Ads

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்                          

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 1099
 • More
Info
Title:
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Text:

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்                          

Duration:
01:27
Category:
Created:
Updated:
 ·   · 174 videos
 •  · 15 friends
 • S

  23 followers
Comments (0)
  முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டினார் துணைவேந்தர்
  Empty
  typing a message...
  Connecting
  Connection failed
  Ads
  Latest Videos
  Advertisement
  Ads
  Featured Videos (Gallery View)
  Ads
  Added a news 
  'உங்களில் ஒருவன் பதில்கள்' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு வீடியோ மூலம் உற்சாகமாக பதிலளித்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல், ஆளுநர் அளித்த தேநீர் விருந்து, கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம், இலங்கைத் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு என பல அரசியல் வினாக்களுக்கு பதில் அளித்துள்ளார். அதில், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வதா? இது பின்வாங்கல் இல்லையா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்படவில்லை. அன்று அவர் படித்தது அரசின் உரை. ஆகவே அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரையை எந்த மாற்றமும் இல்லாமல், அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம். அந்த தீர்மானம் ஏற்கப்பட்டு அவையின் மாண்பும், மக்களாட்சி தத்துவமும் நிலைநாட்டப்பட்டது.குடியரசு தின தேநீர் விருந்து என்பது காலங்காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு. குடியரசு தினத்தன்று அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை. முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை என தெரிவித்தார். 
  • 27
  Added a news 
  அமெரிக்காவின் லோவா நகரில் விசித்திர சம்பவம் ஒன்று நடந்து உள்ளது. பாலியல் வாழ்க்கையில் சலிப்பு தட்டிய நபர் ஒருவர் செய்த செயல் மருத்துவ உலகையே அதிர்ச்சி அடைய செய்து உள்ளது என கூறப்படுகிறது. இதுபற்றி ஜாம் பிரஸ் ஊடகம் வெளியிட்ட தகவலில், 34 வயதுடைய அந்த நபருக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை ஒருசேர வந்து உள்ளது. எந்த உணவையும் அவரால் எடுத்து கொள்ள முடியவில்லை. தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சி.டி. ஸ்கேன் செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதில், அவரது சிறு குடலில் ஆணுறையால் சுற்றப்பட்ட வாழை பழம் ஒன்று இருந்து உள்ளது. அந்த நபர், ஆணுறைக்குள் வாழை பழம் ஒன்றை வைத்து அதனை உட்கொண்டது தெரிய வந்தது. பின்னர், அவருக்கு சிகிச்சை அளித்து, 3 நாட்கள் கழித்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளார். வயிற்றில் இருந்த அந்த வாழை பழத்துடன் கூடிய ஆணுறையும் நீக்கப்பட்டு உள்ளது. இதன்பின்பே அவரால் வழக்கம்போல் சாப்பிட முடிந்து உள்ளது. பிற விசயங்களிலும் ஈடுபட முடிந்தது. மருத்துவ உலகில் முதன்முறையாக நடந்த இந்த சம்பவம் என மருத்துவ பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதுபற்றி மருத்துவ அறிவியலுக்கான கியூரியஸ் என்ற பத்திரிகை இந்த விசயங்கள் பற்றி விவரங்களுடன் பட்டியலிட்டு தனது பதிவுகளில் சேர்த்து உள்ளது.
  • 29
  Added a news 
  அதானி குழுமம் கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் பெரும் வளர்ச்சி பெற்று உலக பணக்காரர்களில் மூன்றாவது இடத்தையும் அதானி பிடித்தார்.இந்நிலையில் அதானி குழுமத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு அவர்கள் செய்த மோசடியே காரணம் என கூறி அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பெர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டது.இதுகுறித்து இன்று எல்.ஐ.சி நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.அதில், ''பல்வேறு சமயங்களில்  காலக்கட்டங்களில் அதானி குழும்பத்தில்) நாங்கள்(எல்.ஐ.சி நிறுவனம்  ரூ.36,474 கோடி முதலீடு செய்திருந்தோம். கடந்த ஜனவரி 27 ஆம் தேதி அதானி குழுமத்தில் முதலீடு செய்த  நிறுவனத்தின் மதிப்பு ரூ.56,142 கோடியாக இருந்தது.தற்போது எல்.ஐ.சி நிறுவனத்தின் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.41.66 லட்சம் ஆகும். .அதானி குழும்பத்தில் நாங்கள் முதலீடு செய்துள்ள அனைத்தும் காப்பீட்டு ஆணைய  ஒழுங்குவிதிகளுக்கு உட்பட்டுத்தான் முதலீடு செய்திருக்கிறோம்'' எனத் தெரிவித்துள்ளது.
  • 29
  Added article 
  சிம்பு தற்போது 'பத்து தல', 'கொரோனா குமார்' ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். பத்து தல படத்தை 'சில்லுனு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா இயக்குகிறார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்தில் சிம்புவுடன் கவுதம் மேனன், கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். கன்னடத்தில் 2017-ஆம் ஆண்டு வெளியான 'முஃப்தி' திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை படக்குழு அறிவித்திருந்தனர். இதையடுத்து நடிகர் கவுதம் கார்த்திக்கும் நடிகை பிரியா பவானி சங்கரும் தங்களது டப்பிங் பணிகளை முடித்ததாக தெரிவித்திருந்தனர்.'பத்து தல' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
  • 28
  Added a news 
  ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாகவும் இருந்தவர், நபா கிஷோர் தாஸ் (வயது 61). ஜார்சுகுடா மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற அவரை, பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த போலீஸ் துணை சப்-இன்ஸ்பெக்டர் கோபால்தாஸ் சரமாரியாக சுட்டார். இதில் படுகாயமடைந்த அவர் புவனேஸ்வர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றிய போலீஸ் அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு மனநல பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.கொல்லப்பட்ட மந்திரி நபா கிஷோர் தாசின் உடல் புவனேஸ்வரில் இருந்து நேற்று காலையில் ஜார்சுகுடாவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக, முதல்-மந்திரி நவீன் பட்நாயக், கவர்னர் கணேஷிலால் மற்றும் மாநில மந்திரிகள் கிஷோர் தாசின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். மேலும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினர்.இதைத்தொடர்ந்து அவரது உடல் நேற்று மாலையில் மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடந்தன. பின்னர் அவரது உடல் வைக்கப்பட்ட சிதைக்கு அவரது மகன் பிஷால் தாஸ் தீ மூட்டினார். முழு அரசு மரியாதையுடன் நடந்த இந்த இறுதிச்சடங்கில் மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். கிஷோர் தாசின் மரணத்தையொட்டி மாநிலத்தில் 3 நாள் அரசு துக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒடிசாவில் பட்டப்பகலில் அரசு நிகழ்ச்சியில் நடந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கின்றன.
  • 30