-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 12.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தாய் மாமன் வழியில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். வேலையாட்களின் மூலம் மாற்றங்களை உண்டாக்குவீர்கள். நிதானமான செயல்பாடுகள் வெற்றியைத் தரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த புதிய பொறுப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாக அமையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மிதுனம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கற்பனை துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். தந்தை வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மேல்நிலைக் கல்வியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். தாய்வழி உறவுகளிடத்தில் அனுசரித்து செல்லவும். கூட்டு வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் ஆதரவு திருப்தியை உண்டாக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம்
எதிர்ப்புகளை சாமர்த்தியமாக வெற்றி கொண்டு எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
எண்ணிய சில பணிகள் நிறைவேறுவதில் அலைச்சல்கள் ஏற்படும். நெருக்கமான உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
துலாம்
அக்கம், பக்கம் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. உத்தியோகப் பணிகளில் பொறுப்புக்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் அலைச்சல்களும் ஆதாயமும் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத இடமாற்றமும், பாராட்டுகளும் கிடைக்கும். வெளியூர் தொழில் முயற்சிகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத்தொழிலில் சக கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்லவும். புதிய முடிவுகளில் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். பாசம் வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். சுப காரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். முயற்சி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மகரம்
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கும்பம்
பணிகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் ஆராய்ச்சி சிந்தனைகள் அதிகரிக்கும். மாற்றமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். வெளியூர் தொடர்பான வர்த்தகம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் உண்டாகும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
மீனம்
தனம் தொடர்பான நெருக்கடிகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அரசு சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானம் வேண்டும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். நண்பர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·