Latest News

கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில், வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 1,179 பேருக்கு தட்டம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அல்பர்ட்டாவில் Calgary Stampede என்னும் விழா துவங்கியுள்ள நிலையில், தட்டம்மை பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.3 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.தட்டம்மை எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் என்பதால், Calgary Stampede போன்ற விழாக்களில் பங்கேற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளோருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. ஆகவே, சிறுபிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள் ஆகியோர் கூட்டமான இடங்களை தவிர்க்கும

மலேசியாவில் கம்பிவண்டிப் பயணம் செய்ய விரும்பிய தம்பதி ஏமாந்துபோன சம்பவம் இணையத்தில் பேசுபொலிருளாகியுள்ளது. தம்பதி 300 கிலோமீட்டர் பயணம் செய்து கம்பி வண்டிச் சேவை எடுக்கும் தலத்தைச் சென்றடைந்தவர்களுக்கு அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.ஏனெனில் ஆனால் அங்கே அப்படி ஒரு சேவையே இல்லையாம். பேராக், கெடா ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையில் கம்பிவண்டிச் சேவை இருப்பதாக ஒரு காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பொய்யான காணொளி TikTok, Facebook ஆகிய சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவி வந்ததாக கூறப்படுகின்றது.அதை நம்பி அந்த இடத்திற்குச் சென்ற தம்பதியிடம் அது செயற்கை நுண்ணறிவைக்கொண்டு தயாரிக்கப்பட்ட காணொளி என்று ஹோட்டலில் பணியாற்றிய பெண் ஒருவர் தெரிவித்தார். அதைக் கேட்ட இருவரும் அதிர்ச்சியடைந்தனர். இணையத்தில் க

“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி சட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையொப்பமிட்டுள்ளார்.“Big Beautiful Bill" என பெயரிடப்பட்டுள்ள புதிய வரி செலவு மற்றும் வரி தொடர்பான ஒரு வரிச் சட்டமாகும். இந்த புதிய வரிச் சட்டம் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுவதுடன் இதற்கு எதிராக விமர்சனங்களும் எழுந்து உள்ளன.

2025 ஆண்டிற்கான உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் வெளியாகியுள்ளதுடன், கனடா 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது. கடந்தாண்டு 1.449 புள்ளிகளுடன் 11ஆவது இடத்தில் இருந்த நிலையில், இந்தாண்டு 1.491புள்ளிகளை பெற்று 14 ஆவது இடத்தை பெற்றுள்ளது.பொருளாதார மற்றும் அமைதிக்கான நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிடும். இந்தாண்டிற்கான அமைதி பட்டியல் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.உலக மக்கள் தொகையில் 99.7% உள்ளடக்கிய 163 நாடுகளை ஆய்வு செய்து இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்தாண்டும் இந்த பட்டியலில் வழக்கம் போல ஐரோப்பிய நாடுகளே முன்னிலையில் உள்ளன.முதல் ஐந்து இடங்களை ஐஸ்லாந்து (1.095), அயர்லாந்து (1.260), நியூசிலாந்து (1.282), ஆஸ்திரியா (1.294) சுவிட்சர்லாந்து (1.294) போன்ற நாடுகள் முறையே

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு. அந்தத் தொகை 10,000 டொலர்களாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் அதை 20,635 டொலர்களாக உயர்த்தியது கனடா அரசு.தற்போது அந்த தொகையை மீண்டும் உயர்த்தியுள்ளது கனடா அரசு.கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக இனி தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை, கனடா புலம்பெயர்தல், அகத

டொரண்டோ நகரின் எடோபிகோ பகுதியில் இடம்பெற்ற சாலைவிபத்தில் பைக் ஓட்டிச்சென்ற 50 வயதிற்கும் மேற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என டொரண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நோர்த் கீன் தெரு மற்றும் அட்டோமிக் அவென்யூ சந்திப்பு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பைக் ஓட்டுபவர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில் உறுதிப்படுத்தினர்.லொறி ஓட்டுநர் விபத்து இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும், அவர் சம்பவ இடத்தைவிட்டு தப்பிச் செல்லவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர். இந்த விபத்தைத் தொடர்ந்து நோர்த் கீன் தெருவில், தி ஈஸ்ட் மால் முதல் ஷார்ன்க்ளிஃப் சாலை வரையிலான பகுதிகள் முழுமையாக மூ

