-
- 3 friends
இன்றைய ராசி பலன் – அக்டோபர் மாதம் 30, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 13ஆம் தேதி
மேஷம் -ராசி:
வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் ஏற்படும். உடல் ஆரோக்கிய இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வர்த்தகச் செயல்களில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
ரிஷபம் ராசி:
பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மிதுனம் -ராசி:
பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உண்டாக்கும். மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். நலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கடகம் -ராசி:
புதிய முயற்சிகளில் சூழ்நிலை அறிந்து சிந்தித்துச் செயல்படவும். வியாபாரப் பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்துச் செயல்படவும். சமூகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
சிம்மம் -ராசி:
நெருக்கமான உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் நம்பிக்கை மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் வருமான வாய்ப்புகள் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கன்னி -ராசி:
மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல் ஏற்படும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு
துலாம் -ராசி:
பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பிறமொழி பேசும் மக்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். தொழிலில் புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சாம்பல்
விருச்சிகம்- ராசி:
தன வரவுகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியங்கள் கைகூடும். வேலையில் நல்ல மாற்றமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத உதவிகளால் அனுகூலம் உண்டாகும். வரவுகள் தாராளமாக இருக்கும். நண்பர்களின் சந்திப்பு திருப்தியை உண்டாக்கும். சமூகப் பணிகளில் அங்கீகாரம் கிடைக்கும். சிக்கல் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
தனுசு -ராசி:
வியாபாரப் பணிகளில் முதலீடுகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியாக உதவிகள் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசுத் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம் -ராசி:
எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நீண்ட தூர பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
கும்பம் –ராசி:
உத்தியோகப் பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. கடன் செயல்களில் பொறுமை காக்கவும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்குகளில் இழுபறியான சூழல் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
மீனம் -ராசி:
மனதிற்கு நெருக்கமானவர்கள் மூலம் அலைச்சலும், அனுபவமும் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும். பழகும் தன்மையில் சில மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·