கியுள்ளார்’ என கூறினார்.
 • 55
Added news 
கனடாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ஏழாயிரத்து 591பேர் பாதிக்கப்பட்டதோடு 32பேர் உயிரிழந்துள்ளனர்.கனடாவில், இதுவரை மொத்தமாக 11இலட்சத்து 21ஆயிரத்து 498பேர் பெருந் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 23ஆயிரத்து 623பேர் உயிரிழந்துள்ளனர்.87ஆயிரத்து 925பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 1,167பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறார்கள்.இதுவரை 10 இலட்சத்து ஒன்பதாயிரத்து 950பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 • 57
Added news 
நமது நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் எதிர்க்கின்றோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.துறைமுக நகர திட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த திட்டத்தின் ஊடாக நிதி பிரிவினைவாதம், பொருளாதார பயங்கரவாதம் மற்றும் பொருளாதார பிரிவினைவாதத்தை செயற்படுத்தவே தற்போதைய அரசாங்கம் முயன்று வருகின்றது.மேலும் எங்களது 22 மில்லியன் மக்களை மூன்றாம் வகுப்பு குடிமக்களாகக் கருதுவதற்கும், வெளிநாட்டு குடிமக்களுக்கு சாதகமாக இருப்பதற்கும் ஏற்றவகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.இவ்வாறு நமது தாய்நாட்டை அடிமைத்தனமாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் துறைமுக நகர செயல்முறையை நாங்கள் நிராகரிக்கிறோம்.நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் உண்மைகளை முன்வைப்போம், இந்த இழிவான நடைமுறையை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம்” என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
 • 56
Added a post 
கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும், அதற்கு காரணங்கள் இருக்கின்றன.வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம் வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுக்கள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது.பொதுவாக ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு.அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் கிணற்றின் வடிவம் கலையாமல் இருக்க செய்வது கிணற்றை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள்.கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது…..!!
 • 63
Added a post 
இதய நோய்களை தீர்க்கும் கோவில்.......
 • 63
Added news 
சிறிலங்காவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி முதல் அனைத்து ஆண்டுகளுக்குமான பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பில் தற்போது இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பல்கலைகழகங்களை ஆரம்பிப்பதாகவும், விடுதிகளை ஆரம்பிப்பதில் சிக்கல் இருக்கும் காரணத்தினால் முதலில் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களை மாத்திரம் விடுதிகளுக்குள் உள்வாங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 • 64
Added news 
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (19) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது.மறைந்த கட்சி தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் நினைவுகூரப்பட்டதை தொடர்ந்து, எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி நடைபெற உள்ள தொழிலாளர் தின கொண்டாட்டம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக மே தின ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்காது சுகாதார வழிகாட்டல்களுக்கமைய மே தின பேரணிகளை மாத்திரம் நடத்துவது தொடர்பில் இதன்போது கட்சி தலைவர்களின் கவனம் செலுத்தப்பட்டமை விசேட அம்சமாகும்.இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ, அமைச்சர்களான ஜீ.எல். பீரிஸ், தினேஷ் குணவர்தன உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
 • 64
Added a post 
திருவண்ணாமலை.....
 • 64
Added a post 
இந்திரன் மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாக வளர்த்து வந்தாள்..ஒருநாள் அந்த கிளி நோய் வாய்ப்பட்டு விட்டது..அதை பரிசோதித்த மருத்துவர் இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார். உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,இந்த கிளியை எப்படியாவது காப்பாற்றுங்கள். கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.. இந்திரன், கவலைப்படாதே!! இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதி விடுவோம் என்று சொல்லிவிட்டுபிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,.இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை..உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்..நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு மஹாவிஷ்ணுவிடம் சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா..மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.  ஆனால் உன் கிளி இறக்குந் தறுவாயிலி ருக்கிறது.அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.வாருங்கள் நானும் உங்களுடன் வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு. விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.உயிர்களையெடுக்கும் பொறுப்பை நான் எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.வாருங்கள் ....நாம் அனைவரும் சென்று எமதர்மனிடம் கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.விஷயம் முழுவதையும் கேட்ட அவர் , ஒவ்வொரு உயிரையும் எந்த நேரத்தில்? ,எந்த சூழ்நிலையில்?, என்ன கார‌ணத்தால்? எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.வாருங்கள்... அந்த அறைக்குச்சென்று கிளியின் ஆயுள் ஓலை எது? என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்சென்றார்.இப்படியாக இந்திரன்,பிரம்மா,விஷ்ணு,  சிவன் , எமதர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறதுஉடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர். அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....அதில்,,,இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோஅப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது..இதுதான் விதி!!விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!. யாருக்கு விதி?!!எங்கே? எப்படி முடியும்!!!என்பது எழுதினவனுக்கே தெரியாது என்பது தான் உண்மை?! வாழும் காலம் நிரந்தரம் இல்லை? வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக சிநேகமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!
