- · 5 friends
-
I
உண்மையான காதல் (குட்டிக்கதை)
ஒரு எழை குடும்பத்து பையன் பல வருடங்களாக ஒரு பணக்கார பெண்ணை காதலிக்கிறான். அந்த பெண்ணிற்கும் இவனை நன்றாக தெரியும். கல்லூரி பருவ நட்பு...
ஒரு நாள் தன் காதலையும் அப்பெண்ணிடம் சொல்கிறான்.
காதல் ப்ரபோஸ்ஸை கேட்டுவிட்டு அந்த பணக்கார பெண் சொன்னால்: உன்னோட ஒரு மாச சம்பளம் நான் ஒரு நாள் செலவு செய்யுற பணம். என்ன காதலிக்கிறேன்னு சொல்றியே, உன்னோட தகுதி என்னன்னு உனக்கு முதல்ல தெரியுமா? உன்ன மாதிரியே எவளாவது ஏழை பொண்ணு கிடைப்பா அவளை போய் கல்யாணம் பண்ணி வாழ்ற வழியை பாரு. "வந்துட்டான் காதல் பிரபோஸ் பண்ண" என்று கத்தினாள். சுற்றி இருந்தவர்கள் எல்லாம் இவனை பார்க்க, அவமானத்தில் தலை குனிந்து அமைதியாய் அந்த இடத்தை விட்டு சென்றான்.
காலங்கள் ஓடின.....
10 வருடங்கள் கழித்து இருவரும் ஒரு மிகப்பெரிய ஷாப்பிங் மாலில் ஒருவரை ஒருவர் மீண்டும் சந்தித்து கொண்டனர்.
இவள் தாமாக முன்வந்து அவனிடம் பேசினால்: ஹேய், எப்படி இருக்க? எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு தெரியுமா? என் கணவர் மாசம் 2 லட்சம் சம்பளம் வாங்கராரு. உன்னால நினச்சுகூட பார்க்க முடியலைல. அவர் செம டேலன்ட் ஆனா ஆளு தெரியுமா? என்றாள்!!!
இதை கேட்ட இவன் கண்கள் கண்ணீரால் குளமாகின...
ஒரு சில நிமிடங்களில் அந்தப் பெண்ணின் கணவர் அங்கு வந்து சேர்ந்தார்.
சார்!! நீங்களா? மீட் மை ஒய்ஃப்... என்று சொல்லிவிட்டு தன் மனைவியிடம் சொன்னார்: சாரோட ப்ராஜெக்ட்ல தான் நெக்ஸ்ட் வீக் அவருக்கு அசிஸ்டென்டா ஜாயின் பண்ண போறேன். 200 கோடி ரூபா ப்ராஜெக்ட். சார் ரொம்ப நல்ல மனுஷன். அவரு உயிருக்கு உயிரா உண்மையா காதலிச்ச ஒரு பொண்ணு அவர விட்டுட்டு போயிட்டா. அதனால இப்ப வரைக்கும் சார் கல்யாணம் பண்ணிக்கவே இல்ல. எவ்வளவு துரதிஷ்டமான பொண்ணு அவ... என்று தன் மனைவியிடம் சொன்னார். இதை கேட்டு உறைந்து போய் நின்றால் அந்த பணக்கார பெண்...
நீதி: நம்மள ஒரு பொண்ணு வேண்டாம் புடிக்கலைன்னு உதறி தள்ளிட்டு போயிட்டா....
அவ மூஞ்சில ஆசிட் அடிக்கிறது....
சமூக வலைத்தளத்தில் அவளை பத்தி கேவலமா பதிவு போடறது...
வாட்ஸ்அப்ல காதல் பிரிவு ஸ்டேட்டஸ் வைக்கிறது... தாடி வைச்சிக்கட்டு அசிங்கமா அலையறது.....
இன்னும் ஒருபடி மேலே போய் உயிரை மாய்த்துக் கொள்வது... உண்மையான வீரமான ஆண் மகனுக்கு அழகில்லை.
வேண்டாம் என்று சொன்ன அந்த பொண்ணு முன்னாடியே நல்லா வாழ்ந்து வாழ்க்கையில முன்னேறி காட்டறவன்தான் உண்மையான ஆண்மகன்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·