-
- 3 friends
இன்றைய ராசி பலன்கள் - 11.1.2025
மேஷம்
வெளியூர் வர்த்தகப் பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
ரிஷபம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வியாபாரத்தில் வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். வாகனம் சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்
மிதுனம்
மற்றவர்களின் குறைகளை மாறுபட்ட முறையில் சுட்டிக் காட்டுவது நல்லது. சக ஊழியர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. எதிர்பார்த்த தனவரவுகள் காலதாமதமாகி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். உலக வாழ்க்கை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கடகம்
மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகளில் சில நிறைவேறும். பெற்றோர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரிய எண்ணங்கள் பலிதமாகும். வியாபாரத்தைப் பெருக்குவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன்
சிம்மம்
உறவினர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். வியாபார பணிகளில் ஒத்துழைப்புகள் மேம்படும். வீடு மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மனதில் மேம்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். தொழில் சார்ந்த புதிய முயற்சிகள் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவருடன் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். நிதானம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கன்னி
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்கள் அறிவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் உண்டாகும். தந்தையுடன் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
துலாம்
உடன் பிறந்தவர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழல் ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உங்கள் மீது சிறு சிறு வதந்திகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். வியாபாரப் பணிகளில் விடாப்பிடியான செயல்களை குறைத்துக் கொள்ளவும். சிறு தூர பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
விருச்சிகம்
கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுக்களை பெறுவீர்கள். நண்பர்களின் உதவி மூலம் இழுபறியான சில காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
தனுசு
காப்பீடு தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். முக்கியமான முடிவுகளில் விவேகத்துடன் செயல்படவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு
மகரம்
உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், தன்னம்பிக்கையும் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
கும்பம்
வியாபார பணிகளில் லாபகரமான சூழ்நிலை காணப்படும். தாயாருடன் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். வங்கிப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். அரசு தொடர்பான புரிதல்கள் மேம்படும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மீனம்
உறவினர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். கலைத்துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். தோற்றப் பொலிவில் மாற்றம் ஏற்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். வரவுகளை மேம்படுத்துவது குறித்த எண்ணங்கள் கைகூடும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·