Support Ads
 ·   ·  1561 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

அனுபவம் (குட்டிக்கதை)

ஒரு தொடர் வண்டியின் ஒரு பெட்டியில் தலை நரைத்த ஒரு முதியவர் மட்டும் பயணம் செய்து கொண்டிருந்தார்..

*அடுத்து வந்த ஒரு நிறுத்தத்தில் 10-15 இளைஞர் பட்டாளம் ஏறியது..மீண்டும் வண்டி வேகம் எடுத்து ஓட தொடங்கியது..

*இளைஞர்கள் என்றாலே,கூத்தும் கும்மாளமும்தானே.அதிலும் இன்றைய இளைஞர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம்..

*அவர்களின் ஒருவன்,டேய்! நாம வண்டியின் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்துவோமா..!?

*ஓஓ, நிறுத்தலாம்டா!!

*வண்டி நின்றதும் TTE வந்து விசாரிப்பாரே..அபராதம் போடுவாரே!

*அதையெல்லாம் சமாளிக்கலாம்டா! நீ இழுடா!! இவன் கிடக்கிறான்.

*அதில் ஒருவன் மட்டும் (என்னை மாதிரி பயந்தாங்கொள்ளின்னு வச்சுகங்களேன்) எதற்கும் அபராத தொகையை ரெடியா வச்சுக்கலாம்..

*இதுவும் நல்ல யோசனைதான்..யார் யார்கிட்ட எவ்வளவு பணம் இருக்கு..எடுங்கடா..

..எல்லாருமா சேர்ந்து 1500/- ரூபாய் சேர்த்து ஒருவனிடம் கொடுத்துட்டு...யோவ்,பெருசு உன்கிட்டே இருக்கிறதையும் கொடு..

...என்கிட்ட பணம் ஏதும் இல்லையேப்பா என்று அந்த முதியவர் சொல்ல...அதற்குள் ஒருவன்

...டேய்! இந்த பெருசு பணம் தரமாட்டேங்கிறார்டா..பேசாம இந்த பெருசை மாட்டி விட்டுறுவோம்,இவர்தான் சங்கிலியை இழுத்தார் என்று...

*அருமையான ஐடியாடா..நமக்கு ஜாலிக்கு ஜாலியுமாச்சு..பணமும் மிச்சம்.இந்த பெருசு என்ன செய்வார்னு பார்ப்போம்..

ுவன் சங்கிலியை பிடித்து இழுக்க,தொடர் வண்டி நின்றது..

..சிறிது நேரத்தில் அங்கே வந்த TTE, யார் சங்கிலியை இழுத்தது..ஏன் இழுத்தீர்கள்!!?

**அதோ அந்த பெரியவர்தான் சங்கிலியை இழுத்தார்..நாங்களும் எவ்வளவோ சொன்னோம்..ஏன் இழுக்கிறீர்கள் என்று கேட்டோம் என்று கோரஸாக அந்த இளைஞர்கள் சொன்னதும்..

*TTE, என்னாச்சு பெரியவரே! ஏன் வண்டியை நிறுத்துனீர்கள்..தகுந்த காரணம் இல்லாமல் சங்கிலியை இழுத்தால் அபராதம் கட்ட வேண்டும் என்று தெரியாதா..

அந்த பெரியவர் சொன்ன பதில்தான் இந்த கதையின் க்ளைமேக்ஸ்.....

நான் என்ன செய்வது சார்..நானோ கூலி வேலை செய்கிறவன்..கஷ்டப்பட்டு சம்பாதித்த என்னுடைய பணம் 1500/- ஐ இந்த பசங்க எல்லோருமாக சேர்ந்து என்னிடமிருந்து பிடுங்கி கொண்டார்கள்...ஊர் வந்ததும் இறங்கி என் பேரப்பிள்ளைகளுக்கு தீபாவளிக்கு_துணிமணி எடுக்கனும்..அதற்காகத்தான் சங்கிலியை இழுத்து வண்டியை நிறுத்தி புகார் கொடுக்கலாம் என்று நினைத்தேன்..நீங்க வேணா பாருங்க சார், அதோ அந்த பையன் பாக்கெட்டில் 1500 ரூபாய் இருக்கும்..

அப்புறம் என்ன! அடுத்த ஸ்டேஷனில் வண்டி நின்றதும் அங்கிருந்த RPF அந்த இளைஞர்களை கொத்தாக அள்ளிக் கொண்டு போக..தொடர் வண்டி அந்த " நரை முடி முதியவருடன்" தன் பயணத்தை தொடர்ந்தது..!!

தன் சட்டை பையில் 1500 பணத்துடன் அந்த "பெரியவர்"......

  • 68
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய