Support Ads
 ·   ·  1542 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ஜனகர் (குட்டிக்கதை)

ஜனக மகாராஜாவை அறிந்திருப்பீர்கள்...

ஸ்ரீ ராமபிரானின் மாமனார் அவர்.

சீதாபிராட்டியாரின் அருமை தந்தையார்.

ஜனகரின் மகள் என்ற காரணத்திற்காக சீதா பிராட்டியாருக்கு ஜானகி என்ற சிறப்பு பெயரும் உண்டு.

ஜனக மகாராஜா வெறும் அரசராக மட்டும் இருக்கவில்லை.

சிறந்த கல்விமானாகவும் விளங்கினார்.

ஞானத்திலே உயர்ந்தவர்.

தவத்திலே சிறந்தவர்.

வாழ்நாள் முழுவதும் புண்ணிய கைங்கரியங்களன்றி மற்றதை சிந்தையாலும் நினைக்காதவர்.

வாழ்நாள் முழுவதும் நிறைவாழ்வு வாழ்ந்து பெருமை பெற்ற ஜனகர் மனிதர்கள் எல்லோரையும் போல் ஒரு நாள் மரணம் அடைந்தார்.

ஜனகர் புண்ணிய வாழ்வு வாழ்ந்த பெருமான் எனவே அவர் சாமானிய மனிதர்களைப் போல பூத உடலை நீத்தாலும் தெய்வீக உடலை பெற்றார்.

மகான்களும் மகரிஷிகளும் புண்ணிய செல்வத்தை சேர்த்த பெருந்தகையாளர்களும் வாழும் மோட்சலோகத்திலிருந்து ஜனகரை அழைத்துச் செல்ல பொன் விமானம் ஒன்று மண்ணுலகுக்கு வந்தது.

பொன் விமானத்தில் ஏறி ஜனகர் மோட்சலோகத்துக்கு புறப்பட்டார்.

வானுலகத்தை நோக்கி விமானத்தில் விரைந்து கொண்டிருந்த ஜனகர் நெடுந்தொலைவை கடந்த பிறகு ஓரிடத்தில் பெருங்கூச்சல், அழுவதை கண்டு சாரதியை நோக்கி விமானத்தை சற்று நிறுத்தச் சொன்னார்.

ஓசை வந்த இடத்தை உற்று நோக்கினார்.

அது நரகலோகம் பாவங்கள் செய்த காரணத்தால் பாவிகள் ஆகிவிட்ட ஜீவன்கள் நரகலோகத்தில்

எம வேதனைகளை சகிக்க முடியாமல் பரிதாபமாக அலறிக் கொண்டிருந்தன.

அந்த காட்சி ஜனகரின் உள்ளத்தை பாகாய் உருக்கியது.

எமதூதர்கள் பாவிகளுக்கு தரும் கொடிய தண்டனைகளையும் அந்த வேதனை தாழமாட்டாது நரகவாசிகள் ஓலமிடும் காட்சியையும் கண்டு ஜனகர் கண்கலங்கினார்.

ஜனகர் சாரதியை நோக்கி அன்பரே ரதத்தை நரக லோகத்தை நோக்கி செலுத்தும்.

நான் நரகலோகத்திலேயே தங்கி பரிதாபத்துக்குரிய பாவம் ஜென்மங்கள் கடைத்தேற உழைக்கப் போகிறேன் என்றார்.

சாரதி திகைத்துவிட்டான்.

மேலான மோட்சலோகத்தின் இன்ப வாழ்வினை உதறித் தள்ளிவிட்டு நரக லோகத்துக்குச் செல்ல விரும்பும் ஒருவரை இதற்கு முன் சாரதி சந்தித்தது இல்லை.

இப்படியும் அதிசயம் நடக்குமா? என சாரதி வியப்படைந்தார் .

என்றாலும் ரதத்தை ஜனகர் விரும்பியது போல செலுத்த அவனுக்கு அதிகாரம் இல்லை.

ஜனகர் சொன்ன தகவலை தன்னுடைய எஜமானன் எமதர்மராஜனுக்கு அறிவித்தான்.

எமதர்மராஜன் ஓடோடி வந்தார். ஜனகரின் காலில் விழுந்து வணங்கினார்.

தர்ம பிரபு!

தர்மத்தின் உறைவிடமான தங்களுக்கு பாவிகளின் நரகம் எவ்விதம் தகும்?

புண்ணிய உலகம் உங்கள் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது என்று எமதர்மன் இயம்பினார்.

கால தேவரே என்று கலக்கத்துடன் அழைத்தார் ஜனகர்.

நரகலோக மக்களின் இந்த அவல வாழ்க்கையை பார்த்தபின் புண்ணிய உலகில் என்னால் எவ்விதம் நிம்மதியாக பொழுது போக்க முடியும் என்றார்.

எமதர்மன் கவலையோடு சொன்னார்...

பெருமைக்குரிய பெருமானே நரகலோகத்தில் நீங்கள் காலடி வைத்தால் வாழ்நாள் முழுவதும் சேர்த்த புண்ணியத்தின் அரைப்பாகம் உங்களை விட்டுப் போய்விடுமே!

அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை நான் வழங்கும் புண்ணியம் என்ன ஆகும்?

என்று ஜனகர் வினாவினார்.

அது பாவிகளைச் சென்றடையும் என்றான் கால தேவன்.

அதன் விளைவு என்ன என்று கேட்டார் ஜனகர்.

பாவிகளுக்கு நான் வழங்கும் தண்டனைகளின் கடுமை பெருமளவு குறையும் என்றான் எமன்.

அப்படியானால் என் புண்ணியம் முழுவதையும் பாவிகளுக்காக தருகிறேன்.

அவர்களுக்கு முழு தண்டனையிலிருந்து விலக்கு அளியுங்கள்.

நானும் நரக லோகத்திலேயே தங்கி பகவானின் கருணாகடாட்சத்தை பற்றி அவர்களுக்கு உபதேசித்து அவர்கள் பாவங்களுக்கு விமோசனம் தேடுகிறேன் என்றார் ஜனகர்.

மண்ணுலகத்தை விட்டு மறைந்து விண்ணுலகை எய்தும் நிலையிலும் தரும நெறிவழி சேவை செய்யத் துடித்து தனக்காக காத்திருக்கும் புண்ணிய உலக சுகங்களையும் தியாகம் செய்யத் துடிக்கும் ஜனகரின் பெருமையை எண்ணி கால தேவன் வியந்தார்.

ஒரு ஏக்க பெருமூச்சுடன் சாரதிக்கு கண்ணை காட்டினார்.

புண்ணிய லோகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பொன்விமானம் ஜனகப் பெருந்தகையுடன் நரக லோகம் நோக்கி புறப்பட்டது.

பெருமைக்குரிய பேராண்மையாளர்கள் எந்த காலத்திலும், எந்த நிலையிலும் பெருமை தவழும் செயல்களைதான் செய்வார்கள் என்று மனதிற்குள் எண்ணியவாறு கால தேவன் ஜனகர் சென்ற திசை நோக்கி தலை தாழ்த்தி வணங்கினார்.

  • 243
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய