-
- 3 friends

சகட தோஷம் என்றால் என்ன? அதற்கு எளிய பரிகாரம்
“சகடம்” என்ற சமஸ்கிருத சொல்லுக்கு பொருள் “சக்கரம்”. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல உதவும் எவ்வகை வாகனத்திற்கும் மிக முக்கியமான ஒரு பாகம் சக்கரம். இவ்வட்டமான சக்கரம் கீழ்ப்பகுதி மேலும்,மேல்பகுதி கீழும் எப்போதும் போல் சுழல்வதைப் போன்றே, சிலரது வாழ்க்கையும் எவ்விதமான மாறுதல்கள் இன்றி சாதாரண நிலையில் தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும். இப்படிப் பட்டவர்களின் ஜாதகத்தை ஆராய்ந்தோமேயானால் இவர்களில் பெரும்பாலோர்க்கு “சகடை யோகம்” இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த சகடை யோகத்தை “யோகம்” என்று கூறுவதை விட “தோஷம்” என்று கூறுவதே பொருத்தமானதாக இருக்கும்.
ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு நின்ற ராசிக்கு ஆறு, எட்டு, பனிரெண்டு ஆகிய இராசிகளில் சந்திரன் இருந்தாலும் அந்த ஜாதகத்தை சகட தோஷ ஜாதகம் என்று கூறுவார்கள். இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தோம் என்றால் பலவிதத்திலும் அவர்கள் சோதனை மிகுந்தவர்களாகவே இருப்பதை காணலாம்.
சகட தோஷத்திற்கு தினசரி பரிகாரம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே பூரண விடுதலை உண்டு.
துன்பத்தை விலக்கி இன்பமாக வாழ பரிகாரம்
ஓம் நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினசரி காலையில் நூற்றி எட்டுமுறை சொல்லி வாருங்கள்.
அமாவாசை தோறும் பசுவிற்கு பச்சரிசி தவிடு, மற்றும் அகத்திக்கீரை கொடுத்து வாருங்கள்.
திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் கோவிலுக்குச் சென்று சந்திர மற்றும் குரு பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
கோவில் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான தானங்களிலும், சேவைகளிலும் ஈடுபடலாம்.
சித்தர்களின் ஜீவ சமாதி பீடங்களுக்கு பவுர்ணமி அன்று சென்று வழிபடுவதும் இச் சகடை தோஷத்தைப் போக்கும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·