 • 64
Added a post 
மகாபாரதப் போர் முடிந்த பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காந்தாரி கொடுத்த சாபத்தின் விளைவாக யாதவர்களுக்குள் சண்டை நடந்து யாதவ குலம் முற்றிலும் அழிந்துபோனது. கிருஷ்ணரால் அதைத் தடுக்க முடியவில்லை. தனது அவதாரம் முடிவுக்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதை அவர் உணர்ந்தார். அடர்ந்த புதர்கள் நிறைந்த ஒரு மரத்தடியில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக்கொண்டிருந்தார்.அப்போது ஒரு வேடன் எய்த அம்பு அவர் பாதத்தில் நுழைந்து உயிரைக் குடித்தது.யாதவர்களும் கிருஷ்ணனும் இறந்த செய்தி ஹஸ்தினாபுரத்தை எட்டியது. தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை தருமன் உணர்ந்தான். உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்று நினைத்தான். அவரது தம்பிகளும் திரௌபதியும் இதை ஒப்புக்கொண்டார்கள். எல்லா உறவினர்களையும் இழந்த அவர்களுக்கு இனியும் உயிர் வாழப் பிடிக்கவில்லை. அதுவும் தங்களுக்கு ஆருயிர் நண்பனாக இருந்த கிருஷ்ணனின் மறைவு அவர்களை மிகவும் பாதித்துவிட்டது.அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மகன் பரீட்சித்துக்குப் பட்டம் சூட்டிவிட்டுப் பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் நாட்டை விட்டுக் கிளம்பினார்கள். வடக்கில் இமயமலைக்கு அப்பால் இருக்கும் மேரு மலையை நோக்கிச் சென்றார்கள். உலக இன்பங்களையும் ஆசைகளையும் பந்த பாசங்களையும் அறவே துறந்து மேருமலையைக் கடப்பவர்கள் மனித உடலுடன் சொர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சான்றோர்கள் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய பயணத்துக்குத் தேவையான மனநிலையுடன் பாண்டவர்கள் துறவறம் பூண்டார்கள். மரவுரி தரித்துக்கொண்டு புறப்பட்டார்கள். அரச பதவியையும் அரண்மனைச் சுகங்களையும் துறந்து வாழ்க்கையின் மீதான ஆசையை விடுத்து, மோட்சம் நாடிச் சென்றார்கள்.லட்சக்கணக்கான வீரர்களின் இறுதி யாத்திரையைத் தீர்மானித்த அந்த வீரர்கள் தங்களது இறுதி யாத்திரையைத் தாங்களே முடிவுசெய்தபடி கிளம்பினார்கள். அவர்களுடன் தருமபுத்திரன் வளர்த்துவந்த நாயும் உடன் சென்றது.பின்தொடர்ந்த நாய்மேரு மலைக்கு யாத்திரை செல்பவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நியதி. தருமன், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் ஒருவர் பின் ஒருவராகச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து நாயும் சென்றது.