·   ·  30 news
  •  ·  1 friends
  • 1 followers

படகு கவிழ்ந்ததில் இருவரை காணவில்லை

இலங்கையின் தென்பகுதிக் கடலில் இரண்டு படகு விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்துக்களின் விளைவாக 6 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்றையதினம் (27) மீன்பிடி நடவடிக்கைக்காக தேவேந்திரமுனை மற்றும் பேருவளை, மொரகொல்ல பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீன்பிடிப் படகுகளே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளன.

இச்சம்பவம் குறித்து கடற்படையிடம் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, கடற்படையினர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதோடு, அவர்களுடன் இணைந்து இலங்கை விமானப்படை Bell 412 ஹெலிகொப்டர் மற்றும் Y12 விமானங்கள் மூலம் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல் தூரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாத்தறை மாவட்டத்தின் தேவேந்திரமுனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற எம்.டி.ஆர் 263 தினேஷ் 4 (MTR 263 Dinesh 4) என்ற பலநாள் மீன்பிடிப் படகு, ஒரு வர்த்தகக் கப்பலுடன் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த படகில் ஐந்து மீனவர்கள் இருந்துள்ளனர். விபத்தை தொடர்ந்து படகின் மேல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைகளுக்காக இலங்கை கடற்படையினரால் கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.

ஏனைய நான்கு பேரையும் தேடி இலங்கை கடற்படையினர் இன்று காலை 7.30 மணி முதல் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் கரையிலிருந்து சுமார் 20 கடல் மைல்கள் தொலைவில், வர்த்தக கப்பல்கள் செல்லும் பாதையில் நிகழ்ந்துள்ளது.

மீன்பிடிப் படகின் கீழ் பகுதியில் மற்ற மீனவர்கள் இருக்கிறார்களா என்ற சந்தேகத்தின் பேரில், இலங்கை கடற்படையினர் சுழியோடிகளுடன் இணைந்து அப்பகுதியில் சுழியோடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு ஏனைய மீனவர்களை தேடும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹாவத்த உறுதிப்படுத்தினார்.

இவ்விபத்தில் 48 வயதான ஏ.டப்ள்யூ.பி. சமிந்த, ஏ.டப்ள்யூ.பி.எஸ். சமந்த, 41 வயதான எல்.எச்.டி. நிரோஷன், 58 வயதான ஏ.டி.எஸ்.டப்ள்யூ. ஷாந்த, 44 வயதான பி.பி.டி. சுஜித் குமார ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

  • 538
  • More
Comments (0)
Login or Join to comment.