-
- 3 friends

சனி தோஷம் நீங்க பரிகாரங்கள்
நீதிமானான சனிபகவான், ஒருவரின் வாழ்க்கையில் அனைத்து பாடங்களையும் கற்றுத் தரக்கூடியவர். அவர் நினைத்தால் ஏற்றமும் தருவார். ஆணவச் சிந்தனையில் உள்ளவர்களுக்குப் பாடங்களைக் கற்றுத் தருவார். சனிபகவானால் ஏற்படும் தோஷங்களுக்கு சில பரிகாரங்கள் கட்டாயமாகும்.
சனிக்கிழமை காலை முதல் விரதம் எடுத்து, பின்னர் பானு சனி பகவான் கோயிலுக்குச் சென்று நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றினால் நன்மைகள் கூடும்.
சுத்தமான பசும்பாலால் லிங்க சொரூபியான சிவபெருமானுக்கு அபிஷேகம், வில்வம் அர்ச்சனை போன்றவற்றைச் செய்தால் நன்மை கிடைக்கும்.
மற்றவர்களைப் பசியைப் போக்கினால் சனிபகவானின் அருள் முழுவதுமாக கிடைக்கும். திருநள்ளாறு சென்று அங்கிருக்கும் நள தீர்த்தத்தில் நீராடி சனிபகவானை வணங்கி விட்டு மற்றவர்களுக்கு அன்னதானம் செய்தல் நல்ல பலன்கள் கிடைக்கும்.
எந்த செயலாக இருந்தாலும் நேர்மையாகச் செய்தால் சனிபகவானுக்கு மிகவும் பிடிக்கும். நேர்மை தவறாது மற்றவர்களுக்கு உதவிடும் குணத்தோடு இருப்பவர்களுக்குச் சனிபகவான் அள்ளிக் கொடுப்பார் என்பது ஐதீகம்.
காக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.
சனி பகவானுக்கு மிகவும் பிடித்த நிறம் நீலம். எனவே நீல நிறத்தில் உடை அணிதல் நல்லது.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·