Support Ads
 ·   ·  149 posts
  •  ·  15 friends
  • S

    23 followers

சூரிய கிரகணம் ஜூன் 10. 2021

சூரிய கிரகணம் நிகழும் தேதி ஜூன் 10 2021  சூரிய கிரகணம்

2021 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2021 ஜூன் 10ம் தேதி அன்று நிகழ உள்ளது.

இந்தியாவில் இந்த கிரகணம் காலை 8:12:20 மணிக்கு தொடங்கு பகல் 1.42 மணி வரை என ஐந்தரை மணி நேரம் நீடிக்கிறது.

எங்கெல்லாம் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும்?

இந்தியா உள்ளிட்ட ஆசியாவின் பெரும்பாலான நாடுகளில் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும்.

ரஷ்யாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து மற்றும்  கனடாவின் வடக்கு பகுதிகள். மேலும், வட ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஒரு சில பகுதி கிரகணத்தைக் காண இயலும்.இருப்பினும், ஐரோப்பாவின் பகுதிகளிலும், ஆசியாவின் பகுதிகளிலும், வடக்கு / மேற்கு ஆபிரிக்கா, வட அமெரிக்காவின் பெரும் பகுதிகளிலும், அட்லாண்டிக், ஆர்க்டிக் ஆகிய இடங்களில் ஒருசில இடங்களில் இந்த கிரகணத்தைக் காண இயலும்.

சூரிய கிரகணத்தின் முக்கியத்துவம்

சூரியன் - சந்திரன் - பூமி ஒரே நேர் கோட்டில் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கு இடையே சந்திரன் வரும் போது, சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படக்கூடிய நிகழ்வாகும்.

பாரம்பரிய சாஸ்திர நம்பிக்கையின் படி சூரிய கிரகணம் ஒரு வானியல் நிகழ்வு மட்டுமல்ல அதன் பின் சில புராண காதைகள் கூறப்படுகிறன.

அமிர்தத்தைக் குடிக்க விரும்பிய அசுரர்களில் ஒருவன் தேவர்களைப் போல உருமாறி தேவர்களின் கூட்டத்தில் வந்து அமர்ந்தான். அவன் அமிர்தத்தை குடிக்கும் போது சூரியன் மற்றும் சந்திரன் அடையாளம் கண்டு கொண்டு மகாவிஷ்ணுவிடம் கூறினார்..

இதனால் கோபமடைந்த மகாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அந்த அரக்கனைக் கொன்றான்.

தலையும் உடலும் துண்டிக்கப்பட்ட நிலையில் பாம்பின் தலை அசுரனின் உடல் ராகுவாகவும், அசுர தலை, பாம்பின் உடல் கொண்டதற்குக் கேது எனவும் பெயர் வந்தது.

சூரிய சந்திரன் மீது கோபமடைந்த இந்த ராகு, கேது அவர்களை விழுங்க முயற்சி செய்யும் நிகழ்வு தான் கிரகணம் என குறிப்பிடப்படுகிறது.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) என்ற நிகழ்வு ஏற்படுகின்றது.

கிரகண சூட்சமம்:

பூமி மனித உடலையும், சந்திரன் மனமும், சூரியன் ஆத்மாவையும் குறிக்கும்.  உடல், மனம், ஆன்மாவை ஒன்றிணைக்க செயற்கையாக ஆன்மிக பயிற்சி செய்து பெறக்கூடிய முறை யோகம் என்கிறோம். ஆனால் கிரகணத்தின் போது இயற்கையாகவே யோகம் பெற உந்துதலை ஏற்படுத்துகிறது.

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வரும் கதிர்கள் தடுக்கப்படுவதால், வானத்திலிருந்து வரும் தீய கதிர் வீச்சுகள் நம்மை தாக்கும். அதனால் கிரகணத்தின் போது நம்மை காத்துக் கொள்ள சொல்கின்றனர்.

அதனால் நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும், சமைத்த உணவுகள் மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டது.

கிரகணத்தின் போது உடலுறவுக் கொள்ளக் கூடாது.

கர்ப்பிணிகள் கிரகணத்தின் போது வெளியே வந்தால் சிசுவுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் வெளியே வரக்கூடாது என கூறப்படுகிறது.

கிரகணத்தின் போது பிறக்கும் குழந்தைகள் குறைபாடுடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது.

கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சொரிந்து கொண்டால், குழந்தைக்கு அந்த இடத்தில் மச்சம் போன்று கருமை நிறத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெரியோர் கூறுகின்றனர்.

கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பது தவிர்க்க வேண்டும்.கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் உணவு அருந்த வேண்டும்.

ஏன் தர்ப்பைப் புல்:

தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னனர் நம் முன்னோர்கள்.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும்.

அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம்.அதனால் இயல்பாக செய்யும் வேலையை விடுத்து, முழுவதுமாக இறைவனை சரணாகதி அடைவது நல்லது.

கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, குளித்து, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதோடு, கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும்.

கிரகணம் முடிந்த பின்னர் கடலிலோ அல்லது கல் உப்பு சிறிது போட்ட அந்த தண்ணீரில் குளித்தல் நல்லது. அப்படி செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலில் இருந்து அகலும்.

  • 353
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்