- · 1 friends
-

அல்பர்ட்டா மாகாணத்திற்கு தட்டம்மை தொடர்பில் எச்சரிக்கை
கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தில், வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி, 1,179 பேருக்கு தட்டம்மைத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அல்பர்ட்டாவில் Calgary Stampede என்னும் விழா துவங்கியுள்ள நிலையில், தட்டம்மை பரவல் தொடர்பில் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்கள்.
விழாவில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 1.3 மில்லியன் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தட்டம்மை எளிதில் பரவக்கூடிய தொற்றுநோய் என்பதால், Calgary Stampede போன்ற விழாக்களில் பங்கேற்கும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையிலுள்ளோருக்கு நோய் தொற்றும் அபாயம் உள்ளது. ஆகவே, சிறுபிள்ளைகள், கர்ப்பிணிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உடையவர்கள், தடுப்பூசி பெறாதவர்கள் ஆகியோர் கூட்டமான இடங்களை தவிர்க்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், தடுப்பூசி பெறாதவர்கள் தடுப்பூசி பெற்றுக்கொள்ளுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.