Ads

ஜே கே வி 2 எனும் தக்காளி இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்ட கிளிநொச்சி விவசாயி

💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 596
  • More
Info
Title:
ஜே கே வி 2 எனும் தக்காளி இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்ட கிளிநொச்சி விவசாயி
Pictures:
a:1:{i:0;s:15:"bx_videos_html5";}
Duration:
02:00
Category:
Created:
Updated:
 ·   · 175 videos
  •  · 16 friends
  • S

    24 followers
Comments (0)
    ஜே கே வி 2 எனும் இனத்தை பரீட்சார்த்தமாக மேற்கொண்ட கிளிநொச்சி விவசாயி
    Senthuran
    Video conference has been started
    typing a message...
    Connecting
    Connection failed
    Ads
    Latest Videos
    Advertisement
    Ads
    Featured Videos (Gallery View)
    Ads
    • 45
    Added a news 
    நீதித்துறையை சுதந்திரமாக செயற்பட வைக்க வேண்டும் என்பது ஒரு அரசாங்கத்தினுடைய கடமையாக காணப்படுகின்றது. அதில் எந்த விதமான மாற்றுக்கருத்துக்கும் இடம் இருக்க முடியாது என தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜா விவகாரம் தொடர்பில் யாழில் சனிக்கிழமை (30) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் .நீதியை நடைமுறைப்படுத்தும் நீதித்துறைக்கு பங்கம் ஏற்படும் விதத்திலே யாராவது நடந்து கொண்டால் உடனடியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர நீதிபதிக்கு தொல்லைகள் கொடுக்கக் கூடாது. ஆனால் இலங்கையில் நடைபெறுவது இவ்வாறான செயற்பாடுகள் அல்ல எல்லாமே ஒரு சிங்கள பௌத்த சிந்தனையில் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன.ஆகவே, ஒரு தமிழருக்கு சார்பாக ஒரு தமிழ் நீதிபதி தீர்ப்பு கொடுத்தால் ஒரு முஸ்லிமிற்கு சார்பாக ஒரு முஸ்லீம் நீதிபதி தீர்ப்புக் கொடுத்தால் சிங்களவர்கள் ஏதோ அவர்கள் தமிழர்களாக இருப்பதால் தான் இவ்வாறு தீர்ப்பு கொடுத்திருக்கின்றார்கள் என்று கூறுகின்றார்களே தவிர சிங்கள நீதிபதிகள் சிங்களவர்களுக்கு சார்பாக நீதி கொடுக்கின்றார்கள் என்று சிந்திப்பதில்லை.இதில் நான் தெரிவிப்பது நீதிபதிகள் சட்டத்தின் படி நடக்க தான் அவர்களிற்கு நாங்கள் பயிற்சி கொடுத்திருக்கின்றோம். அவர்கள் இவ்வாறு தான் செய்கின்றார்களே தவிர அதில் தமிழர், சிங்களவர் என்று பாகுபாடு பார்த்து அவர்கள் இதனை செய்யவில்லை இவ்வாறு நினைப்பது பிழையான ஒரு சிந்தனையாகும்.இந்த சிந்தனையில் தான் இவ்வாறு இந்த நீதிபதிக்கு நடந்திருக்கின்றது என்பதுக்கு தெரிகின்றது.இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் ஒன்றில் அவரை திரும்ப வரவழைத்து போதிய பாதுகாப்பு கொடுத்து அவரை மீண்டும் அதே பதவியை வகிக்க செய்யலாம். இது நடைமுறைக்கு சாத்தியமானதாக இருக்கின்றதா என்பது தெரியவில்லை.ஆனால் அரசாங்கம் ஒன்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தாவிட்டால் சிங்கள மக்களிக்குமிடையே இது மாதிரியான நிலைமைகள் ஏற்பட்டு பாரதூரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.ஈஸ்ரர் தாக்குதலை எடுத்துப்பார்த்தோமாக இருந்தால் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட்தாக கூறுகின்றனர். ஆனால் உண்மையில் அவ்வாறு அல்ல. இது யாரோ ஒருவரின் அரசியலுக்காக ஒரு நாடகமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதே இங்கு பிரதானமாகும்.அனைத்தையும் தீர விசாரித்து செயற்பாடு வேண்டும் என்பதே எனது பிரதான கருத்தாகும் எனவும் தெரிவித்தார்.
    • 53
    Added a news 
    மாலைதீவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் மொஹமட் முயிசூவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.தொலைபேசி அழைப்பின் ஊடாகவே மொஹமட் முயிசூவுக்கு, ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.இலங்கை - மாலைதீவு மக்களின் மேம்பாட்டிற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் இருதரப்பு உறவுகளை பலதரப்பு கூட்டுச் செயன்முறைகளாக பலப்படுத்திக்கொள்ளவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விருப்பம் தெரிவித்தார்.அதேபோல் கல்வி, சுகாதாரம்,பொருளாதாரம் மற்றும் முதலீட்டு துறைகளில் இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளவது தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.மாலைதீவின் புதிய ஜனாதிபதியின் ஆட்சியில் சுபீட்சம் கிட்டும் என்ற எதிர்பார்ப்புடன், அந்நாட்டின் புதிய அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • 54
    Added a news 
    நிபா வைரஸ் தொடர்பில் இலங்கைக்கு அதிக ஆபத்து இல்லை என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இந்திய மாநிலமான கேரளாவில் இதுவரை 06 பேருக்கு  மட்டுமே நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து, இந்தியாவின் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.எவ்வாறாயினும், கடந்த 22 ஆம் திகதி முதல் இந்தியாவில் புதிதாக தொற்றுக்குள்ளான நபர் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்ட நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் 700 க்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக நோய் பரவல் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் இலங்கைக்கான ஆபத்து மிகவும் குறைவு எனவும் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.நிலைமை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதால், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 55
    Added article 
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் என்ற படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதே தேதியில் ரிலீஸ் ஆக திட்டம் இடப்பட்டிருந்த அயலான் மற்றும் அரண்மனை 4 ஆகிய படங்களின் ரிலீஸுக்கு சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான திரைப்படம் லால் சலாம்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சற்றுமுன் லைகா நிறுவனம் லால் சலாம் திரைப்படம் பொங்கல் திருநாளில் வெளியாகும் என அறிவித்துள்ளது.  ஏற்கனவே அயலான் மற்றும் அரண்மனை 4 ஆகிய திரைப்படங்கள் பொங்கல் திருநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் ரிலீஸ் தேதியை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 55