- · 5 friends
-
I
பொறாமை (குட்டிக்கதை)
ஒருவன் தன் வேலைகளுக்காக ஒரு குதிரையை வளர்த்து வந்தான்.
அவனிடம் ஒரு ஆடும் வளர்ந்து வந்தது.
அவன் தன் வேலைகளுக்கு அதிகமாக அந்த குதிரையை பயன்படுத்தினான். இதனால் அதிக கவனிப்புடன் குதிரையை பேணிவந்தான். விதவிதமாக உணவளித்தான். அன்போடு அதனுடன் பழகினான்.
ஆட்டையும் அதேபோல நல்ல தீனி கொடுத்து கவனித்து வந்தான்.
தன்னை விட எஜமானன் குதிரையிடம் அதிக அன்பு காட்டுகிறான் என நினைத்த ஆடு குதிரை மீது பொறாமை கொண்டது.
ஏதாவது சூழ்ச்சி செய்து குதிரையை எஜமானிடம் இருந்து பிரித்து விட்டால் எஜமானன் தனி அன்பும் அக்கறையும் தன்னிடம் செலுத்துவான் என நினைத்தது .
ஒருநாள் ஆடு குதிரையை நோக்கி " நண்பா நீ எதற்காக இவ்வளவு வேலை செய்கிறாய்?
எஜமானன் உனக்கு ஒரு நாளாவது ஓய்வு கொடுக்கிறானா?
நீ வாயில்லா பூச்சியாக இருக்கும் வரை உன்னை கொடுமைப்படுத்தி வாழ்நாள் முழுவதும் வேலை வாங்குவான் " என்று கூறியது.
ஆட்டின் பேச்சு குதிரைக்கு குழப்பத்தை அளித்தது.
அதிலும் நியாயம் இருப்பதாகவே தோன்றியது.
அது ஆட்டை நோக்கி நண்பரே நீங்கள் கூறுவதில் உள்ள நியாயம் எனக்கு விளங்குகிறது.
எஜமானின் கொடுமையிலிருந்து சிறிது நாளாவது ஓய்வு பெறுவதற்கு ஏதாவது வழி சொல்லுமாறு கேட்டது.
அதற்கு ஆடு ஓய்வு பெறுவதற்கு நான் ஒரு தந்திரம் சொல்கிறேன்.
நீ வேண்டுமென்றே கீழே விழுந்து காயத்தை ஏற்படுத்திக் கொள். காயத்தின் வலி தாங்க முடியவில்லை என்று படுத்துக்கொள்.
தேவையான அளவு ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு காயம் ஆறி விட்டதாக கூறி வேலை செய்யத் துவங்கு.
இதை அடிக்கடி பயன்படுத்தி ஓய்வு எடுத்துக்கொள் என்று கூறியது.
ஆட்டின் வஞ்சகத்தை உணராமல் அது சொல்லிக் கொடுத்தபடி குதிரை நடந்து கொண்டது.
ஒரு நாள் வேண்டுமென்றே கீழே விழுந்து காயத்தை ஏற்படுத்திக் கொண்டது.
வலி அதிகமாக இருப்பது போல் நடித்தது.
குதிரையின் நிலையை கண்ட எஜமானன் கவலைப்பட்டு குதிரைக்கு நீண்ட நாட்கள் உடம்பு சரியில்லாமல் போன தனது வேலைகளுக்கு தடை ஏற்படும் என நினைத்து குதிரையின் உடல் நலம் சீக்கிரமாக குணமடைய விலங்கு மருத்துவர் ஒருவரை அழைத்து வந்து காண்பித்தான்.
குதிரைக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண காயம் தான் என்பதை உணர்ந்து கொண்ட மருத்துவன் அதை எஜமானனிடம் சொன்னால் அதிக பணம் கறக்க முடியாது என நினைத்து உங்கள் குதிரைக்கு பெரிய காயம் ஏற்பட்டிருக்கிறது.
முறையாக சிகிச்சை செய்யாவிட்டால் குதிரை இறந்து விடும் என்றான்.
எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை குதிரையை சீக்கிரமாக குணப்படுத்து என கூறினான் எஜமானன்.
ஆட்டுக் கொழுப்பை உபயோகித்து ஒரு மருந்து தயார் செய்ய வேண்டும். அதனால் ஆட்டுக் கொழுப்பு கொஞ்சம் சேகரித்துக் கொடுங்கள் என்றான்.
ஆட்டுக் கொழுப்பை விலைக்கு வாங்குவதாக இருந்தால் அதிகம் செலவாகும்.
நம்மிடம் இருக்கும் ஆட்டை அடித்து கொழுப்பை எடுத்தால் செலவு குறையும்.
ஆட்டு இறைச்சியும் கிடைக்கும். ஆட்டைக் கொன்று அதன் கொழுப்பை எடுத்து மருத்துவரிடம் கொடுத்தான் எஜமானன்.
அந்த கொழுப்பைக் கொண்டுபோய் மருத்துவன் மருந்து தயாரித்துக் கொடுத்து இந்த மருந்து தீரும்வரை குதிரை பட்டினியாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் காயம் சீக்கிரம் குணமடையும் என்று கூறினான். மருத்துவரின் ஆலோசனைப்படி எஜமானன் குதிரையை பல நாட்கள் பட்டினி போட்டான் பசி தாங்க முடியாமல் துடியாய் துடித்தது குதிரை.
ஆட்டின் யோசனையை கேட்டதால் வந்த வினை என எண்ணி மிகவும் வேதனைப்பட்டது குதிரை.
குதிரை மீது பொறாமை கொண்டு தீமை செய்ய போக தன் உயிரையே இழந்தது ஆடு்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·