- · 17 friends
-
S
தைப்பூச சிறப்புகள்
பக்தர்களை தன் மனதில் வைத்திருக்கும் முருகனுக்கு உரிய தைப்பூச திருநாள் 2021 ஜனவரி 28ஆம் தேதி அதாவது தை மாதம் 15ஆம் தேதி பூச நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. பூச நட்சத்திரம் ஜனவரி 28ஆம் தேதியான அதிகாலை 4.48 மணியிலிருந்து தொடங்குகிறது என்பதால் விரதத்தின் போது எப்படி இருக்க வேண்டுமோ அந்த விதிகளை இந்த நேரத்திலிருந்து கடைப்பிடிப்பது நல்லது.
தைப்பூச சிறப்புகள்தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து அடிக்கடி தொல்லை கொடுத்து வரும் அசுரர்களை வெல்ல என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.அசுரர்களுடன் போரிட தலைமை தாங்கி செல்லக்கூடிய சக்தி வாய்ந்த தலைவன் தேவை என ஈசனிடம் வேண்டினர். கருணைக்கடலான எம்பெருமான், தன் தனிப்பட்ட சகதியிலிருந்து, நெற்றிக்கண்ணிலிருந்து உருவானவர் தான் கந்தன்.
நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்பட்ட ஆறு தீப்பொறிகள் ஆறு அழகிய குழந்தைகளாகின. அந்த குழந்தைகளை கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். பின்னர் ஆறுமுகமாக உருவெடுத்தார்.ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு ஞான வேல் வழங்கிய இந்த தைப்பூச திருநாளில் தான்.
இதன் காரணமாக தான் மற்ற முருகனின் ஆறுபடை வீடுகளைக்களை காட்டிலும் பழனியில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.அப்படி பார்வதி தேவி கொடுத்த ஞான வேலை கொண்டு அசுரர்களை அழித்ததாகப் புராண காதை கூறுகின்றது.
தைப்பூச விரத முறைகள்:தைப்பூசம் நாளில் காலையில் எழுந்ததும், வீட்டை சுத்தம் செய்து குளித்துவிட்டு, நெற்றி நிறைய திருநீறு அணிந்து, விரதத்தை தொடங்கலாம். வீட்டில் விளக்கேற்றி தெய்வங்களை வழிபட்டு, குறிப்பாக முருகப்பெருமானை வழிபட்டு, கந்த கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்த, கலிவெண்பா உள்ளிட்ட முருகப்பெருமானுக்கு உகந்த பாடல்களை காலையிலிருந்து மாலை வரை படிக்கலாம்.
வேலைக்கு செல்பவர்கள் அதிகாலையிலேயே பூஜை செய்து முருகன் போற்றி பாடி விட்டு வேலைக்கு செல்லலாம். எந்த வேலை செய்வதானாலும் ‘ஓம் சரவணபவ’ எனும் திருமந்திரத்தை உச்சரித்தவாறே செய்வது நல்லது.
விரதத்தில் இருப்பவர்கள் காலை மதியம் இருவேளையும் பால், பழம் மட்டும் எடுத்துக்கொள்ளலாம். மாலை வேளையில் அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருவது நல்லது. அங்கு கொடுக்கப்படும் பிரசாதத்தை எடுத்துக்கொள்ளலாம்.
காலை, மாலை வேளையில் கோயிலுக்கு சென்று முருகன் வழிபாடு செய்து வரலாம்.முருகனுக்கு உகந்த இந்தாளில் விரதமிருந்து காவடி எடுத்தல் மற்றும் பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ளலாம்.
நன்றி:சைவம் நெட்
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·