- · 5 friends
-
I

இன்று நீ! நாளை நான்! (குட்டிக்கதை)
நடுநிசியில் நித்திரையிலிருந்து விழித்தெழுந்த சடகோபனுக்கு யாரோ வீட்டின் கதவை தட்டுவது போல கேட்டது. சட்டென எழுந்த அவர் வாசற்கதவை திறந்து பார்க்க ,அங்கே குப்பென்று வீசியது சிகரெட் நாற்றம், ஆனால் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எவருமே இல்லை...
ஒரு நொடியில் அரண்டு போன சடகோபன் செய்வதறியாது தெருக் கதவை சாத்த முயல, அவரது கைகள் துவண்டு வலுவிழந்தன. யாரோ தன்னை மீறி உள்ளே செல்வது போல் தோன்றவே வாய்விட்டு அலறினார் சடகோபன்.
"ஏங்க என்ன கெட்ட கனவா ? ஏன் இப்படி கத்துறீங்க?" என தூங்கிக் கொண்டிருந்த கணவன் சடகோபனை எழுப்பினாள் பூங்கோதை . இது வெறும் கனவுதான் என தெரிந்தாலும் அதை நம்ப மறுத்தது அவரது மனம் .. அவர் இதயமோ அதிவேகமாய் துடித்திட ,தூக்கமற்ற நிலையும் அவரை பின் தொடர்ந்தது.
விடிந்தபின் கண்ணயர்ந்து தூங்கிய சடகோபனை சாவு மேளம் தட்டி எழுப்ப, கலக்கத்துடன் மனைவியை பார்த்தார் சடகோபன்.
"பாவம்..பக்கத்து வீட்டு இளங்கோ போயிட்டாருங்க" என்று மனைவி கண் கலங்கியவாறு சொல்ல அதிர்ந்தார் சடகோபன்.
நேற்று இரவு வரை ஓடிஆடி நடமாடிக் கொண்டிருந்த மனிதர், இன்னும் சிறிது நேரத்திற்குள் கண்ணாடி பெட்டிக்குள்ளே அடங்க போகிறார்... நம்ப மறுத்தது மீண்டும் அவரது மனம்..
பூங்கோதை அவரைப் பார்த்து "நம்ப முடியலைங்க.. அவர் உயிர் பிரிந்த நேரம் நீங்க நடு சாமத்துல கத்திக்கிட்டே எழுந்திருச்சிங்களே அதே நேரம் தான்" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து போனாள் பூங்கோதை
சடகோபனின் நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன
நண்பன் இளங்கோவுடன் இவருக்கு நாற்பது வருட நட்பு. ஒரே வீட்டுமனையை வாங்கி, இரு வீடுகளை ஒட்டியே கட்டியது இவர்களது நெருங்கிய நட்பிற்கு ஓர் அடையாளம் .. ஆனால் பல வருடங்கள் கழித்து அதே வீட்டு மனை இருவரிடையே இட ஒதுக்கீட்டில் பிரச்சனைகளை ஏற்படுத்தி அவர்களை பிரிக்கவும் செய்தது.
பகைமையை வளர்த்துக் கொண்டு, இளங்கோவுடன் பேசியே பத்து வருடங்கள் ஆனாலும், இன்று ஏனோ பரிதவித்தது இந்த பாவி மனம்.
அவரது நினைவுகளை கலைப்பது போல், வாசலில் வந்து நின்றான் இளங்கோவின் பதினைந்து வயது மகன் அபிநவ்.
"ஐயோ! அங்கிள்! அப்பா எங்கள விட்டுட்டு போயிட்டாரு !" என அவன் கதறிய கதறலில் துடித்து போனார் சடகோபன்.
ஓடி வந்து அவனை அப்படியே தாங்கிப் பிடித்து சட்டென இளங்கோவின் வீட்டிற்குள் நுழைந்தார் சடகோபன்.. இறந்து கிடந்த நண்பனின்
உணர்வற்ற கால்களை தன் கைகள் நடுங்கியபடி தொட்டார். சில்லிட்ட அந்த கால்களின் மேல் சொட்டியது அவரது கண்ணீர்.
"நல்ல மனிதன் தான். அந்த பாழாய் போன புகைப் பழக்கம் .. ஆளை சீக்கிரமாகவே கொண்டு போயிடுச்சு" என்று யாரோ சொல்வது காதில் விழ, இறந்த உடலை குலுக்கினார் சடகோபன்.
"ஏன்டா இப்படி செஞ்ச? பத்து வருஷமா என்னோட பேசாம இருந்தியே! அப்படியே போக வேண்டியது தானே.. இப்ப மட்டும் சாகப் போறேன்னு வந்து சொல்லிட்டு போனியா ? " என தலையில் அடித்துக் கொண்டு அழ, அதற்கு பதில் அளிப்பது போல் "அண்ணே! உங்க தோழனை அந்த எமனுக்கு விட்டுக் கொடுத்துடீங்களே! இனி யார் இருக்கா எங்களுக்கு?" என அலறி கொண்டே ஓடி வந்து காலில் விழுந்தாள் இளங்கோவின் மனைவி மகேஸ்வரி.
சடகோபனை கண்ட இளங்கோவின் பிள்ளைகள் மூவரும் அழுது கொண்டே அவரை சுற்றிக் கொண்டனர் இளங்கோவின் பதினாறு வயது மகள் ஸ்ருதி சடகோபனை கட்டிப்பிடித்து அழ ஆரம்பித்தாள். வெடித்தது அவரது இதயம். வேற்றுமை தெரியாத இந்த உறவுக்கு பெயர் என்ன? நான் என்ன இந்த பெண் பிள்ளைக்கு அந்நிய ஆணாக தெரியவில்லையா? இரத்த சொந்தம் இல்லாத உயர்ந்த நட்பென்ற உறவின் அடையாளம் தானா இது? இவர்களை தள்ளி வைத்து தவறு செய்து விட்டேனே" என எண்ணி ஓவென வீடே அதிரும்படி கத்தினார் சடகோபன்.
இரு வீட்டிற்கும் இடையே தடுப்பு சுவர் இல்லாததால் வாசற் தெளிக்கும் தண்ணீரும், பூத்தொட்டிகளில் ஊற்றும் தண்ணீரும் ஒருவர் வீட்டில் இருந்து மற்றொருவர் வீட்டுக்கு ஓடி செல்ல, சுனாமி அலையாய் மாறியது சண்டை. இருவரின் மனைவிகளிடையே மோதல்..
காலத்தின் கொடுமை.. இதோ அவ்விருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்...
அங்கே அடித்த பறையின் ஒலியோ சடகோபனுக்கு அவரை சாட்டைக் கொண்டு அடிப்பது போல் தோன்றியது..
நேற்று இருந்தவன் இன்று இல்லை.. இந்த அடங்கப் போகும் வாழ்க்கையில் நமக்குள் ஏனடா அத்தனை ஆர்ப்பாட்டம்? அழிச்சாட்டியம்?
நண்பா! இன்று நீ! நாளை நான்! இதுவே வாழ்க்கையின் நியதி! இன்றைய காலகட்டத்தில் ஆடி அடங்கும் நம் வாழ்க்கையிலே ஆறடி நிலம் கூட சொந்தமில்லை. இதில் ஒன்றரை அடி இடத்திற்காக கூட வெட்டு குத்து .
இன்று மன்னிப்பு கேட்பதால் மாண்டவன் வருவானா? மெல்ல எழுந்து நண்பனின் இறுதிச் சடங்கை நிறைவாக தன் செலவில் செய்ய ஆரம்பித்தார் சடகோபன்.. இதோ இரு வீட்டுப் பிள்ளைகளும் ஒன்றாய் கூடி ஈம சடங்குகளை செய்தனர். இங்கே நண்பன் உடலை குளிப்பாட்டிய தண்ணீர் வேகமாக சடகோபனின் வீட்டு வாசலை தேடி ஓடியது. இவன் இறந்த பின்பும் நம்மிடம் வந்து வம்பு இழுக்கிறானோ? என தோன்ற அருவியென கொட்டியது கண்ணீர்.
அந்த நீரையே உற்றுப் பார்த்தார் சடகோபன்.. தேங்கிய அந்தத் தண்ணீரில் மங்கலாக வந்து மறைந்தது நண்பன் இளங்கோவின் உருவம்.

அந்த நீரையே உற்றுப் பார்த்தார் சடகோபன்..
தேங்கிய அந்தத் தண்ணீரில் மங்கலாக வந்து மறைந்தது நண்பன் இளங்கோவின் உருவம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·