- · 5 friends
-
I
இன்றைய ராசி பலன் – செப்டம்பர் மாதம் 18, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, புரட்டாசி மாதம் 2 ஆம் தேதி
மேஷம் -ராசி:
குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழில் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். புதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உடன் இருப்பவர்களால் புதுவிதமான கண்ணோட்டங்கள் பிறக்கும். வியாபார பணிகளில் எதிர்பாராத ஆதரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
ரிஷபம் ராசி:
புதிய முயற்சிகளில் எதிர்பார்த்து இருந்த பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பேச்சு வன்மையால் காரி அனுகூலம் உண்டாகும். ஆன்மீகப் பணிகளில் புரிதல் அதிகரிக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் சாதகமாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்குகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
மிதுனம் -ராசி:
புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் பிறக்கும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் வேண்டும். அரசு பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மை குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம் -ராசி:
கல்வி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூல பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் மூலம் மனதில் மாற்றமும் புத்துணர்ச்சியும் உருவாகும். நீண்ட கால கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
சிம்மம் -ராசி:
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். கற்பனை சிந்தனைகளால் குழப்பமான சூழல் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கன்னி -ராசி:
கணவன் மனைவியிடையே சிறுசிறு விவாதங்கள் ஏற்பட்டு மறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஆதரவான சூழ்நிலை காணப்படும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துகளால் நன்மைகள் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம் -ராசி:
உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உருவாகும். பழக்க வழக்கங்களில் சிறுசிறு மாற்றங்கள் உருவாகும். ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். நெருக்கமானவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
விருச்சிகம்- ராசி:
வாடிக்கையாளர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். திட்டமிட்ட செயல்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். முக்கியமான கோப்புகள் மற்றும் பொருள்களில் கவனம் வேண்டும். உத்தியோக பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் இலாபகரமான சூழல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
தனுசு -ராசி:
மனதில் பழைய நினைவுகள் அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மாற்றங்கள் ஏற்படும். வாகனம் பயணங்களில் நிதானம் வேண்டும். வித்தியாசமான சிந்தனைகள் மூலம் தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விவசாயம் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம் -ராசி:
திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாரிசுகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். உறவினர்கள் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். ஒப்பந்தம் விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். சிந்தனை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கும்பம் –ராசி:
குடும்ப உறுப்பினர்கள் மூலம் கலகலப்பான சூழ்நிலைகளில் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வாகன பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலை காணப்படும். வியாபார நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். தடைபட்டு வந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம் -ராசி:
தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டு மறையும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்லவும். நற்செயல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·