போர் பாதிப்புகளை காரணம் காட்டி பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF - International Monetary Fund) உதவிக் கேட்டிருந்த நிலையில், அதை ஏற்க வேண்டாம் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்திய ராணுவம், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை அழித்தது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய எல்லையில் நடத்திய தாக்குதலில் 13 பேர் பலியானார்கள். தொடர்ந்து பாகிஸ்தான் நடத்த முயன்ற தாக்குதல்களை இந்தியா முறியடித்தது.
முன்னதாக பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியில் உள்ளதை கருத்தில் கொண்டு பாகிஸ்தானுக்கு 1.3 பில்லியன் டாலர்களை கடனாக வழங்க IMF திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அந்த கடனுதவியை உடனே தரும்படி பாகிஸ்தான் அழுத்தம் தரத் தொடங்கியுளதால் அதுகுறித்து IMF குழு இன்று மதிப்பாய்வு செய்ய உள்ளனர்.
இந்நிலையில் இந்த இக்கட்டான போர் சூழலில் IMF பாகிஸ்தானுக்கு நிதி விடுவிக்க வேண்டாம் என்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறியுள்ளார். ஏற்கனவெ கடந்த 30 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்ட கடன்களை அவர்கள் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்தினார்களா, அல்லது வேறு எதற்கேனும் பயன்படுத்தினார்களா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- 347