பாண்டவர்கள் பல நாட்கள் பயணம்செய்து இமயமலையை அடைந்தார்கள். அதைக் கடந்து சென்று மேரு மலையைத் தரிசித்தனர். மேரு மலையில் பயணம் சென்றபோது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பீமன், “திரௌபதி ஏன் வீழ்ந்துவிட்டாள்?” எனத் தன் அண்ணனிடம் கேட்டான். தருமன் திரும்பிப் பார்க்காமல் பதில் சொன்னான்: “ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் கூடுதல் அன்பைக் காட்டினாள். அதனால்தான் அவளால் இந்தப் பயணத்தில் தாக்குப்பிடிக்க முடியவில்லை.”சிறிது நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான் “சகாதேவன் ஏன் விழுந்தான்? என்று கேட்டான் பீமன். “தன்னிடம் உள்ள சாஸ்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற கர்வம்தான் காரணம்” என்றபடியே தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டிருந்தான்.அர்ச்சுனன் வீழ்ந்தான்சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான். பீமன் மீண்டும் காரணம் கேட்டான். தன்னை மிஞ்சிய அழகன் யாருமில்லை என்ற கர்வம்தான் காரணம் என்றான் தருமன். இப்போதும் திரும்பிப் பார்க்கவில்லை.அடுத்து அர்ச்சுனன் விழுந்தான். “தனது வில்லாண்மை குறித்த கர்வம்தான் அவனை இந்தப் பயணத்தில் வீழ்த்தியது” என்றவாறு தருமன் போய்க்கொண்டிருந்தான்.தனக்கும் தலை சுற்றுவதை பீமன் உணர்ந்தான். தள்ளாடி விழும் சமயத்தில் “என்னால் ஏன் தொடர்ந்து வர முடியவில்லை?” என்று கேட்டான். “உன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் கர்வம்” என்று தருமன் சொல்லி முடிப்பதற்குள் பீமன் தன் கடைசி மூச்சை விட்டான்.ஆசாபாசங்களையும் உலகியல் உணர்ச்சிகளையும் அறவே துறந்த தருமன் திரும்பிப் பார்க்காமல் போய்க்கொண்டே இருந்தான். நாய் மட்டும் அவனைத் தொடர்ந்தது.மேரு மலையின் உச்சியை அடைந்தான். அப்போது அவரை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்தான். தருமன் விமானத்தில் ஏற முற்பட்டபோது அவனுடன் வந்த நாயும் ஏற முயன்றது. “நாய்க்குச் சொர்க்கத்தில் இடமில்லை” என்று கூறித் தடுத்தான் இந்திரன்.விமானத்தினுள் வைத்த காலைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டான் தருமன். “என்னை நம்பி இத்தனை தூரம் வந்த நாயை விட்டுவிட்டு நான் மட்டும் எப்படி வர முடியும்? நான் இங்கேயே இருந்துவிடுகிறேன்” என்றான்.அப்போது நாய் மறைந்தது. அங்கே தரும தேவன் நின்றார். “சொர்க்கமே கிடைக்கிறது என்றாலும் உன்னை நம்பி வந்த நாயைக்கூடக் கைவிடாத உன் குணத்தைப் பாராட்டுகிறேன். எத்தகைய சூழ்நிலையிலும் தரும நெறியிலிருந்து நீ பிறழவில்லை. இது நான் உனக்கு வைத்த சோதனை. முன்பு யட்சன் வடிவில் வந்து உன்னைச் சோதித்தேன். இப்போது நாய் வடிவில் வந்து சோதித்தேன். இந்தச் சோதனைகளில் நீ தேறிவிட்டாய். மகிழ்ச்சியோடு சொர்க்கத்துக்குச் செல்” என்று கூறி தரும தேவன் மறைந்தார். 
 • 65
காலை வணக்கம்
 • 71
Added a post 
சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.ஸ்தல சிறப்பு:🌼மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில்உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவிமலை' என்கின்றனர்.🌼சந்தனமகாலிங்கம் கோவில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.🌼ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.🌼முதல் பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது. 🌼சுந்தர மகாலிங்க சுவாமிக்கு அமாவாசை நாட்களில் மதியம் ஒரு மணி அளவில் அபிஷேகம் துவங்கும். ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.மலை பயணம்:சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.இரட்டை லிங்கம்:ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.பிலாவடி கருப்பு சுவாமி:வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.பெரிய மகாலிங்கம்:நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.தவசிப்பாறை:மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.சுந்தரமூர்த்தி :கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.பார்வதி பூஜித்த லிங்கம் :  சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும் இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.லிங்க வடிவ அம்பிகை:சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.சதுரகிரியில் தீர்த்தங்கள்சந்திர தீர்த்தம்சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.கெளண்டின்னிய தீர்த்தம்சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.சந்தன மகாலிங்கம் தீர்த்தம்இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும். இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்க்க வல்லமை கொண்டது.இம்மலையின் மூலிகை இரகசியம்:அபூர்வ மூலிகைகள் :இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது. விபரங்கள் அறிந்தவர்களின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும். சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும்.இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்மலையின் சிறப்பு :சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.திருக்கோவில் அமைவிடம்:மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
 • 71
Added a post 
சிவனுக்கு இரு மனைவி என்று யாவரும் கூறுவர். சிவனுக்கு பார்வதி தேவி மட்டுமே மனைவி. அப்படியானால் கங்கா தேவியை ஏன் சிவபெருமான் தலையில்  வைத்திருக்கிறார் என நமக்கெல்லாம் கேள்வி எழும். அதை பற்றி தெரிந்துக் கொள்வோம். அன்றைய காலத்தில் கங்கையானது பூமியில் ஓடாது, ஆகாய கங்கையாக ஓடி கொண்டிருந தது. அப்போது பகீரதன் என்ற அரசன் தன் மூதாதையர்களின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்பதற்காக அதன் வழி தேடி முனிவர்களை  எல்லாம் ஒரு உபாதை கூறும்படி கேட்டான். முக்காலம் அறிந்த முனிவர் ஒருவர், ஆகாய கங்கையை பூமிக்கு கொண்டு வந்து அவர்களின் அஸ்தியை அதனில் கரைத்தால் அவர்கள் முக்தி அடைவார்கள் என்று கூறினார். ஆகையால், பகீரதன் கங்கையை பூமிக்கு அழைக்க கங்கா மாதாவை நோக்கி கடுந்தவம் புரிந்தான்.பகீரதனின் கடுந்தவத்தை மெச்சி கங்கா மாதா எழுந்தருளினாள். “வேண்டும் வரம் கேள் பகீரதா” என்றாள். “தாயே, நீ அறியாதது எதுவும் இல்லை. என் மூதாதையரின் ஆத்மா சாந்தி அடைய அவர்களின் அஸ்தியை நான் கங்கையில் கரைக்க வேண்டும் என்பது விதி. ஆகாய கங்கையாய் ஓடும் நீ இப்புவியிலும் பெருக்கெடுத்து ஓட வேண்டும். என்னோடு இனி வரும் சந்ததியினரையும் உய்விக்க வேண்டும்.””வரம் தந்தேன் பகீரதா, ஆனால் ஒரு நிபந்தனை. நான் என்னுடைய வேகத்தில் இந்த பூமியை நோக்கி வந்தேன் என்றால் இந்த பூமி என் வேகம் தாங்காது வெடித்து சிதறிவிடும். ஆகவே, என் வலிமையை தாங்க கூடிய ஒருவர் என்னை அவர் தலையில் தாங்கி இந்த பூமிக்கு தருவிக்க வேண்டும். நீ தென்னாடுடைய சிவனை நோக்கி தவம் செய். பரமனால் மட்டும் தான் என் வலிமையை தாங்க முடியும்” என்று கூறி மறைந்தாள்.பகீரதனும் சிவனை நோக்கி தவம் செய்து தான் எண்ணத்தை வேண்டி நின்றான். சிவ பெருமானும் தன் சடாமுடியை விரித்து அதில் கங்கையை இறங்க சொன்னார். சிவனின் திருமுடியை அடைந்த கங்கா, வேகம் குறைந்து திருமுடியில் இருந்து பூமிக்கு இறங்கினாள். ஆகவே தான், சிவனின் திருமுடியில் கங்கா குடியிருக்கிறாள். இந்த சம்பவத்தை முன்னிட்டு கங்கைக்கு பகீரதை என்ற பெயரும் வழங்குவதுண்டு. இனியாவது சிவனுக்கு ஒரே மனைவி என்று உரைப்போம்.
