Category:
Created:
Updated:
I
1939ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பாக நேதாஜி காந்திஜியிடம் ஒரு நாடு தழுவிய போராட்டம் நடத்துமாறு கேட்டுக்கொண்ட போது, காந்திஜி நாட்டில் பரவலான வன்முறை வெடித்து விடும் என்று காரணம் காட்டி மறுத்து விட்டார். அப்போது நேதாஜியின் நண்பர்கள் அவரே ஏன் அந்தப் போராட்டத்தைத் தொடங்கக்கூடாது என்று வினவ அதற்கு நேதாஜி
'நான் அழைத்தால் 20 லட்சம் மக்கள் என் பின்னே வரக்கூடும்.
ஆனால் காந்திஜி அழைத்தாலோ 20 கோடி மக்கள் திரண்டு வருவார்கள் ' என்றாராம்.
பின்னர் ஒரு முறை
'நான் எல்லோருடைய நம்பிக்கையையும் பெற்று இந்தியாவின் தலைசிறந்த மனிதனான காந்திஜியின் நம்பிக்கையை மட்டும் பெறவில்லையென்றால் அதைவிட மிகப் பெரிய சோகம் வேறொன்றுமில்லை ' என்று கூறினாராம்.
1939ம் ஆண்டிற்குப் பிறகு காந்திஜியும் நேதாஜியும் சந்தித்துக்கொள்ளவேயில்லை.