·   ·  38 news
  •  ·  1 friends
  • 1 followers

கனடாவுக்கு கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு புதிய விதி

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் சொந்தத் தேவைகளுக்காக கனடாவில் யாரையும் சார்ந்திருக்காமல், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக அவர்கள் தங்கள் வங்கிக்கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையை வைத்திருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும் என்றொரு விதி உண்டு. அந்தத் தொகை 10,000 டொலர்களாக இருந்த நிலையில், 2024ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் அதை 20,635 டொலர்களாக உயர்த்தியது கனடா அரசு.

தற்போது அந்த தொகையை மீண்டும் உயர்த்தியுள்ளது கனடா அரசு.

கனடாவில் கல்வி கற்க வரும் வெளிநாட்டு மாணவர்கள், தங்களுக்கான தேவைகளை தாங்களே சந்திப்பதற்காக இனி தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும் என தற்போது மீண்டும் அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை, கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, ஜூன் மாதம் 2ஆம் திகதி வெளியிட்டுள்ளது.

ஆக, 2025ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி, அல்லது அதற்குப் பின் கனடாவில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், இனி தங்கள் வங்கிக்கணக்கில் 22,895 டொலர்கள் வைத்திருக்கவேண்டும்.

  • 661
  • More
Comments (0)
Login or Join to comment.