Feed Item
Added a post 

மேஷம்

குடும்பத்தில் ஒத்துழைப்பும் ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான சிந்தனைகளால் லாபத்தை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உருவாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

 

ரிஷபம்

விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஒத்துழைப்புகள் திருப்தியை ஏற்படுத்தும். சங்கம் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை குறைத்துக்கொள்ளவும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்

 

மிதுனம்

மாமன்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் தடைகள் விலகும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் நேரிடும். இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ரகசியமான சில ஆய்வுகள் தெளிவை உருவாக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெண்மை

 

கடகம்

பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் சார்ந்த பணிகளில் லாபம் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

சிம்மம்

வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். பேராசை இன்றி செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்கு மேம்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் ஏற்படும். வேளாண்மை சார்ந்த ஆலோசனைகள் மூலம் தெளிவு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கன்னி

மறைமுகமான தடைகளை வெற்றி கொள்ளுவீர்கள். மற்றவர்கள் கருத்துக்களுக்கு உணவுப்பூர்வமாக செயல்படுவதை விட சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

துலாம்

எதிர்பாராத அலைச்சல்களால் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் சிந்தித்து செயல்படவும். கனிவான பேச்சுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். உத்தியோகத்தில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். தனம் சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

விருச்சிகம்

வாழ்க்கைத் துணைவருடன் சிறுதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை மேம்படும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வெளியூரில் பணி வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

தனுசு

வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய ஒப்பந்தங்கள் கைக்கூடும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். வழக்குகளில் சில திடீர் திருப்பம் ஏற்படும். பழைய சிக்கல்களுக்கு தெளிவு பிறக்கும். ஆன்மிக பணிகளில் சில புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். அமைதி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மகரம்

புதிய கலைகளை கற்பதில் ஆர்வம் உண்டாகும். தன வரவுகளால் மேன்மை ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் பொறுமையை கையாளவும். அரசு அதிகாரிகளுக்கு நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் முயற்சிகளால் அலைச்சல் அதிகரிக்கும். பரிவு மேம்படும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்

 

கும்பம்

உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு ஏற்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகள் ஈடேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பணிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

மீனம்

புதுவிதமான காதணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை ஏற்படும். எழுத்துசார்ந்த துறைகளில் முன்னேற்றம் கிடைக்கும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். மறைமுகமாக இருந்துவந்த தடைகளை அறிந்துகொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை

  • 509