- · 5 friends
-
I
கடவுள் (குட்டிக்கதை)
பெரிய மகான் ஒருவர் ஊருக்கு வந்திருந்தார். இரண்டு பொண்ணுங்க தினமும் அவரை போய் பார்த்துட்டு ஆசீர்வாதம் வாங்கிட்டு வர்றாங்க. ஒரு பொண்ணு நல்லகுணம்.இன்னொரு பொண்ணு கொஞ்சம் கெட்ட குணம்.
கெட்ட குணம் இருக்கிற பொண்ணுக்கு மகான் முதல்ல இங்கே வாம்மா!ன்னு கூப்பிட்டு பிரசாதம் கொடுத்து அனுப்பி வைத்தார். நல்ல குணம் இருக்கிற பொண்ணுக்கு காக்க வச்சு கடைசியில ஆசீர்வாதம் பண்ணி அனுப்பினார்.
பத்து நாளைக்கு மேல இதேபோல நடக்கவும்,நல்லகுணம் இருக்கிற பொண்ணுக்கு தாங்க முடியல. என்ன சாமி? ரெண்டு பேரும் ஒண்ணா வரோம்.அவரை பத்தி ஓரஞ்சாரமா தெரிஞ்சிருந்தும் அவளை மட்டும் படக்குனு கூப்பிட்டு ஆசீர்வாதம் பண்ணி அனுப்பி வச்சீங்களே? என்று மன வருத்தத்தை கொட்டிவிட்டார்.
அதற்கு மகான் சிரித்துக்கொண்டு, அட பொண்ணு! அவளை எனக்கு ரொம்ப நேரம் பார்க்க பிடிக்கவில்லை. அதனால் அவளை உடனே ஆசீர்வதித்து அனுப்புறேன் ஆனா உன்ன ரொம்ப நேரம் பார்த்து உன் கூட இருக்கணும்னு தோணுது அதனால உன்னை ரொம்ப நேரம் என் கூட இருக்கிறதுக்கு அனுமதிக்கிறேன் என்று சொன்னாராம்.
அதே போல தான் கடவுள் கெட்டவர்களுக்கு நல்லா கொடுப்பாரு! ஆனா சீக்கிரம் ஓடுன்னு டாட்டா காமிச்சு அனுப்பி வச்சுருவாரு.நல்லவங்களை தன் கூடவே வச்சிக்கிறாரு.
எல்லா வேதங்களிலும் சொல்வது இதுதான். எவனொருவன் பிறரிடத்தில் அன்பாக இருக்கிறானோ, தரும காரியங்கள் செய்கின்றானோ அவன் எனக்கு அருகில் இருப்பான்! என்கிறார் கடவுள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·