-
R
- · 4 friends

வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.
ஆரம்பத்தில் அந்த மக்களிடம் ஒரு அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்திய நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம் என ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மூங்கிலாறு கிராமத்தையே உறைய வைத்த சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிந்துள்ளன.
கடந்த டிசம்பர் மாதம்; 15 ஆம் திகதி வீட்டில் இருந்து காணாமற்போன நிதர்சனா, தனது வீட்டிலிருந்து ஏறக்குறைய 400 மீற்றர் தொலைவிலுள்ள அவரது அக்காவின் வீட்டுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்ட நிதர்சனா, பின்னர் காணாமற்போனதாக அவரது குடும்பத்தினரால் ஆரம்பத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து கிராம மக்கள் பொலிசார் இரானுவத்தினர் எனப்பலரும் இனைந்து தேடுதல்களை மேற்கொண்ட விளைவாக நிதர்சனா உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டாள்.
அதாவது நான்கு நாட்களின் பின்னர் கடந்த 19ஆம் திகதி சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட இடம் ஏற்கனவே சிறுமி கானாமல் போனபின்னர் கிராம மக்களும் இராணுவத்தினர் போலீசார் இணைந்து தேடுதல் மேற்கொண்ட ஒரு பகுதி ஆனால் அப்பகுதியில் ஆரம்பத்தில் சடலம் இல்லை 19ஆம் திகதி குறித்த சடலம் எவ்வாறு அந்தப்பகுதிக்கு வந்துள்ளது என்று மர்மங்கள் தொடர்ந்த நிலையில் மேற் கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் இக்கதைகள் அனைத்தும் உண்மைகளை மறைப்பதற்காக உருவாக்கப்பட்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆரம்பத்தில் நிதர்சனா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரது சகோதரியின் கணவரை பொலிஸார் கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்களான தாய், தந்தை, அக்கா, மற்றும் மைத்துனர் முறைகொண்ட ஒருவர் ஆகியோரை தடுத்து வைத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்தனர்.
தொடராக இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சிறுமியின் தந்தை இந்தக் கொலை தொடர்பான பல திடுக்கிடும் உண்மைகளை வாக்குமூலமாக பொலிசாருக்கு வழங்கியிருந்தார்.
அதாவது தனது மகள் நிதர்சனா இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்ததாகவும் இதனை அறிந்த அவரது தாய் சிறுமியின் கருவை கலைக்கும் முயற்சியில் கருவை கலைப்பதற்கு சிறுமியை மயக்கமடைய செய்யும் நோக்கில், ஏதோவொரு மருந்து வழங்கப்பட்டதாகவும் அவரது தந்தையின் வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டதாகவும் குறித்த சிறுமி கருவினை கலைக்கும் முயற்சியின்போது அவர் உயிரிழந்திருக்கலாம் என்பது தற்போதைய விசாரணையில் தெரியவந்திருப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியின் பற்கள் கழன்று விழுந்திருந்தமை பிரேதப் பரிசோதனையின்போது தெரியவந்த நிலையில், மேலதிக பரிசோதனைக்காக பல்லின் மாதிரியொன்றை கொழும்பிற்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட சிறுமி நிதர்சனாவின் சகோதரியின் கணவரின் வீட்டிலும் தடயவியல் விசாரணைகள் முன்னெடுக்ப்படடமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு நீண்ட நேரம் நீரில் ஊறிய அடையாளங்கள் நிதர்சனாவின் உடலில் காணப்பட்டதால், அது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் இதனை கண்டறியும் நோக்கில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள சில கிணறுகளின் நீரை இறைத்து பொலிசார் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
இதே நேரம் விசாரணைகளின் பொருட்டு சம்பவ இடத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா சென்று பார்வையிட்டுள்ளதுடன் சிறுமியின் வீட்டிலும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட நீதவான், இளநீல நிற கறைபடிந்திருந்த மேசையொன்றினை சான்றுப்பொருளாக மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டிருந்தார்.
சம்பவ இடத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் எஜ்.சமுத்திரஜீவ மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கேரத் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி ஆகியோரும் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்தனர்.
திருகோணலையிலுள்ள பாடசாலையொன்றில் தரம் 7-இல் கல்வி கற்ற யோகராசா நிதர்சனாவின் நினைவாக அவர் பயன்படுத்திய கற்றல் உபகரணங்கள் மாத்திரமே இன்று அவரின் வீட்டில் எஞ்சியுள்ளன
ஒரு குழந்தை இவ்வுலகிலேயே பிறக்கும் போது, அக்குழந்தைக்கு சரியான அன்பும் அரவணைப்பும் கிடைக்கும் இடத்து அக்குழந்தை ஒரு நற்பிரஜையாக வளரும், மாறாக இவ்வாறான உரிமைகள் மறுக்கப்படுமிடத்து அக்குழந்தையினுடைய எதிர்காலம் வேறு திசையில் சென்றுவிடும்.
சிறுவர்களின் உடல் உள ஆளுமை வளர்ச்சிக்கு ஏற்றவாறு அவர்களது குடும்ப சூழல் அமைகின்ற போது, அக்குழந்தையினுடைய வளர்ச்சி எதிர்காலம் என்பன சிறப்பாக அமைகின்றது,
மாறாக, குடும்பச்சூழலில் காணப்படுகின்ற குறைபாடுகள் அக்குழந்தையினுடைய உடல் உள வளச்சியின் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.
அது போல பல கனவுகளோடு ஏதுமறியா பிஞ்சுள்ளம் புத்தகங்களை சுமந்து கல்வி கற்ற நிதர்சனாவிற்கு அவரது குடும்பத்தினரால் உரிய பாதுகாப்பு வழங்கப்படாது அவருடைய வாழ்வை சிதைக்கவும் அன்பும் அரவணைப்பும் வழங்க வேண்டிய அவரது குடும்பம் உயிரை பறிப்பதற்கே காரணமாக இருப்பதாக இந்த விசாரணைகளில் தெரிய வந்திருக்கின்றது. ( பாஸ்கரன்)

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga


- ·
- · அறிவோம் ஆன்மீகம்




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
