Support Ads
 ·   ·  1499 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

யுயுத்சு யார் தெரியுமா?

திருதிராஷ்டிரன் மனைவி காந்தாரி.

காந்தாரியின் உற்ற தோழி

பணிப்பெண் சுகதா ஆவாள்.

காந்தாரி கர்ப்பம் தரித்து கர்ப்ப காலம் இரண்டு வருடம் நீடித்தது.

குழந்தை பேறு பெறுவதற்கு இரண்டு வருடங்களாயின

அந்த நேரத்தில் திருதிராஷ்டிரனுக்கு

பணிவிடை செய்ய தாதியாக

காந்தாரியின் தோழி சுகதா நியமிக்கப்பட்டாள்.

திருதிராஷ்டிரன் சுகதாவை தனது சுயலாபத்திற்காக அவளை பயன்படுத்தி கர்ப்பவதியாக ஆக்கினான்.

காந்தாரி நூறு புதல்வர்களையும்

துஷலா எனும் பெண் குழந்தையும்

பெற்றெடுத்தாள்.

பின்னர் சுகதா ஓர் ஆண் வாரிசை பெற்றெடுத்தாள்.

தாதி சுகதாவுக்கு பிறந்த மகனுக்கு

யுயுத்சு என பெயரிட்டனர்.

யுயுத்சுவின் குண நலன்கள் விதுரரை ஒத்திருந்தது.

இருவருமே தாசி புத்திரர்கள்.அறிவு மிகுந்த இவ்விருவரும் யுதிர்ஷ்டரிடத்தில் அன்பும்,

ஸ்ரீ கிருஷ்ணரிடம் பக்தியும் உடையவர்கள்.

பாண்டவரிடத்தில் அபிமானம்உள்ளவர்கள். கெளரவர்கள் மனசாட்சிப்படி நடக்காவிட்டாலும், யுயுத்சு எப்போதும் மனசாட்சிப்படி நடந்தான்.

துரியோதனின் சதித்திட்டங்களை தக்க சமயத்தில் பாண்டவர்க்கு பலமுறை எடுத்துரைத்து அவர்களைக் காப்பாற்றினான்.

குருசேத்ர யுத்தத்திற்காக,

தேர்ப் படை,

யானைப் படை,

குதிரைப் படை,

காலாட் படை

எனப் பாண்டவர்களின் நால்வகைப் படைகள் ஒருபுறம் நிற்க எதிர்புறம் கௌரவர்களின் நால்வகைப் படைகளும் அணிவகுத்து ஒன்றுக்கொன்று எதிரெதிராக நின்றிருந்தன.

இருபுறமும் மாபெரும் வீரர்கள் கூட்டம், கையில் வாளோடும் வேலோடும் வில், அம்பு கதை முதலிய ஆயுதங்களோடும் போரிடத் தயாராய்த் துடிதுடிப்புடன் காத்திருந்தனர்.

அந்த நேரத்தில் அர்ச்சுனன் கிருஷ்ணரை பார்த்து

கௌரவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள்தானே என்றார்.

கிருஷ்ணர் சிரித்தபடி அந்த நூறு

கௌரவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் என சிரித்தார்.

அந்த நேரத்தில் தர்மர்,

யுத்த களத்தின் மையப் பகுதிக்கு வந்து,

“வீரர்களே விரைவில் தர்மயுத்தம் தொடங்கவிருக்கிறது இப்போது நம் இரு தரப்பு வீரர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. எங்கள் அணியிலிருந்து யாரேனும் கௌரவர்களான துரியோதனன் அணிக்குச் செல்வதானால் செல்லலாம்.

துரியோதனன் அணியிலிருந்து யாரேனும் பாண்டவர்களான எங்கள் அணிக்கு வருவதானாலும் வரலாம்”

"வீர்ர்களே எந்த அணியில் தர்ம நெறி மிகுந்து இருக்கிறது என்று கண்டுணர்ந்து அதன் பொருட்டுத் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விரும்பினால் இது கடைசி சந்தர்ப்பம். என்றார் மேலும் அப்படி அணி மாறுகிறவர்கள் மேல் இரு தரப்பினரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க கூடாது.

அப்படி் அணி மாறியவர்கள் அவரவர்கள் சார்ந்த புதிய அணியின் தரப்பில் போரிடுவார்கள்.’’ எனக் கம்பீரமாக அறிவித்து விட்டு தர்மர் சற்று நேரம் அமைதியாய் காத்திருந்தார்.

தர்மனின் அறிவிப்பைக் கேட்டு அனைவரும் வியந்தார்கள். தர்மபுத்திரரின் அறிவிப்பு அவரது உயர்ந்த பண்பாட்டை இரு அணியினருக்கும் புலப்படுத்தியது.

