- · 5 friends
-
I

அற்புத சத்துக்கள் அடங்கியிருக்கும் முருங்கை பிசின்
முருங்கை மரத்தில், சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் போன்றவை அதிகமாகிவிட்டால், மரத்திலிருந்து பசை போன்ற பொருள் வெளித்தள்ளும்.. இதற்கு பெயர்தான் பிசின்.. சிவப்பு நிறத்திலும் காணப்படும் இந்த பிசினில், தங்கபஸ்பத்திற்கு இணையான சத்துக்கள் உள்ளது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? இந்த பிசினை சாப்பிடுவது எப்படி? யாரெல்லாம் சாப்பிடலாம்? எப்படி சாப்பிடலாம்?
மரத்திலிருந்து வெளியேறியதுமே பிசுபிசுப்பாக இருந்தாலும், நாளடைவில் கெட்டியாகிவிடும். Drumstick Tree Resin அல்லது Moringa Oleifera Resin என்று சொல்வார்கள். நேரடியாக மரத்திலிருந்து பெற முடியாவிட்டாலும், நாட்டு மருந்து கடைகளில் முருங்கை பிசின் விற்கப்படுகிறது.. இந்த பிசினில் வைட்டமின் A, C, பொட்டாசியம், புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வேதிப்பொருள்கள், தாது உப்புகள், நார்ச்சத்துக்கள் உள்ளன..
இது கெட்டியாக இருக்கும் என்பதால், 2 விதங்களில் பயன்படுத்த வேண்டும். பிசினை நன்றாக கழுவி, சுத்தமான தண்ணீரில் இரவில் ஊறவைத்து விட வேண்டும். காலையில், நன்றாக ஊறி இளகிய தன்மையுடன் ஜெல்லி போல வந்துவிடும். அல்லது பிசின் பவுடரை, இரவில் ஒரு ஸ்பூன் நெய்யில் லேசாக வறுத்துவிட்டு, அதற்கு பிறகு, தண்ணீர் ஊற்றி இரவு முழுக்க ஊறவைக்கலாம்.
ஆண்கள், பெண்களுக்கு மருந்தாகும் பிசின்
இரவெல்லாம் ஊறிய பிசினிலுள்ள தண்ணீரையும் கீழே கொட்டிவிடாமல், பால் கலந்து ஆண்கள் குடித்து வந்தால், நரம்பு தளர்ச்சி நீங்கும்.. இந்த தண்ணீரை வடி கட்டி குடிக்கலாம்.. சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தும் சாப்பிடலாம்.
இந்த பிசின் உடலில் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். கால்சியம் அதிகமாக இருப்பதால், கை கால் குடைச்சல், முழங்கால் வலி, மூட்டு வலிகள் விலகும்.. இரும்புச்சத்து உள்ளதால், பெண்கள் இந்த பிசினை தவறவிடக்கூடாது. அதிகமாக ரத்தப்போக்கு இருந்தாலோ அல்லது ரத்தசோகை பிரச்சனை இருந்தாலோ அனைத்துக்கும் இந்த பிசின் மருந்தாகிறது.
தலைவலி, காதுவலி, இளநரை
முருங்கை பிசினை இரவு ஊறவைத்துவிட்டு, வெறுமனே அந்த தண்ணீரை குடிப்பதால், ஆற்றலும், புத்துணர்ச்சியும் கிடைக்கும். ஊறவைத்த பிசினை கொண்டு, கடுமையான தலைவலிக்கு பற்று போடலாம். காது வலியால் அவதிப்படுபவர்கள், முருங்கை பிசினை ஊறவைக்காமல், பச்சையாகவே, காதில் ஒரு சொட்டு விட்டால் வலி குறைந்து தீர்வு கிடைக்கும்.
முருங்கை பிசினை பாலில் கலந்து கொதிக்க வைத்து பனங்கற்கண்டு சேர்த்து சுண்டக் காய்ச்சி குடிப்பதால், சளி, இருமல் பிரச்சனை தீரும். வாய்வுத் தொந்தரவு, அடிக்கடி தலைவலி போன்றவற்றை சரி செய்யவும் இந்த பிசின் உதவும். ஒரு ஸ்பூன் முருங்கை பிசின் பொடியை வெந்நீரில் கலந்து அருந்துவதன் மூலம் வாயு, தலைவலி பிரச்சனை குணமாகும்.
தலைமுடி உதிர்தல் பிரச்சனை இருந்தால், இளநரை பிரச்சனை இருந்தால், முருங்கைக்கீரை கை கொடுத்து உதவும் என்று அனைவருக்குமே தெரியும். ஆனால், முருங்கை பிசினும் இதற்கு நிவாரணம் தருகிறதாம்.
ஆய்வுகளில் ஆச்சரியமான தகவல்கள்
Institute of Pharmacy and Technology, cuttack birla institute of technology institute of pharmacy இணைந்து சமீபத்தில் நடத்தப்பட்டிருந்த ஆய்வில், முருங்கை பிசின் குறித்து பல்வேறு ஆச்சரிய தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
இந்த பிசினில் ஆக்ஸிஜனேற்றம், திசு பாதுகாப்பு, வலிநிவாரணி போன்ற பல உயிரியல் செயல்பாடுகள் மட்டுமின்றி, பாலிபினால்கள், ஃபீனாலிக் அமிலங்கள், பிளாவனாய்டுகள், குளுக்கோசினோலேட்டுகள், ஆல்கலாய்டுகளும் அதிகமாக காணபபடுகின்றன. எனவே, உடலில் காயங்கள், புண்கள், தொற்றுக்கள் போன்றவற்றிலிருந்து விடுபட இந்த பிசின் நமக்கு உதவுகிறதாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?
சர்க்கரை நோயாளிகளும் முருங்கை பிசின் சாப்பிடுவதால், உடலில் சர்க்கரை அளவில் நல்ல மாற்றத்தை காண முடியும்.. முருங்கை பிசினை தூளாக இடித்து பாலில் கலந்து அதனுடன் கற்கண்டு சேர்த்து குடிப்பதால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறி முகமும் பொலிவுடன் காணப்படும்.
முருங்கைப்பூ, காய், இலை, விதைகள் பற்றின பயன்பாடுகள் நிறைய பேருக்கு தெரியும் என்றாலும், முருங்கை மரத்திலிருந்து கிடைக்கும் பிசின் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்பது வேதனையான விஷயம். எனவே, மருத்துவர்களின் உதவியுடன் இந்த பிசினை உணவில் சேர்த்து கொள்ளலாம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·