Support Ads
 ·   ·  1499 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

திருப்புமுனை (குட்டிக்கதை)

வகுப்பினுள் நுழைகிறார் ஆசிரியை சுமதி.

அவருக்கு ஒரு வழக்கம் இருந்தது. அது ...

வகுப்பறைக்குள் நுழைந்ததுமே மாணவர்களைப் பார்த்து 'Love you all!' என்று சொல்வது.

தான் சொல்வது பொய்யென்று அவருக்கே தெரியும்.

ஆம்!

அந்த வகுப்பிலுள்ள ஒரேயொரு மாணவனை மட்டும் அவரால் நேசிக்க முடியவில்லை.

ஒழுங்காய் உடுத்தாத, எதிலுமே ஒழுங்காய் இல்லாமல் சுட்டிக் காட்டுவதற்கு எந்தவொரு சிறப்புத் தன்மையும் இல்லாத 'டெடி' என்கிற தியோடர்!அவனிடம் மட்டும் ஆசிரியை சுமதி நடந்து கொள்ளும் விதம் வித்தியாசமானது!

எந்தவொரு தவறான விஷயத்திற்கும் அவனையே உதாரணம் காட்டினார்.

எந்த நல்ல விஷயத்திற்கும் அவனை நிராகரித்தார்.

அவ்வாண்டிற்கான காலாண்டு பரிட்ஷை வந்தது.

முன்னேற்ற அறிக்கைகள்.... வகுப்பாசிரியர்களிடமிருந்து தலைமை ஆசிரியரின் கையெழுத்துக்கு அனுப்பப்பட்டன.

ரிப்போர்ட்டுகளை பார்வையிட்டு கையொப்பமிட்டுக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர், ஆசிரியை சுமதிக்கு அழைப்பு விடுத்தார்.

அவர் வந்ததும், "முன்னேற்ற அறிக்கை என்பது ஒரு பிள்ளையின் முன்னேற்றத்தை அறிவிக்க வேண்டும்.

தன் பிள்ளைக்கும் ஓர் எதிர்காலம் உண்டென்ற நம்பிக்கையை பெற்றோருக்கு தர வேண்டும்!

நீங்கள் எழுதியிருப்பதை பார்க்கும் போது பெற்றோர் அவன் மீது நம்பிக்கை இழந்து விடுவார்கள்!"

என்று தியோடரின் முன்னேற்ற அறிக்கையை சுட்டிக் காட்டிக் கூறினார்.

ஆசிரியை சுமதியோ "என்னால் ஒன்றுமே செய்ய முடியாது.

அவனைப் பற்றி எழுதுவதற்கு என்னிடம் ஒரு நல்ல விஷயம் கூட இல்லை!" என்றார்.

தலைமை ஆசிரியர் அலுவலக ஊழியர் ஒருவரிடம் தியோடரின் கடந்த கால

முன்னேற்ற அறிக்கைகளை கொண்டு வந்து சுமதியிடம் கொடுக்குமாறு பணித்தார்.

அறிக்கைகள் கொண்டு வரப்பட்டன. ஒவ்வொரு ஆண்டாய் விரித்துப் படிக்கிறார் சுமதி.

மூன்றாம் வகுப்பு அறிக்கையில் 'வகுப்பின் மிகத் திறமையான மாணவன் தியோடர்' என இருந்ததைக் கண்டு தான் வாசித்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சி அடைந்தார் சுமதி.

நான்காம் வகுப்பு அறிக்கை சொன்னது.

'தியோடரின் தாய் புற்று நோய் முற்றிய நிலையில் உள்ளார்.

அதனால் தியோடர் மீது முன்னர் போல அவரால் கவனம் செலுத்த முடியவில்லை. அதன் விளைவு அவனிடம் தெரிய ஆரம்பித்திருக்கிறது. '

ஐந்தாம் ஆண்டின் அறிக்கை இவ்வாறு சொன்னது,'தியோடரின் தாயார் இறந்து விட்டார்.

அவன் மேல் அக்கறை காட்டும் உறவு தேவைப் படுகிறது. இல்லையேல் நாம் அந்தக் குழந்தையை இழந்து விடுவோம்.!'

கண்களில் கண்ணீருடன் சுமதி தலைமை ஆசிரியரைப் பார்த்து 'என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு தெரியும்.' என்று ஓர் உறுதியோடு கூறினார்.

அடுத்த திங்கள் காலை ஆசிரியை சுமதி வகுப்புக்கு சென்று பிள்ளைகளை பார்த்து வழக்கம் போல் 'Love you all 'என்றார்.

இம்முறையும் தாம் பொய் சொல்கிறோம் என்று அவருக்குத் தெரியும். ஏனென்றால், தற்போது மற்றக் குழந்தைகளை விட டெடி எனும் தியோடர் மீது அவரது அன்பு அளவு கடந்திருந்தது.

தியோடருனனான தன் அணுகு முறையை மாற்றிக் கொள்வதென்று அவர் தீர்மானித்திருந்தார்.

அதன் பின்னர் ஒவ்வொரு நல்ல விஷயத்திற்கும் தியோடரின் பெயர் உச்சரிக்கப்பட்டது. ஒவ்வொரு தவறான உதாரணங்களின் போதும் அவன் பெயர் கவனமாய் தவிர்க்கப்பட்டது.

