- · 5 friends
-
I
ஆபிரகாம் லிங்கனின் கருணை (குட்டிக்கதை)
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கனின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம்.
லிங்கன் ஒருநாள் தன் கோச்சு வண்டியில் தலைநகர் வாஷிங்டன் சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் சென்று கொண்டிருந்த சாலையின் பக்கத்திலே சதுப்புநில புதைகுழி ஒன்றிருந்தது. அந்தப் புதைகுழியில் பன்றிக் குட்டி ஒன்று தவறி விழுந்து அதிலிருந்து மீள முடியாமல் போராடித் தவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்.
உடனே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அந்த சகதியில் கால் வைத்து ஒருவாறு பன்றிக் குட்டியைப் புதை குழியினின்று மீட்டார்.
பன்றிக் குட்டியைச் சற்று தூரத்தில் விட்டார். துள்ளிக் குதித்து ஓடியது பன்றி.
ஆபிரகாம் லிங்கனின் உடம்பெல்லாம் சகதி. ஆடையெல்லாம் அழுக்கு, வெள்ளை மாளிகையில் இச்செய்தி பரவ அனைவரும் ஜனாதிபதியின் உயிர் இரக்கத்தைப் பாராட்டினார்.
லிங்கன் சொன்னார். தயவு செய்து என்னைப் புகழாதீர்கள்.
அந்த சின்னப் பிராணி சகதியிலே சிக்கிக்கொண்டு பரிதவித்துத் துடித்தது. அதைக் கண்ணுற்றதும் என் நெஞ்சத்தில் ஒரு நெருஞ்சி முள் குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது. என் நெஞ்சில் பாய்ந்த முள்ளை நீக்கினேன். அவ்வளவுதான்.
உண்மையிலே அந்தப் பிராணிக்கு நான் உதவினேன் என்பதைவிட எனக்கு ஏற்பட்ட இன்னலைப் போக்கிக் கொண்டேன் என்பதுதான் உண்மை.
பண்புகளில் தலைமையிடம் வகிக்கும் கருணையைத்தான் அனைத்து மதங்களும் ஆண்டவனுக்குச் செய்யும் ஆராதனையாகக் குறிப்பிடுகின்றன.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·