- · 5 friends
-
I
நிறைவு ....(குட்டிக்கதை)
துரியோதனன் ஒருநாள் பீஷ்மர் மற்றும் பெரியவர்களிடம், தங்களது ஆச்சாரியரான துரோணர் தம் பக்கம் வெறுப்பையும். பாண்டவர்கள் பக்கம் அன்பையும் காட்டி வருவதாகக் கூறினான்.
அதற்கு துரோணர். "கல்வியானது அவரவர் அறிவிற்கு ஏற்றபடிதான் வளர்கிறது. உங்களுக்கு சந்தேகம் இருப்பின் நீங்களே ஒரு முறை அவர்களை ஆராய்ந்து பாருங்கள்” என்றார்.
உடனே குருகுல மைந்தர்கள் நூற்று ஐந்து பேரும் வரவழைக்கப்பட்டனர். பெரியோர்கள் திருதராட்டிரன் மைந்தர்களிடம், “ஒரு வீடும். சிறிது செல்வமும் அளித்து இந்தச் செல்வத்திற்கு வீடு நிறைந்த பொருட்களை வாங்கி வையுங்கள்' என்று சொல்லி அனுப்பினர். அதேபோல் பாண்டவர்களை அழைத்து வீடும். சிறிது செல்வம் கொடுத்தனுப்பினர்,
திருதராட்டினுடைய மைந்தர்கள் நூறுபேரும் சிறிது செல்வத்தில் வீடு நிறையப் பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் அது வைக்கோல் ஒன்றுதான் என்று முடிவு செய்தனர். வைக்கோலை வாங்கி விட்டை திரப்பி கதனவ முடினர்,
தருமன் தனது நான்கு. தம்பிமார்களுடன் ஆராய்ந்து, ஒரு பகுதி செல்வத்தில் விளக்குகளை வாங்கி வீடு முழுவதும் ஒளியேற்றினார். செல்வத்தின் ஒரு பகுதியை விருந்தினர்களை உபசரிக்கும். பொருட்களை வாங்கினார்.
மேலும், மலர்களை வாங்கி தோரணம் கட்டி அழகுபடுத்தினார். மீதமுள்ள செல்வத்தில் பன்னீர் மற்றும் சந்தன நறுமணப் பொருட்களால் வீட்டை மணக்க வைத்தனர்.
பீஷ்மரும், திருதராட்டினனும் முதலில் துரியோதனன் வீட்டிற்குச் சென்றனர். துரியோதனன், 'வீடு நிறைந்த பொருளாக வைக்கோல் வாங்கி அடைத்து வைத்துள்ளோம். ஆதலால் நாங்கள் வெளியே நிற்கிறோம்' என்றார்.
அதனைக் கேட்டதும் வந்தவர்கள் ஏளனமாய் அவர்களைப் பார்த்துவிட்டு, பாண்டவர்கள் வீட்டிற்குச் சென்றனர்.
அவர்களைப் பாண்டவர்கள் வரவேற்று பட்டுப்பாயில் அமர்த்தி. அறுசுவை உணவு படைத்தனர். அப்போது திருதராட்டினன். "நீங்கள் வாங்கிய வீடு நிறைந்த பொருள் என்ன?' என்று கேட்டார். அதற்கு பாண்டவர்கள். "வீடு நிறைந்த பொருள் ஒளியும், மணமுமின்றி வேறொன்றுமில்லை' என்றனர். அதனைக் கேட்டதும் மனநிறைவடைந்தார்.
நிறைவு என்பது பொருளால் நிரப்புவதல்ல, அன்பால் நிரப்பி அழகுபடுத்துவது. பொருளை வாங்கி தனக்குச் சேர்த்து வைப்பதல்ல. இருப்பதை, பிறர்க்குக் கொடுத்து
மகிழ்வது. நிறைவு, வாழ்வின் உன்னதமான ஒரு மன உணர்வு. ஆரோக்கியமான மனிதனின் அடையாளம், மனநிறைவு. அது மனிதனின் அற்புதமான தருணத்தில் வெளிப்படும் பேருணர்வு.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·