சிறுவர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக கனடியர் ஒருவருக்கு அமெரிக்க நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. கனடாவின் சஸ்காட்செவான் மாகாணத்தைச் சேர்ந்த 32 வயதான மெத்தூ நார்மன் பாலெக் என்பவருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை நேரடியாக பாதிக்கும் பாலியல் வன்கொடுமை வீடியோக்களை எஃப்பிபிஐ முகவருக்கு அனுப்பியதற்காக, அமெரிக்க சட்டத்தின் கீழ் 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.வாஷிங்டன் டி.சி. மாவட்ட நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், 2024 ஜூன் 30ஆம் திகதி, நான்கு ஆண்டுகள் சிறைவாசம் மற்றும் அதன் பின் ஆறு ஆண்டுகள் கண்காணிப்பில் வாழ வேண்டிய தண்டனை, அவர் மீது விதிக்கப்பட்டது.பாலெக், 2024 ஜனவரியில் ஒரு ஆன்லைன் டேட்டிங் செயலியின் மூலம், எஃப்பிபிஐயின் குழந்தைகள் மீதான தொழில்நுட்ப வன்கொ

கனடாவின் மில்டனில் ஸ்டீல்ஸ் அவென்யூ 1130-ல் அமைந்துள்ள “Massage Addict” கிளினிக்கில் பதிவு செய்யப்பட்ட மசாஜ் நிபுணர் ஒருவர், ஒரு பெண் மீது மசாஜ் சிகிச்சை செய்யும் போது பாலியல் வன்முறை நிகழ்த்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் ஒரு வயது முதிர்ந்த பெண் எனவும், சிகிச்சை நேரத்தில் இந்த வன்முறை நடந்ததாகவும் புகார் செய்துள்ளார்.மிசிசாகாவில் வசிக்கும் 52 வயதுடைய அய்மன் அல் காசம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால் உடன் பொலிசாருக்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை (30) காலமானார். கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் காலமானார்.

ஜூலை 1, 1867 அன்று, கனடா என்று அழைக்கப்படும் ஒரு டொமினியனில் 3 காலனிகளை ஒன்றிணைக்கும் ஒரு முக்கியமான சட்டத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நாடு சுதந்திரத்திற்கான முதல் படியை எடுத்தது.கனடா முழுமையாக சுதந்திரமாகி இன்றைய நாட்டிற்கு வளர 1867 ஆம் ஆண்டில் அந்த அதிர்ஷ்டமான நாளுக்குப் பிறகு இன்னும் பல ஆண்டுகள் ஆனாலும், கனடா தினம் நாட்டின் தேசிய விடுமுறையாக கொண்டாடப்படுகிறது. கனடா தினம் 150 ஆண்டுகளுக்கும் மேலாக கொண்டாடப்படுகிறது. ஜூலை 1, 1867 இல், நோவா ஸ்கோடியா, நியூ பிரன்சுவிக் மற்றும் கனடா மாகாணம் - இப்போது ஒன்ராறியோ மற்றும் கியூபெக் - பிரிட்டிஷ் வட அமெரிக்கா சட்டத்தில் கையெழுத்திட்டன, பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் பெயர் மாற்றப்பட்டன.ஏறக்குறைய ஒரு வருடம் கழித்து, ஜூன் 20, 1868 அன்று, கவர்னர் ஜெனரல

இலங்கையின் தென்பகுதிக் கடலில் இரண்டு படகு விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்களின் விளைவாக 6 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (27) மீன்பிடி நடவடிக்கைக்காக தேவேந்திரமுனை மற்றும் பேருவளை, மொரகொல்ல பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.இச்சம்பவம் குறித்து கடற்படையிடம் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு, அவர்களுடன் இணைந்து இலங்கை விமானப்படை Bell 412 ஹெலிகொப்டர் மற்றும் Y12 விமானங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு

பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. அதன்படி நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.