கெளரவர் தரப்பிலிருந்து ஒரு தேர் பாண்டவர் பக்கம் மெல்ல நகரத் தொடங்கியது.

அதில் இருந்தவன் யுயுத்சு.

துரியோதனன் அவனை கொல்ல வில்லை உயர்த்திய போது

பீஷ்மர் துரியோதனா அவனை கொல்லாதே

அவன் ஒருவன் நம் அணியைவிட்டு செல்வதால் நமக்கு இழப்பில்லை.

போரினில் அவனை கொல்வோம் என கூற

துரியோதனன் சரி என்று சொல்லி வில்லை கீழ் இறக்கினார்.

யுயுத்சு கெளரவர் படையில் ஓர் அதிரதி ஆக நியமிக்கப்பட்டான்.

அதிரதியானவன் ஒரே சமயத்தில் 60,000 போர் வீரர்களை அழிக்கும் ஆற்றல் பெற்றவன்.

கிருஷ்ணர் அர்ச்சுனா, யுயுத்சு சாதாரணப் படைவீரன் அல்ல. கௌரவர்களில் ஒருவன்!’’

உங்கள் அனைவரையும் நிறைய முறை துரியோதனின் சூழ்ச்சியில் இருந்து காப்பாற்றியவன் இவன்

தர்மநெறியிலிருந்து ஒரு சிறிதும் மாறாமல் இருப்பவன். அவனைப்போல் தர்மத்தை விடாமல் அனுசரிப்பவர்களுக்கு என்றும் என் துணை உண்டு.

இவனது உயிரை இறுதிவரை நான் காப்பேன். இவன் உயிரை நான் காப்பதற்கு வேறு ஒரு முக்கியமான காரணமும் இருக்கிறது. அதையும் இன்றைய போர் முடிந்த பிறகு சாவகாசமாகச் சொல்கிறேன் என்றார் கிருஷ்ணர்.

முதல் நாள் போர் முடிந்து மாலை யுயுத்சுவை அணைத்து பேசியபடியே பாண்டவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தார் கிருஷ்ணர்.

"யுயுத்சு தங்கள் தந்தைக்குப் பிறந்தவன் என்றாலும் பணிப்பெண்ணின் மகன் என்பதால் இவன் பிற கௌரவர்களால் அலட்சியமாக நடத்தப்பட்டான். அதோடு விதுரனைப்போல் தர்ம நெறியிலேயே இவன் சிந்தனை சென்றதும்கூட, மற்ற கௌரவர்கள் இவனை வெறுக்கக் காரணமாயிற்று.

தர்மநெறியைப் போற்றும் இவன் அதர்ம அணியில் தொடர்ந்து இருக்க விரும்பாததால் நம் அணிக்கு வந்துவிட்டான்.’’ என்றார்

அதுசரி கண்ணா! எங்களைக் காப்பதுபோல இவன் உயிரையும் இறுதிவரை காப்பேன் என்றாயே? நீ அப்படிச் சொன்னதன் பின்னணி என்ன?’’ அர்ச்சுனன் கேட்டான் .

‘‘அர்ச்சுனா! போரில் யுயுத்சுவைத் தவிர எஞ்சியுள்ள அத்தனை கௌரவ சகோதரர்களும் அழிக்கப்படுவார்கள். போர் முடிந்து சிறிது காலத்திற்குப் பிறகு திருதராஷ்டிரனும் காலமாவான்.மாமன்னன் திருதராஷ்டிரன் காலமாகும்போது, அவனுக்குக் கொள்ளி வைக்க ஒரே ஒரு பிள்ளையாவது மிஞ்ச வேண்டாமா? இதோ இந்த யுயுத்சு தான் திருதராஷ்டிரனுக்கு இறுதிக் கடன் செய்யப் போகிற அந்த ஒரே பிள்ளை!’’ எனக் கூறினார்

கிருஷ்ணரின் தயவால் தர்மம் வென்றது.

இந்திரப்பிரஸ்த அரசானாக யுயுத்சுவிற்கு முடி சூட்டினார் தர்மர் .

திருதிராஷ்டிரன் மறைந்த பின் யுயுத்சு தன் தகப்பனாருக்கு அந்திம கடனை செய்தான்.

அர்ச்சுனனின் பேரன் பரீஷத்திற்கு தகுந்த வயது வரும் வரை, அரசனாக நல்லாட்சி புரிந்து, அரசை பரீஷத்திடம் ஒப்படைத்தார் யுயுத்சு.

  • 1889
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய