Latest News
கனடாவின் மொன்றியலில் கொகேய்ன் போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாகாணங்களுக்கு இடையே செயல்பட்டதாக கூறப்படும் கொகேய்ன் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடைய எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.மொன்றியல், லாரன்ஷியன் மற்றும் மொண்டெரெஜி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களில், டொரண்டோவில் இருந்து கொகேய்னை பெற்று கியுபெக்கில் மீள விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் வலையமைப்பை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.கரீம் சப்பி, கத்தரின் ட்ரூடெல்-பிரிமோ, ஜீன்-பிரான்சுவா ரோபெர்ஜ், மனோன் பிரிமோ, மத்யூ போஷார்ட், ஜென்னிபர் டிவ்ரிஸ், மிச்சேல் பிரான்செஸ்கோ மணிகோன் மற்றும் ஜூலி செயிண்ட்-ஜாக்ஸ்-லாபோயிண்ட் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் அனைவரும் 24 முதல் 54 வயத
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக செம்பரம்பாக்கம் ஏரி உள்ளது. மொத்தம் 24 அடி உயரம் கொண்ட இந்த ஏரியின் நீர்மட்டம் 21 அடியை கடந்துள்ளது. இதனால் ஏரியின் பாதுகாப்பு கருதி இன்று மாலை 4 மணி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு வெள்ள முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கடந்த 16ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. வழக்கத்தை விட இந்த முறை வடகிழக்கு பருவமழை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல்வர் ஸ்டாலின் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். மழை
இங்கிலாந்தில் சில வீடுகளில் அப்பிள் பழங்களின் அறுவடையின் பின்னர் வீட்டுக்கு வேண்டுமான பழங்களை எடுத்து கொண்டு மீதமானவற்றை வெளியே வைத்துவிடுவார்கள். வழியி்ல் செல்லும் வழிபோக்கர்கள் இலவசமாக எடுத்து செல்ல வைத்து விடுவார்கள்.இயற்கையாக விளைந்த இந்த பழத்துக்கும், மருந்துகள் பூச்சி நாசினிகள் பாவித்து விளைவிக்கபட்டு குளிரூட்டிகளில் பதனிடப்பட்ட கடை அப்பிள்களுக்கும் சுவையில் பெரும் வித்தியாசம் உள்ளது என அப்பிள் பழங்களை சுவைத்த ஒரு வழிபோக்கர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ (Prince Andrew), ‘யோர்க் கோமகன்’ (Duke of York) என்ற பட்டம் உட்பட தனக்கு வழங்கப்பட்ட அனைத்துப் பட்டங்களையும், கௌரவங்களையும் இனி பயன்படுத்தப் போவதில்லை என்று அறிவித்தார்.ஜெஃப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தில் தன் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள், அவரது அண்ணன் மன்னர் சார்லஸ் மற்றும் அரச குடும்பத்தின் பணிகளிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.மன்னர் மற்றும் தனது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்ததாகவும், தனது கடமையை குடும்பத்திற்கும் நாட்டிற்கும் முதன்மைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எப்ஸ்டீனின் பாலியல் கடத்தல் குற்றங்களுக்கு ஆளான வெர்ஜீனிய கியூஃப்ரே (Virginia Giuffre) என்பவரின் பு
கனடா கூட்டாட்சி அரசு இன்று எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தும் புதிய திட்டங்களை அறிவிக்கவுள்ளது. பிரதமர் மார்க் கார்னி நயாகரா பகுதியில் உள்ள ஒரு எல்லைச் சோதனை நிலையத்தை இன்று பார்வையிடுகிறார்.அதனைத் தொடர்ந்து பொது பாதுகாப்பு அமைச்சர் கெரி ஆனந்தசங்கரி ஊடக சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.இம்மாதம், லிபரல் அரசு தமது எல்லைப் பாதுகாப்பு மசோதாவை இரண்டு பகுதிகளாகப் பிரித்தது — சில முக்கிய பிரிவுகளை விரைவாக நிறைவேற்றவும், விவாதத்திற்குரிய பகுதிகளுக்கு கூடுதல் பரிசீலனை நேரம் வழங்கி பின்னர் நிறைவேறற்வும் திட்டமிட்டுள்ளது.புதிய மசோதாவில், கடலோர பாதுகாப்புப் படையின் (Coast Guard) பங்கு விரிவுபடுத்துதல், குடியேற்ற மற்றும் அகதி முறைமையை வலுப்படுத்துதல், பாலியல் குற்றவாளிகளின் தகவல் பகிர்வை மேம்படுத்துதல், சட்டவி
ஏஐ துறை இப்போது உலகில் மிகப் பெரிய புயலாக உருவெடுத்துள்ள நிலையில், இதன் எதிர்காலம் குறித்து உலகின் பெரும் பணக்காரரான பில்கேட்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பில் கேட்ஸ் கூறுகையில், "அடுத்த ஐந்து ஆண்டுகளில் செயற்கை நுண்ணறிவு வேற லெவலில் வளர போகிறது. அதேநேரம் இந்த தொழில்நுட்பத்தைப் பார்த்து நாம் அச்சப்படத் தேவையில்லை.. இதன் மூலம் நமக்குப் பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்" என்றார்.வளர்ந்து வரும் ஏஐ தொழில்நுட்பத்தால் வளர்ந்த நாடுகளில் சுமார் 60% வேலைகள் காலியாகும் என்றும் சர்வதேச அளவில் 40% வேலைகள் காலியாகும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா கடந்த வாரம் கூறியிருந்த நிலையில், அதற்குப் பதிலாக பில்கேட்ஸ் இந்த கருத்துகளைக் கூறியுள்ளார்.இது குறி
கனடாவின் மிகவும் தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான பியெரி பிலோஜீனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பிலோஜீன் 2021 டிசம்பர் 22 அன்று சார்ல்ஸ்-ஒலிவியர் புஷேர் சவார்ட் என்பவரை கொலை செய்த வழக்கில் முதல் நிலை கொலைக்கான குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தார் என மொன்றியல் பொலிசார் தெரிவித்துள்ளனர்.அவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் சர்ரே பகுதியில் செவ்வாய்கிழமை மாலை கைது செய்யப்பட்டார். பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் பிலோஜீனை பிடித்ததாகவும், குறுகிய துரத்தலுக்குப் பிறகு வான்கூவர் போலீசின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டதாகவும் மெட்ரோ வான்கூவர் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை. அவர்கள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டார்கள் என்று மோடி எனக்கு உறுதியளித்தார். உங்களுக்குத் தெரியும், இதை உடனடியாக செய்ய முடியாது. இது ஒரு சிறிய செயல்முறை, ஆனால் செயல்முறை விரைவில் முடிவடையும்.ரஷ்யாவை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த இது ஒரு பெரிய படி. இப்போது சீனாவையும் அதையே செய்ய வைக்கப் போகிறோம். மோடி ஒரு சிறந்த மனிதர். அவர் டிரம்பை நேசிக்கிறார். நான் அவரது அரசியல் வாழ்க்கையை அழிக்க விரும்பவில்லை.நான் பல ஆண்டுகளா
கனடாவின் கிரேட்டர் டொரண்டோ பகுதியில், மிசிசாகா நகரில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஒன்றில், இந்தியர்களை இனரீதியாக மோசமாக விமர்சிக்கும் வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த விடயம் தொடர்பில் Freda Looker-Rilloraza (29) என்னும் கனேடியப் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.கனடாவில் சமீப காலமாக, இந்தியர்களுக்கு எதிரான இனவெறுப்பு அதிகரித்துவருகிறது. சமீபத்தில், இந்திய வம்சாவளி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரே இனவெறுப்பு தாக்குதலுக்கு உள்ளானார்.
கனடாவின் ஒண்டாயோவில், கடந்த வாரம், அதாவது, அக்டோபர் மாதம் 6ஆம் திகதி, தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஹர்நூர் சிங் (27) மீது டிரக் ஒன்று மோதியது. அந்த டிரக்கின் ஓட்டுநர் குடிபோதையில் இருந்தது தெரியவந்த நிலையில், சிங் அந்த துயர விபத்தில் உயிரிழந்துவிட்டார்.ஹர்நூர் சிங்கின் உடலை இந்தியா கொண்டுவருவதில் பல சிக்கல்கள் இருப்பதை அறிந்த அவரது குடும்பத்தினர் பஞ்சாப் கேபினட் அமைச்சரான சஞ்சீவ் அரோரா என்பவரை அணுக, அவர் வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை எழுதி அவரச உதவி கோரியுள்ளார்.அதைத் தொடர்ந்து விரைவாக இந்தியாவுக்குக் கொண்டு வரப்பட்ட ஹர்நூர் சிங்கின் உடல், நேற்று லூதியானாவில் சீக்கிய முறைப்படி தகனம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவும் கனடாவும் சீர்குலைந்த தமது உறவைச் சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன. சிறிது காலம் கசப்படைந்திருந்த இருதரப்பு உறவு கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நிர்வாகத்தின்கீழ் மேம்பட்டது.கனடிய வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) புதுடில்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைச் (Jaishankar) சந்தித்தார். அதோடு அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தார்.இந்நிலையில் இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பானது இருதரப்பு உறவைச் சீரமைக்கும் முயற்சியாக அது பார்க்கப்படுகிறது.
கனடாவின் ஒண்டாரியோ, கியூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் விற்கப்பட்ட பிஸ்தா (Pistachio) மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள் பலவும் சால்மொனெல்லா (Salmonella) என்ற ஆபத்தான உணவுக் கிருமி தொற்றின் காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை, நாடு தழுவிய ரீதியில் நடைபெற்று வரும் சால்மொனெல்லா தொற்று விசாரணையுடன் தொடர்புடையதாக கனடா கூட்டாட்சி அரசு அறிவித்துள்ளது.அரசு பொதுமக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும், இந்தப் பொருட்களை உண்ணவோ, விற்கவோ, பரிமாறவோ, விநியோகிக்கவோ கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.ஒண்டாரியோ மாகாணம் கொலிங்வுட் நகரில் ஆன்லைனில் விற்கப்பட்ட பிஸ்தா பாக்லாவா மற்றும் பிஸ்தா சீஸ்கேக், டொராண்டோவில் விற்கப்பட்ட பெரரல் பிராண்டின் ஹல்வா பிஸ்தான டெசர்ட், சில பொரு