- · 1 friends
-

அமெரிக்காவின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு
பல்வேறு நாடுகளில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் தொடர்புடைய பொறுப்புக்கூறல் தொடர்பில் செயற்படுத்தப்பட்டு வந்த சுமார் 24 திட்டங்களுக்காக அமெரிக்க நிதி வழங்கல் நடவடிக்கையை நிறுத்துவதற்கு வெள்ளை மாளிகை பரிந்துரைத்துள்ளது. அதன்படி நிதியுதவியை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ள திட்டங்களில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை, ஈராக், சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் அடங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.