-
- 3 friends

இன்றைய ராசி பலன்கள் - 11.5.2025
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும். அந்நிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும் மேம்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நீண்ட நாட்களாக இருந்துவந்த கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
தன்னம்பிக்கையான சில பேச்சுக்கள் மனதில் நம்பிக்கையை உண்டாக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். உத்தியோகப் பணிகளில் நல்ல பெயர் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் ஆதரவு ஏற்படும். குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். எதிர்பாராத சில திடீர் திருப்பம் உண்டாகும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம்
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மற்றவர்களின் மனதில் உள்ள எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம்
பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. கலை துறைகளில் கற்பனைகள் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் எண்ணியதை வித்தியாசமான முறையில் நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதில் நம்பிக்கையுடன் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். பாகப்பிரிவினை சார்ந்த முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். அதிரடியான சில செயல்களின் மூலம் வியாபாரம் சார்ந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
கன்னி
பொன், பொருட்சேர்க்கை தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணிதம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் உங்களின் மீதான நம்பிக்கை உயரும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பெருமை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
துலாம்
வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகளைப் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். எண்ணிய சில பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கேளிக்கை செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பயனற்ற வாதங்களை தவிர்ப்பது நல்லது. புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
விருச்சிகம்
எதிலும் பதற்றமின்றி செயல்படவும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வாழ்க்கை துணையுடன் அன்பாக நடந்து கொள்ளவும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். எதிர்காலம் தொடர்பான விஷயங்களில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கோபம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
தனுசு
வியாபாரம் சார்ந்த பணிகளில் மறைமுகப் போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபகரமான சூழ்நிலைகள் அமையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
வியாபாரம் சார்ந்த பணிகளில் புதிய தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிந்தனையின் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்நிய வர்த்தகத்தில் லாபம் மேம்படும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். இரக்கம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
கும்பம்
வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். இழுபறியான சில விஷயங்களுக்கு முடிவுகளை எடுப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். எதையும் தன்னம்பிக்கையோடு அணுகி வெற்றி பெறுவீர்கள். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன ம்
மீனம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் மனதில் கோபம் அதிகரிக்கும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் விட்டுக் கொடுத்து செயல்படவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாக கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·