- · 5 friends
-
I
புரிதல் (குட்டிக்கதை)
ஒரு கணவனும் மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர்.
சற்று நேரத்தில் திடீரென இருட்டியதால் இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். சில நிமிடங்களில் சடசடவென மழையும் சாரலுமாக வீசத் தொடங்கியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள் ஓடத் தொடங்கினர்.
வழியில் அவர்கள் கடக்க வேண்டிய கயிற்றுப்பாலம் மழைநீரில் அடித்துக் கொண்டு செல்லும் நிலையில் இருப்பதை கண்ட கணவன், சீக்கிரம் வா என்று மனைவியை அழைத்தபடி முதல் ஆளாக வேகமாக ஓடி பாலத்தை கடந்து விடுகிறான்.
கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து முடிக்கும்போது தான் மனைவி பாலத்தின் நடுவே நின்றுகொண்டு தடுமாறிக் கொண்டிருந்தாள்.
மழைச்சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்துவிட்டதால் மனைவி எஞ்சியுள்ள பாலத்தை கடக்க பயந்தாள். இருட்டில் எதுவும் தெரியவில்லை. இடையிடையே மின்னலடிக்கவே பாலத்தின் எதிர்முனையில் நின்ற கணவனைக் கண்டு கூவி தனக்கு துணைக்கு அழைத்தாள்.
கணவன் அவளைத் திரும்பிப் பார்க்கவுமில்லை; எந்த பதிலும் கொடுக்கவுமில்லை.
துணைக்கும் வரவில்லை!
"என்ன இந்த மனுசன்! பொண்டாட்டி ஆபத்தில் இருக்கும்போது சுயநலத்துடன் கண்டு கொள்ளாமல் காதில் விழாததுபோல் திரும்பி நிற்கிறான்" என்று அவளுக்குள் ஆத்திரமும் அழுகையும் பொங்கியது.
வேறு வழியின்றி மிகவும் பயத்துடன் கண்களை மூடிக் கொண்டு கயிற்றுப் பால கைபிடியை இறுகப் பற்றிக் கொண்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்!
பாலத்தை கடக்கும்போது இப்படி ஒரு இக்கட்டான நிலைமையில் தனக்கு உதவிக்கு ஓடிவராத கணவனை நினைத்து வருந்தினாள்.
ஒரு வழியாக பாலத்தை கடந்து கரை சேர்கிறாள். கணவனை கோபத்தோடு பார்க்கிறாள்!
அங்கு கணவன் மழையில் ஒரு பக்கம் அறுந்து தொங்கிக் கொண்டிருந்த கயிற்றுப்பாலத்தை வயிற்றில் சுற்றிக் கொண்டு வாயாலும், இரு கையாலும் இழுத்து பிடித்துக் கொண்டிருந்தான்.
மனைவி கரை சேர்ந்ததைக் கண்டதும் கயிற்றை விட்டு விடுகிறான். கயிற்றுப் பாலத்தை மழைநீர் இழுத்துக் கொண்டு ஓடியது.
"வாழ்க்கையின் சில நேரங்களிலும் நான் உனக்கு பக்க துணையாக இருக்க இயலாது போய் விடலாம். சில பிரச்சினைகளை நீயே தான் சமாளித்து கடக்க வேண்டும்" என்கிறான்.
நீங்கள் இருக்கும்போது எனக்கென்ன கவலை என்றவள் கண்ணீருடன் கணவனை கட்டியணைத்து முத்தமிடுகிறாள்!
சில சமயம் நிறைய பெண்கள் தன் கணவன் தன்னையும் குடும்பத்தையும் கண்டு கொள்ளாதது போலத்தான் தெரியும், இதனால் நிறைய குடும்பங்களில் பிரச்சினைகள் உருவாகிறது; பெரிதாகிறது.
அதற்கு காரணம் புரிதல் இல்லாதமையே!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·