- · 5 friends
-
I
தாத்தா சொன்ன வாழ்க்கை கதை
ஒரு முறை பேரன் தாத்தாவிடம் வந்து!
தாத்தா இந்த உலகில் எல்லா பிரச்சனைக்கும் ஒரே தீர்வு இருக்காதா! என்று கேட்டான்!
அதற்கு தாத்தா சொன்னார் கட்டாயம் தீர்வு இருக்கு ! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!
ஒரு கிராமத்தான் ஒரு குதிரை வளர்த்து வந்தான். ஒரு நாள் அந்த குதிரைக்கு உடம்பு சரியில்லாமல் போனது! கால்நடை மருத்துவரை கூட்டி வந்து வைத்தியம் பார்த்தான்! குதிரை குணம் ஆனது! அன்று குதிரையை கூட்டி கொண்டு மலை மேல் சென்றவன், குதிரை கால் தவறி கீழே விழ! குதிரைக்கு ஒரு கால் முறிந்து நடக்க முடியாமல் ஆனது. மிகவும் சிரமப்பட்டு வைத்தியம் பார்த்து குதிரையின் காலை சரி செய்தான். அப்புறம் திடீர் என்று குதிரை லாயம் தீ பிடிக்க குதிரை தீயில் வெந்து புண் அதிகம் ஆகி விட்டது! மறுபடியும் வைத்தியம் பார்த்து குதிரையை சரி செய்தான். அப்புறம் திடீர் என்று மறுபடியும் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்து விட்டது.
விவசாயி குதிரை படும்பாட்டை பார்த்து அதன் வலிக்கு நிரந்தர முடிவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவன் வைத்து இருந்த துப்பாக்கியை எடுத்து குதிரையை சுட்டு சாகடித்தான். என்று கதையை சொல்லி முடித்தார்.
இப்பொழுது சற்றே குழம்பிய பேரன் தாத்தா இந்த கதைக்கும் என் வாழ்க்கையில் வரும் பிரச்சனைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்க!
அதற்கு தாத்தா நாமும் அந்த குதிரை மாதிரி தான் நமக்கும் பிரச்சினை ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே தான் இருக்கும்! அது நாம் இறக்கும் வரை அது தொடரும் என்றார்.
வாழ்வில் நம் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஒருநாள் வெற்றி மறுநாள் தோல்வி! ஒவ்வொரு நாளும் ஒரு சோதனை அதை கடந்து தான் செல்ல வேண்டும். பிரச்சினை வரும் அதை கடந்து தான் செல்ல வேண்டும். அது நம் மகிழ்ச்சியை கெடுத்து விட கூடாது. நம் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·