- · 5 friends
-
I

மதுரை மீனாட்சி அம்மன்
புராணங்களின்படி, மதுரையை ஆண்ட மீனாட்சி அம்மன் மங்கலான நிறம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது. மங்கலான பெண்கள் முகத்தில் மஞ்சள் பூசும்போது, அவர்களுக்கு பச்சை நிறம் கிடைக்கும். அதனால் தான் மீனாட்சி அம்மன் பச்சை நிறமாகக் காட்டப்படுகிறார்.
மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது.ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக.அன்னை கையில் ஏந்திய கிளி, அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும்
ஏனென்றால் கிளி பேசுவதை திருப்பி பேசும். அதைப் போல் பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும்.இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும்.
அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும். சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும். ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ர பாண்டியனுக்கு முடிசூட்டிய பின், சொக்க நாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்று விட்டாள்.
அதனால் சுயம்பு அன்னை.
இங்கு கர்ப்பகிரகத்தில் அன்னையின் விக்ரகம், உயிருடன் இருக்கும் ஒரு பெண்ணைப் பார்ப்பது போல் இருக்கும்.அன்னையே, சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை, பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல் இருக்கும்.அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும். சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணங்க வேண்டும்.பின்னர் தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.
ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில் மதுரை.
இங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால், மதுரைக்கு வந்தாலே முக்தி. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும். வாழ்நாளில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·