 • 72
Added a post 
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.  டெல்லி அணி 18.2 ஓவரில் 198 ரன்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. டெல்லி அணி பஞ்சாப்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
 • 89
 • 92
Added joke 
கடி ஜோக்ஸ்
 • 95
Added news 
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சுழல்பந்து வீச்சு ஜாம்பவானுமான முத்தையா முரளிதரன் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருடன் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் இருப்பதாகவும், அவரது உடல்நிலை குறித்து கூடுதல் தகவலை மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.
 • 96
Added news 
சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தைத் தொடர்ந்து வடக்கு உள்ளிட்ட மூன்று மாகாணங்களில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளர் தொகை அதிகரிக்கக்கூடும் எனப் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் எச்சரித்துள்ளது.வடக்கு மாகாணம், மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் தொற்று பரவல் வேகமடையலாம் என அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் தித்தவேல்கல கிராமத்தில் 29 கொரோனா நோயாளர்கள் கண்டறியப்பட்டதை அடுத்து அந்தக் கிராமம் நேற்று முதல் முற்றாக முடக்கப்பட்டது என அப்பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் அறிவித்துள்ளார்.இந்தக் கிராமத்தில் சுமார் 540 குடும்பங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொதுச் சுகாதார பரிசோதகர் மேலும் கூறியுள்ளார்.
 • 100
Added news 
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 14.19 கோடியைக் கடந்துள்ளது.கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 12 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 30.32 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.வைரஸ் பரவியவர்களில் 1.84 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.07 லட்சத்துக்கு மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 • 98
Added news 
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா பரவல் 1.6 சதவீதமாக இருந்தது. ஒரே மாதத்தில் 8 சதவீதம் உயர்ந்து கொரோனா பரவல் 9.6 சதவீதம் ஆனது. சென்னையை பொறுத்தமட்டில் கொரோனா பரவல் 16 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்காரணமாக கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்-அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்த 20-ம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 • 98
Added news 
கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்த நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.ஜோ பைடன் ஜனாதிபதியாக பதவியேற்றதற்கு பிறகு வெளிநாட்டு் தலைவர் ஒருவர் உடன் நடந்த முதல் நேருக்கு நேர் சந்திப்பு இதுவாகும்.‌இந்த சந்திப்பின்போது இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது குறித்தும், பிராந்திய நாடுகள் இடையிலான ஒத்துழைப்பை உறுதி செய்ய இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய குவாட் அமைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.மேலும் கொரோனா வைரஸ், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்தும், வடகொரியா முன்வைக்கும் சவால்களை எதிர்கொள்வது பற்றியும் இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சந்திப்புக்கு பிறகு ஜோ பைடன் மற்றும் யோஷிஹைட் சுகா ஆகிய இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.அப்போது ஜோ பைடன் பேசுகையில், “இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கும், உலகுக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் அடித்தளமாக எங்கள் கூட்டணி தனது பங்கை வழங்கியுள்ளது. தற்போதைய பிராந்திய நிலைமை மற்றும் கடுமையான பாதுகாப்பு சூழலின் வெளிச்சத்தில், எங்கள் கூட்டணியின் முக்கியத்துவம் புதிய உயரங்களை எட்டியுள்ளது” என்றார்.மேலும் அவர், “ஜப்பானும், அமெரிக்காவும் உறுதியான முயற்சிகள் மூலம் பார்வையை மேம்படுத்துவதற்கு முன்னிலை வகிக்கும் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். ஆசியான், ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளுக்கும், பிராந்தியங்களுக்கும் நாங்கள் ஒத்துழைப்போம்” என கூறினார்.அதனை தொடர்ந்து யோஷிஹைட் சுகா பேசுகையில், “இந்தோ-பசிபிக் மற்றும் உலகின் அமைதி மற்றும் செழிப்பில் சீனாவின் செல்வாக்கு குறித்தும் நாங்கள் தீவிர பேச்சுவார்த்தை நடத்தினோம். கிழக்கு மற்றும் தென் சீன கடல்களிலும், பிராந்தியத்திலும் மற்றவர்களை அச்சுறுத்துவதன் மூலம் நிலைமையை மாற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் எதிர்க்க நாங்கள் ஒப்புக்கொண்டோம்” என தெரிவித்தார்.மேலும் அவர், “ஒரு சுதந்திரமான, வெளிப்படையான அணுகக்கூடிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் குவாட் அமைப்பை வலுவாக்கி நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்” என்றார்.
