2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் ரத்தன் டாடா இந்த மண்ணை விட்டு மறைந்தார். இந்நிலையில் அவர் எழுதி வைத்த உயில் தற்போது வெளியாகியுள்ளது.தன் பணியாளர்கள் மீதும் விலங்குகள் மீதும் அவர் கொண்டிருக்கின்ற பிரியத்தையும் நன்றி உணர்வையும் இதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
ரத்தன் டாடா தனது உயிலில் தனது வீட்டில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு ரூ.3 கோடிக்கும் மேலான சொத்துக்களை ஒதுக்கி வைத்துள்ளார்.டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள தகவல்களின்படி 7 வருடம் மற்றும் அதற்கும் மேலாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ. 15 லட்சம் வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர்களுடைய சேவை காலத்திற்கு ஏற்ப இந்த தொகை பகிர்ந்தளித்து வழங்கப்பட வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார்.அதோடு பகுதி நேரமாக பணிபுரிந்த ஊழியர்களையும் ரத்தன் டாட்டா மறக்கவில்லை.
பகுதி நேரமாக உதவி செய்தவர்கள், கார் சுத்தம் செய்தவர்கள் என அனைவருக்கும் ரூ.1 லட்சம் பகிர்ந்துளித்து வழங்கப்பட வேண்டும் என்றும் எழுதி வைத்துள்ளார். தனது ரூ. 3,800 கோடி மதிப்புள்ள சொத்தின் பெரும் பகுதியை ரத்தன் டாட்டா என்டோமென்ட் பவுண்டேஷன் மற்றும் ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் டிரஸ்ட் ஆகியவற்றிற்கு வழங்கியுள்ளார் நீண்ட காலமாக தனது வீட்டில் சமையல் செய்த ராஜன் ஷாவுக்கு ரூ.1 கோடிக்கும் அதிகமான தொகையை வழங்க உயிலில் குறிப்பிட்டுள்ளார். இதில் ரூ.51 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும்.அவர் வீட்டில் சமையல் செய்த மற்றொரு குக் சுப்பையா கோனார் ரூ.66 லட்சத்தை பெற உள்ளார். இதில் ரூ. 36 லட்சம் கடன் தள்ளுபடியும் அடங்கும். அதே நேரம் அவருடைய செக்கரட்டரி டெல்னாஸ் கில்டருக்கு ரூ.10 லட்சம் வழங்க குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடைகளை அரசு சாரா நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்க வேண்டும் என்றும், இதனால் ஏழை ஏழை எளியவருக்கு அந்த ஆடை விநியோகிக்கப்படும் என்பதை முன்னிறுத்தி உயில் எழுதி வைத்துள்ளார்.கார்ல்னெல் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக ரத்தன் டாடாவின் நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடு ரூ.1 கோடி கடன் வாங்கியுள்ளார். அதையும் தள்ளுபடி செய்ய குறிப்பிட்டுள்ளார். தனது பக்கத்து வீட்டுக்காரர் வாங்கிய கடன் மற்றும் தனது ஓட்டுநர் ராஜூ லியோன் வாங்கிய கடன் ஆகியவற்றையும் தள்ளுபடி செய்ய குறிப்பிட்டுள்ளார்.ரத்தன் டாடாவிற்கு செல்ல பிராணிகள் என்றால் மிகவும் பிடிக்கும். அப்படி அவர் வளர்த்து வந்த டிட்டோ உயிலில் சிறப்பு இடம் பெற்றுள்ளது. அதற்கு ரூ. 12 லட்சம் வழங்க குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு காலாண்டிற்கும் ரூ. 30,000 வழங்கப்படவுள்ளது. டிட்டோவை தனது சமையல்காரர் ராஜன் ஷா பராமரித்து வருகிறார்.
- 459