-
- 3 friends
இன்றைய ராசி பலன் – டிசம்பர் மாதம் 4, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 19ஆம் தேதி
மேஷம் -ராசி:
உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். அரசு செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். உடன் பிறந்தவர்கள் மூலம் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றங்கள் உருவாகும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். ஆராய்ச்சிப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழல் காணப்படும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
ரிஷபம் ராசி:
எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். தேவையில்லாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். மனதிற்கு நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எண்ணங்களை வெளிப்படுத்தும் போது சூழ்நிலை அறிந்து செயல்படவும். மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கிய விஷயங்களில் கவனத்துடன் இருக்கவேண்டும். பக்தி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மிதுனம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். கலைப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உருவாகும். இன்சூரன்ஸ் துறைகளில் சாதகமான சூழ்நிலைகள் காணப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம் -ராசி:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்களும், நட்புகளும் கிடைக்கும். புதிய வியாபாரம் குறித்த ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
சிம்மம் -ராசி:
மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு காரியங்களில் அலைச்சல்கள் ஏற்படும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். புதுவிதமான கற்பனைகள் அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். நம்பிக்கை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கன்னி -ராசி:
வீடு மாற்றம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயரதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு செயல்பாடுகளில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். பாராட்டு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
துலாம் -ராசி:
திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உருவாகும். மனதில் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். குழப்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சு
விருச்சிகம்- ராசி:
முயற்சியில் அலைச்சலும் அனுபவமும் அதிகரிக்கும். உயரதிகாரிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு சுபிட்சம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தொடங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் ஏற்படும். பிரயாணம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு -ராசி:
வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் வருகையால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் பொறுமை காக்கவும். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம் -ராசி:
கலகலப்பான பேச்சுக்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். நிர்வாகத் துறைகளில் மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத் தன்மை அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம் –ராசி:
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். எதையும் எதிர்கொள்ளும் மனஉறுதி மேம்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூர் பயணங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவிகள் கிடைக்கும். பயனற்ற செலவுகளைக் குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம் -ராசி:
மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சாதகமான சூழல் காணப்படும். கடன் பிரச்சனைகள் குறையும். வருமான ஆதாரங்களை மேம்படுத்துவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சிரமம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·