 • 182
Added news 
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது சிலர் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் எஸ்.எம்.ஆர்னல்ட் இதனை தெரிவித்தார்."பண்டிகை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் பரவும் வகையில் சிலர் செயற்பட்டிருந்ததை நாம் கண்டறிந்துள்ளோம். இது நோய் விரைவாக பரவ வழிவகுக்கும். "என்று அவர் கூறினார்.
 • 181
Added news 
ஒரு நாடகக் கலைஞனாகத் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேல் சிறந்த நகைச்சுவை நடிகராக தன்னுடைய ஆளுமையைக் நிலை நிறுத்தி வந்தவர் நடிகர் விவேக்.தமிழ் திரைப்படத் துறையில் ‘சின்னக் கலைவாணர்’ என அழைக்கப்படும் விவேக்.  நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்கவும் வைத்தவர்.தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் திரைப்படத்துறை வரலாற்றிலேயே, நகைச்சுவை வாயிலாக சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை சொல்லுவதில் வல்லவர், ‘கலைவாணர் என்.எஸ் கிருஷ்ணன்’. அவரைப் பின்பற்றி, தான் நடித்த பெரும்பாலானப் படங்களில் லஞ்சம், மக்கள் தொகை பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை கருப்பொருளாகக் கொண்டு, சமூக சிந்தனைக் கருத்துக்களைப் பெருமளவில்   சொல்லி வந்தார். “சின்னக் கலைவாணர்” என அழைக்கப்பட்டார்.மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல் கலாமின் மிகப்பெரிய அபிமானியான விவேக், கலாம் பெயரில் ’க்ரீன் கலாம்’ என்கிற மரம் நடும் முன்னெடுப்பை, கலாமின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கினார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் புதிய நடிகர்களுடனும் நடித்துவிட்ட விவேக்கிற்கு திரைத்துறைக்கு வந்த நாளிலிருந்தே கமலுடன் சேர்ந்து நடிக்கவேண்டும் எனும் ஆசை இருந்து வந்தது. ஷங்கர் இயக்கத்தில் கமலின் நடிப்பில் ’இந்தியன் 2’ தொடங்கப்பட்டது. ‘என்னுடைய நீண்டகாலக் கனவு உலகநாயகன் கமலுடன் நடிக்க வேண்டும் என்பது. அந்தக் கனவு ‘இந்தியன் 2’ வின் மூலமாக நனவாகப் போகிறது. அவருடன் இந்தப் படத்தில் நானும் நடிக்கிறேன்’ என்று தன் நீண்ட கால கனவு குறித்து தன் சமுக்க வலைதள பக்கங்களில் தெரிவித்திருந்தார். ஆனால் அவரது ஆசை நிறைவேறவில்லை.அதுபோல் அவர் திரைப்படங்களை இயக்கவும் திட்டமிட்டு இருந்தார் அதுவும் நிறைவேறவில்லை.
 • 181
Added news 
ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 21,312- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அந்நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 22 லட்சத்து15 ஆயிரத்து 445- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 319- பேரும் இதுவரை 66 ஆயிரத்து 327- பேரும் உயிரிழந்து இருப்பதாக ஈரானின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் தற்போது உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இது முந்தைய கொரோனாவை விட 70 சதவீதம் வீரியமிக்கது என அந்நாட்டு சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். 
 • 181
Added news 
பஞ்சாப் மாநில முதல் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அம்ரீந்தர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அம்ரீந்தர் சிங் பேசியதாவது,5 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை மற்ற நாடுகளுக்கு பரிசளிப்பதில் என்ன பயன்? நமது நிலைமை என்ன? இந்தியர்களின் நிலை என்ன? முதலில் நமக்கு தடுப்பூசி வேண்டாமா? நம்மிடம் அதிகமாக தடுப்பூசி இருந்தால் அவற்றை வெளிநாடுகளுக்கு கொடுக்க வேண்டாம் என்று நான் கூறவில்லை. ஆனால், நம்மிடம் குறைவாக தடுப்பூசி இருக்கும்போது அவற்றை மற்றவர்களுக்கு நல்லெண்ண அடிப்படையில் கொடுக்கக்கூடாது முதலில் இந்தியர்களுக்கு கொடுக்க வேண்டும். முதலில் எனக்கு கொரோனா தடுப்பூசி கொடுங்கள் என்று மாநில முதல் மந்திரிகளுடனான கூட்டத்தில் பிரதமர் மோடியிடம் நான் இவ்வாறு கூறினேன்’ என்றார்.உலகின் பல நாடுகளுக்கு இந்தியா லட்சக்கணக்கான கொரோனா தடுப்பூசிகளை நல்லெண்ண அடிப்படையில் இலவசமாக வழங்கியது. ஆனால், தற்போது உள்நாட்டில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
 • 183
Added news 
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை மக்களை உலுக்கி எடுத்து வருகிறது. முதல் அலையை விட ஆக்ரோஷமாக சுழன்றடிக்கும் இந்த 2-வது அலையால் அரசும், மருத்துவத்துறையும் செய்வதறியாமல் திணறி வருகின்றன.கடந்த ஆண்டு புரட்டியெடுத்த முதல் அலையில் கூட, நாளொன்றுக்கு 1 லட்சம் பாதிப்பு என்ற சோகத்தை எட்டவில்லை. ஆனால் இந்த 2-வது அலையோ 2 லட்சத்துக்கு அதிகமான பாதிப்புகளை சமீப நாட்களாக அளித்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கூட 2 லட்சத்து 34 ஆயிரத்து 692 பேர் புதிதாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சம் ஆகும்.புதிதாக பாதிக்கப்பட்டுள்ள இவர்களையும் சேர்த்து இந்தியாவில் 1 கோடியே 45 லட்சத்து 26 ஆயிரத்து 609 பேர் இதுவரை இந்த மோசமான தொற்றுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.இந்தியாவில் தொடர்ந்து 3-வது நாளாக தினசரி பாதிப்பு 2 லட்சத்துக்கு மேல் வந்திருக்கிறது. மொத்தத்தில் கடந்த 38 நாட்களாக புதிய பாதிப்புகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது.மேற்படி 24 மணி நேரத்தில் ஏற்பட்ட புதிய பாதிப்புகளில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 63,729 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து உத்தரபிரதேசம் (27,426), டெல்லி (19,486) ஆகிய மாநிலங்கள் உள்ளன.இதுவும் அந்தந்த மாநிலங்களில் கொரோனா தோற்றத்துக்கு பிறகு மிகவும் அதிகபட்சமாகும். மேலும் சட்டசபை தேர்தல் நடந்து வரும் மேற்கு வங்காளத்திலும் இதுவரை இல்லாத அளவுக்கு 6,910 பேர் மேற்படி 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதைப்போல பல மாநிலங்கள் புதிய பாதிப்பில் தினந்தோறும் உச்சத்தை தொட்டு வருகின்றன.லட்சக்கணக்கில் அதிகரித்து வரும் புதிய நோயாளிகளால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் ஆஸ்பத்திரி வளாகங்கள் அனைத்தும் பெரும் சோகமும், பரபரப்புமாக நீடித்து வருகிறது.இது ஒருபுறம் இருக்க இந்தியாவில் மேற்படி 24 மணி நேரத்தில் 1,341 பேரின் உயிரை கொரோனா காவு கொண்டிருக்கிறது. இது இதுவரை இல்லாத அளவுக்கு அதிகம் ஆகும்.குறிப்பாக இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது கடந்த செப்டம்பர் 15-ந் தேதி ஏற்பட்டு இருந்த 1,275 மரணங்களே ஒருநாள் அதிகபட்சமாக இருந்தது. ஆனால் அதையும் தற்போதைய 2-வது அலை கடந்திருப்பது சோகத்துக்குரியது.உயிரிழந்த 1,341 பேரையும் சேர்த்து இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1¾ லட்சத்தை கடந்து விட்டது. நேற்று காலை நிலவரப்படி மொத்தம் 1,75,649 பேர் கொரோனாவால் பலியாகி இருக்கிறார்கள். இது மொத்த பாதிப்பில் 1.21 சதவீதம் ஆகும்.
 • 181
good morning...
 • 181
Added news 
இதயதிருடன் படத்தில் அறிமுகமாகி, அந்த ஒரு படத்தின் மூலம் பிரபலமானார் நடிகை காம்னா. பிறகு மச்சகாரன் படத்தில் நடித்தார், அப்புறம் ஆளையே காணோம். இவர் எங்கே போனார் என்று இவரது வருகையை எதி்பார்த்து கிடந்த ரசிகர்களுக்கு தற்போது பெரிய ஏமாற்றம், தற்போது இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ளதாம்.6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்பவரை திருமணம் செய்து, தெலுங்கு படம் ஒன்றில் மட்டும் தலையை காட்டி, பிறகு தாயானதால் நடிப்பை விட்டு ஒதுங்கிவிட்டார்.தற்போது, நீண்ட இடைவெளிக்குப் பின் கருடா என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். தற்போது சில காலங்களாகவே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர். தற்போது முன்னழகை காட்டியவாறு போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
 • 207
Added news 
நடிகர் விவேக் நேற்று, எதேச்சையாக பேசிக்கொண்டிருக்கும் மயங்கி விழுந்துள்ளார். அதன் பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என அறிவிக்கப்ட்டது. சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை 4 மணி அளவில் விவேக் திடீரென  காலமானார்.மறைந்த நடிகர் விவேக்கின் நண்பரும் சக நடிகரும் ஆன வடிவேலு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் , அந்த வீடியோவில் கண்ணீருடன் வடிவேலு பேசியிருப்பதாவது:“என் நண்பன் விவேக் இறந்தது பத்தி பேசும் போது… என்னால முடியல… துக்கம் தொண்டையை அடைக்கிது. அவன் ரொம்ப நல்லவன். சமூக சிந்தனை இருக்கிறவன். கலாம் ஐயா உடன் நல்ல நெருக்கமாக இருப்பான். மரம் நடுவது என எவ்வளவோ விஷயம் பண்ணுவான். ரொம்ப உரிமையாக என்னடா வடிவேலு… என்ன விவேக்கு என நாங்க பேசிக்குவோம். நான் பார்த்ததுல அவனை மாதிரி ஓப்பனாக பேசக் கூடிய ஆளே கிடையாது. எத்தனையோ கோடிக்கணக்கான ரசிகர்களில் அவன் எனக்கு ஒரு ரசிகன். நான் அவனுக்கு ரசிகன். அவனுக்கு இப்படியொரு மரணம் என்பது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது.அவன் இப்போ இறந்துட்டான்…என்னால் முடியல.. இந்த நேரத்தில் என்ன பேசுவதென்று தெரியல. அவனுக்கு நேரில் அஞ்சலி செலுத்த என்னால முடியல. ஏன்னா. நான் மதுரையில் என் அம்மாவோட இருக்கேன். என்னோட நெஞ்சார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவன் எங்கேயும் போகல… மக்களோடு மக்களாக நிறைந்திருக்கிறான். அவனுடைய ஆன்மா சாந்தியடைய வேண்டும்” இவ்வாறு வடிவேலு அந்த வீடியோவில் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.இந்த வீடியோவில் வடிவேலுவை பார்த்த ரசிகர்கள் அவர் உடல் இளைத்துள்ளதால் மிகவும் வருத்தப்படுகின்றனர். 
 • 207
Added news 
தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமானார் நடிகை அமைரா தஸ்தர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை.பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர், மிகவும் தாராளமாகவே கவர்ச்சிக் காட்டுவார். தனது முதுகு தேசத்தை காட்டி ரசிகர்களுக்கு முழுவதுமாய் தெரிய புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இவரது ரசிகர்கள் பட்டாளம் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகிறது. 
 • 208