அவ்வாண்டின் பள்ளி இறுதி நாள் வந்தது. எல்லா மாணவர்களும் தம் ஆசிரியருக்கென பரிசுகள் கொண்டு

வந்திருந்தார்கள். அவற்றிற்குள் ஒரு பெட்டி மட்டும் ஓர் பழைய செய்தித்தாளால் சுற்றப்பட்டிருந்தது.

ஆசிரியை சுமதிக்கு அதை பார்த்ததுமே அது டெடியிடமிருந்துதான் வந்திருக்க வேண்டுமென உள்ளுணர்வு சொல்லியது.

முதலில் அதையே பிரித்தார். பிரித்ததும், அதனுள் பாதி உபயோகித்த சென்ட் பாட்டில் ஒன்றும், சில கற்கள் கழன்று விழுந்த பிரேஸ்லெட் ஒன்றும் இருந்தது. அந்தப் பொருள் தியோடருடையது என்று புரிந்து கொண்ட முழு வகுப்பறையுமே சிரித்தது. ஒன்றுமே சொல்லாமல் ஆசிரியை சுமதி அந்த வாசனைத் திரவியத்தை தன்மீது பூசிக் கொண்டார். அந்த பிரேஸ்லெட்டை எடுத்து தன் கையில் அணிந்து கொண்டார்.

மெல்லியதாய் ஒரு புன்னகையுடன் தியோடர் சொன்னான்."இப்போது உங்களிடம் என் தாயின் வாசம் வருகிறது.

இறக்கு முன் அவர் இறுதியாய் வைத்திருந்த சென்ட் இதுதான். இந்த பிரேஸ்லெட்தான் பெட்டிக்குள் வைக்கும் முன் அவர் உடலில் இருந்து அகற்றப்பட்டது!”

ஓராண்டு கழிந்தது. ஆசிரியை சுமதி மேசையில் ஓர் கடிதம் கிடந்தது. ''

‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஒரு கடிதம் கிடைத்தது. அதே வரிகளுடன்ஸ

‘I have seen few more teachers. But you are the best teacher I have ever seen’. With love Teddy.

ஆண்டுகள் பல வேகமாய் உருண்டன. அவர்களுக்கிடையேயான தொடர்பு எப்படியோ அறுந்து போனது. ஆசிரியை சுமதி ஓய்வு

பெற்றிருந்தார்.பல ஆண்டுகளின் பின்னர் அவருக்கு ஒரு கடிதம் வந்து சேர்ந்தது. கடிதம் டாக்டர் தியோடரிடமிருந்து...

Mrs. Sumathi

‘I have seen many more people in my life. You are the best teacher I have ever seen’, Now I am going to get married. I cannot dream of my marriage without your presence.

I am your Teddy.

Dr. Theodore

அத்துடன் போய் வர விமான டிக்கட்டுக்களும் இணைக்கப்பட்டிருந்தன.

ஆசிரியை சுமதிக்கு இருப்பு கொள்ளவில்லை.

அவரிடம் அந்த சென்ட் பாட்டில் தற்போது இல்லை. பிரேஸ்லெட் பாதுகாப்பாய் இருந்தது. அதை அணிந்து கொண்டு திருமணத்திற்குப் புறப்பட்டார்.

அங்கு சென்று பின் இருக்கையொன்றில் அமர முற்பட்ட போது அங்கிருந்த ஊழியர்கள் அவரை எப்படியோ அடையாளம் கண்டு

கொண்டு முன் வரிசையில் இருந்த ஆசனம் ஒன்றை நோக்கி அழைத்து சென்றனர்.

அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஆசனத்தில் எழுதப்பட்டிருந்தது ''MOTHER ".

திருமணம் முடிந்தது. தியோடர் தன் புது மனைவியிடம் ஆசிரியை சுமதியை அறிமுகம் செய்து வைத்தார்.

''இவர் மட்டும் இல்லையென்றால் நான் இன்று இந்த இடத்தில் நின்றிருக்கவே முடியாது' தியோடரின் கண்களில் கண்ணீர்.ஆசிரியை சுமதி பெண்ணைப் பார்த்து சொன்னார் ' டெடி இல்லையென்றால்,

ஒரு ஆசிரியர் தன் மாணவர்களுக்கு முதலில் ஒரு தாயாய் இருக்க வேண்டுமென்பதை நான் அறிந்திருக்கவே முடியாது!''

இக்கதையை படித்த மரியாதைக்குரிய ஆசிரியர்களே! உங்கள் வகுப்பிலும் ஒரு டெடி இருக்கிறான். உங்கள் உதவிக்காக காத்துக் கொண்டிருக்கிறான். உங்களாலும் அந்த ஆசிரியை சுமதியாக இருக்க முடியும்! இனி அடுத்த நாள் காலை வகுப்பறைக்குள் நுழையும் போது ஒரு ஆசிரியராய் இல்லாமல் தாயாய் ,தந்தையாய் நுழைந்து பாருங்கள்! உங்களால் ஒரு பிள்ளையின் வாழ்க்கையில் நல்லதோர் திருப்பு முனையாய் இருக்க முடியும்.*

  • 1217
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய