-
R
- · 4 friends

மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இருக்கமுடியும் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தெரிந்து கொள்வார்களா? என கடந்த 11 வருடங்களிற்கு மேலாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வரும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.
இவ்வாறு வாழந்துவரும் குடும்பங்கள் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த மழைக்காலத்தில் மட்டுமல்ல வறட்சி காலத்திலும் இந்த மக்கள் துன்பத்தையே எதிர்கொண்டு வருகின்றனர் என்பதை தினமும் கண்ணால் கான முடிகின்றது.
யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து யுத்தம் நிறைவடைந்து இயல்பு வாழ்க்கை திரும்பியிக்கின்ற காலத்திலும் இவர்களது வாழ்வு இப்படியே தான் இருக்கின்றது.
இவ்வாறு வீட்டுத்திட்டங்களின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்ற மக்கள் கருத்துத்தெரிவிக்கும் போது, இந்த வருடத்தில் வீட்டுத்திட்டங்கள் தருவார்கள், அடுத்த திட்டத்தில் தருவார்கள் என்று அடிக்கடி பதிவுகளை செய்வார்கள், அரசியல்வாதிகள் பலர் வந்து உங்களுக்கு வீட்டுத்திட்டங்களை பெற்றுத் தருகின்றோம் பொருத்து வீடு வேண்டாம் கல் வீடு வாங்கித்தருவோம் என்றார்கள், ஆனால், எதுவும் நடக்கவில்லை.
எங்களின் வாழ்வு விலங்குகளின் வாழ்வை விட கேவலமான வாழ்வாகிவிட்டது எனக்குறிப்பிட்டனர்.
இவ்வாறு வீடுகளுன்றி வாழ்ந்த பெரும்பாலான குடும்பங்களுக்கு கடந்த 2018 ஆம் 2019 ஆம் ஆண்டுகளில் வீட்டுத் திட்டங்களை பெற்றுக் கொள்ளாத மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழுகின்ற குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டு தேசிய வீட்டமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீட்டுத் திட்டங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் எந்த வீட்டுக்கும் முழுமையான நிதி கிடைக்கவில்லை முதற் கட்ட இரண்டாம் கட்ட பகுதிக் கொடுப்பனவுகள் மாத்திரமே கிடைத்துள்ளது என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் இந்த வீட்டுத் திட்டங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவுறுத்த வேண்டும்; என்ற அழுத்தம் காரணமாக அதாவது பயனாளிகளுக்கு பிரதேச செயலாளர்கள் மற்றும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் அதைவிட மக்கள் பிரதிநிதிகள் இந்த வீடுகளை விரைவாக கட்டி முடிக்க வேண்டுமென்று வழங்கிய அழுத்தங்கள் காரணமாக அவர்கள் அந்த வீடுகளை அமைப்பதில் பெரும் சவால்களை சந்தித்தது மட்டுமல்லாது அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற குடும்பங்கள் இந்த வீட்டு திட்டத்திற்காக பட்ட கஸ்டங்கள் அவர்களுடைய வார்த்தைகளிலிருந்து வலிகளாக உணரமுடிகின்றது.
குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டுத் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற காரணத்திற்காக தங்களிடமிருந்தவற்றையும் விற்றும் வங்கிகளில் கடன் பெற்று அதற்கு மேலாக நுண்நிதி நிறுவனங்களிடம் இருந்தும் பெருந்தொகையான கடன்களை பெற்று இந்த வீடுகளை கட்டுவதற்கு கஸ்டங்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள். ஆனால் இந்த வீடுகளுக்கு முதல்கட்ட கொடுப்பனவு மற்றும் இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன.
இதனால் இந்த வீடுகள் இதுவரை முழுமை பெறாத நிலையில் இன்று வரை காணப்படுகின்றன. இந்த பயனாளிகள்; கடந்த மூன்று ஆண்டுகளாக கடன் சுமைகளோடும்; வீடுகள் இன்றியும் வாழுகின்ற நிலமை காணப்படுகின்றது. இப்போது கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள மழை வெள்ளம் காரணமாக இந்த மக்கள் பெரும் கஸ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கான மிகுதி கொடுப்பனவுகள்; இன்று கிடைக்கும் நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு மூன்று ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆனால் நிதி கிடைக்கவும் இல்லை வீடுகட்டி முடிக்கவும் இல்லை.
கடந்த ஆண்டில் 2021 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுகள்; இராஜாங்க அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டு உரையாற்றிய போது உள்ளது. கடந்த 2018ம் 2019 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் மன்னார் மாவட்டத்தில் 2691 வீடுகளும் வவுனியா மாவட்டத்தில் 2678 வீடுகளும் மன்னார் மாவட்டத்தில் 1313 வீடுகளும் முற்றுப்பெறாத நிலையிலுள்ளன.
இதற்காக 2987.53 மில்லியன் தேவைப்படுகின்றது என்றும் இதற்கான நிதியை விடுவித்து உதவ வேண்டும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
இதே வேளை கிளிநொச்சி மாவட்டத்தில் இதே போன்று 5147 வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்காக 1958 மில்லியன் ரூபா நிதி தேவையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு நான்கு மாவட்டங்களிலும் 11ஆயிரத்து 829குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்வாறு வீட்டுத்திட்டங்களை நம்பி குடியிருக்க முடியாத தற்காலிக கொட்டகைகளில் அதிக வெயிலில் காலங்களிலும் மழைகாலங்களிலும் நின்மதியாக வாழமுடியாத குடும்பங்களுக்கு வீடுகள் என்பது இன்று மிக முக்கியமான தேவையாகவுள்ளது.
நன்றி:
சு. பாஸ்கரன்

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga


- ·
- · அறிவோம் ஆன்மீகம்




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva
