- · 5 friends
-
I

பிரச்சனைகளை தீர்க்கும் வழக்காதீஸ்வரர்
நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான். நம்முடைய கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய தெய்வமாக திகழ்பவர்தான் சிவபெருமாள். அதனால் சிவபெருமானை நாம் தஞ்சம் அடைந்து விட்டோம் என்றால் அவரின் அருளால் நம்முடைய கர்ம வினைகள் முதலில் தீரும். அப்படி தீரக்கூடிய கர்ம வினைகளால் நம்முடைய பிரச்சினைகளும் தீரும். இருப்பினும் ஒரு சில ஆலயங்களுக்கு நாம் சென்று வழிபாடு செய்யும்பொழுது அந்த கர்ம வினைகள் விரைவிலேயே தீர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு கோவிலை பற்றி தான் இப்பொழுது தெரிந்துக் கொள்ளப் போகின்றோம்.
இந்த கோவில் இந்தியாவில் - தமிழ்நாட்டில் - காஞ்சிபுரத்தில் இருக்கிறது. சின்ன காஞ்சிபுரம் என்று கூறக்கூடிய இடத்தில் இந்த சிவபெருமானின் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு வழக்காத்தீஸ்வரர் என்ற திருநாமம் இருக்கிறது. பொதுவாக இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுடைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உண்டாகும் என்று பரவலாக அறியப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வழக்குகள் மட்டுமல்லாமல் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளும் தீர வேண்டும் என்றால் இந்த ஆலயத்திற்கு சென்று இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதற்கென்று சில வழிமுறைகளும் இருக்கின்றன.
இந்த வழிபாட்டை திங்கட்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். முதல் நாளே வீட்டில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் பட்டியலிட்டு எழுதிக் கொள்ளுங்கள். மறுநாள் திங்கட்கிழமை அன்று காலையில் அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு நேராக இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இந்த அந்த ஆலயத்தில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமானுக்கு முன்பாக 16 அகல்விளக்குகளில் 16 தீபங்களை ஏற்ற வேண்டும். முடிந்தவர்கள் அந்த 16 தீபங்களையும் மாவிளக்கு தீபமாக ஏற்றலாம்.
அதே போல் உங்களால் இயன்ற சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். உதாரணமாக வில்வ இலைகள், மலர்கள், அபிஷேகத்திற்குரிய பொருட்கள் என்று தங்களால் எதுவெல்லாம் வாங்கித் தர இயலுமோ அவை அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு நாம் எழுதி வைத்திருந்த அந்த பிரச்சினையை நிறைந்த கடிதத்தையும் சிவபெருமானின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். பிறகு சிவபெருமானை 16 முறை வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் அந்த ஒரே கடிதத்தை வைத்து சிவபெருமானை வழிபாடு செய்ய சிவபெருமானின் அருளால் அந்த கடிதத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக தீர ஆரம்பிக்கும்.
வழக்குகளோ, பிரச்சனைகளோ, கஷ்டங்களோ எதுவாக இருந்தாலும் சிவபெருமானிடம் சமர்ப்பணம் செய்து விட்டால் போதும் அவரின் அருளால் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·