Feed Item
Added a news 

புதிய மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையை, இலங்கை மின்சார சபை இம்மாதம் 15ம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு வழங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் இரண்டாவது மின் கட்டண சீராக்கம் தொடர்பான யோசனையாக இது அமையவுள்ளது.

இதன்படி புதிய மின்சார கட்டண சீராக்கம் எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் அமுலாகும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மின்சார கட்டணமானது அதன் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும் என்று, சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

  • 454