நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வேட்பாளர் ஒருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் இரண்டு வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து, இரண்டு வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணய சுழற்சி இடம்பெற்றது. குறித்த நாணய சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார்கள்.
கிண்ணியா நகர சபைக்கான உள்ளூராட்சி மன்றத்தில் றஹ்மானியா வட்டாரத்தில் எம்.எம்.மஹ்தி மற்றும் மாஞ்சோலை வட்டாரத்தில் ரசாட் முஹம்மட் ஆகியோர்களுமே வெற்றி பெற்றுள்ளனர்.
000
- 462