-
R
- 4 friends
பொருளாதார நெருக்கடி மற்றும் சேதன உரப் பயன்பாடு என்பவற்றால் வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தொழில்களில் ஒன்றாகக் காணப்படும் விவசாயச்செய்கையில் உரிய வருமானம் கிடைக்காமையால் விவசாயிகள் இம்முறை பாரிய நட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் மக்களில் 65 வீதத்திற்கு மேல் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர்.
இவ்வாறு விவசாயத்தை நம்பி வாழும் குடும்பங்கள் ஒவ்வெரு போகத்திலும் வறட்சிப்பாதிப்பு, விளைபொருட்களை உரிய காலத்தில் உரிய விலைகளில் சந்தைப்படுத்த முடியாமை என பல்வேறு நெருக்கடிகளை கடந்த காலங்களில் எதிர் கொண்டாலும் தற்போது சேதன உரப்பாவனையும் எரிபொருள் தட்டுப்பாடும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசனக் காணிகள் மற்றும் மானாவாரி பயிர்ச்செய்கை நிலங்கள் என 69 ஆயிரம் தொடக்கம் 70 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் வருடாந்தம் நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்றது.மேற்படி உற்பத்தியில் கிளிநொச்சி மாவட்டத்தின் உணவுத்தேவைக்கு ஏறத்தாள 22 ஆயிரத்து 310 மெற்றிக்தொன் தேவைப்படுகின்றது. இதைக்கூட இம்முறை உற்பத்தி செய்ய முடியாத நிலையிலேயே இந்த மாவட்டம் காணப்பட்டதாக விவசாய அமைப்புக்கள் சுட்டிக் காட்டியுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு கால போக அறுவடையில் கெக்ரேயர் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று மெற்றிக் தொன் வரையான விளைச்சல் கிடைத்துள்ளாதக மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுளளது.கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பாரிய மற்றும் நடுத்தர சிறிய நீர்ப்பாசன குளங்கள் மற்றும் மானாவாரி பயிர்செய்கை நிலங்கள் உள்ளடங்கலாக சுமார் 69ஆயிரம் ஏக்கர் முதல் 70 ஆயிரம் ஏக்கர் வரையான நிலப்பரப்பில் கால போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.இந்த நிலையில் நெல்லுக்கான உரிய விலை கிடைத்தாலும் கடந்த காலங்களில் அறுவடைகள் மூலம் கிடைக்கப்பெற்ற உற்பத்திகளை விட இந்த முறை குறைந்த அளவு விளைச்சல்களே கிடைத்துள்ளன என்றும் இதனால் பாரிய நட்டத்தினை எதிர் கொண்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
போதிய உரவகைகள் இன்மை களை நாசினிகள் இன்மை காரணமாக சில இடங்களில் விவசாயிகள் தங்களுடைய பயிர் செய்கைகளை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.இரசாயன உரங்களை தடுத்து நிறுத்தி சேதனப் பசளை பயன்படுத்தி விவசாயத்ததை மேற்கொள்ளுமாறு அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் உரத் தட்டுப்பாடு மற்றும் கிருமி நாசினிகள் களை நாசினிகள் தட்டுப்பாடு காரணமாக குறித்த விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் அறுவடைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது கடந்த போகங்களில் ஹெக்டேர் ஒன்றுக்கு 4.3 மெற்றிக் தொன் முதல் 4.5 மெற்றிக் தொன் வரையான விளைச்சல் கிடைத்திருந்தன.இந்தப் போகத்தில் விளைச்சல் குறைவடைந்துள்ளன. அதாவது கெக்ரேயர் ஒன்றுக்கு இரண்டு மெற்றிக் தொன் முதல் 2.5 மெற்றிக் தொன் வரையான விளைச்சல் மாத்திரமே கிடைத்துள்ளதாக மாவட்ட பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.
மேற்படி செய்கையின் போது உரிய களைக் கட்டுப்பாடு இல்லாத நிலையில் 13ஆயிம் ஏக்கர் வரையில் கைவிடப்பட்டாதவும் குறிப்பிடப்பட்டது.கடந்த கால விளைச்சல்களில் கிடைத்த உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கை கூட பெற்றுக் கொள்ளமுடியவில்லை என்றும் பலரும் தெரிவித்துள்ளனர்.கால போகம் நிறைவு பெற்று மாவட்டத்தில் இருபத்தி ஐயாயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக செய்கை ஆரம்பிக்கபடவுள்ளது. இதற்கான முன்னாயத்த செயற்பாடுகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
விவசாயிகள் நிலப்பண்படுத்தலுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக் கொள்வதிலும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் இதற்கான ஒழுங்கு படுத்தல்கள் மாவட்ட செயலகத்தினால் செய்யப்பட்டிருந்தாலும் அதனை சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நடைமுறைப்படுத்தவில்லையென விவசாயிகள் குற்றஞ் சாட்டியுள்ளனர்.இவ்வாறு விவசாயத்தையே நம்பி வாழும் விவசாயிகள்; தொடர்ந்தும் இவ்வாறான பாதிப்புக்களை எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது,(வன்னியில் இருந்து சு.பாஸ்கரன்)
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·