- · 5 friends
-
I
அகந்தை (குட்டிக்கதை)
ஒரு ஊரில் ஒரு ஞானி இருந்தார். ரொம்ப பெரிய ஞானி. மிகவும் வயதாகி விட்டது .
கடைசி காலத்தில் அவரிடம் சில பேர் வந்தார்கள்.
உங்கள் குரு யார்? என்று கேட்டார்கள்.
அவர் நிமிர்ந்து பார்த்தார்.
எனக்கு ஆயிரக்கணக்கான குருமார்கள் உண்டு.
அவர்கள் பெயர் எல்லாம் சொல்ல வேண்டுமென்றால் காலம் போதாது.
ஆனால் முக்கியமான ஒன்றை மட்டும் உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
நான் ஒரு சமயம் ஒரு நகரத்துக்கு போனேன்.
அங்கே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.
நான் அந்த குழந்தையை பார்த்து வேடிக்கையாக கேட்டேன்.
ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயா கொளுத்தினாயா என்று!
ஆமாம் என்றது அந்த குழந்தை.
சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் இருந்தது.
இப்போது எரிகிறது.
இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா? என்று கேட்டேன்.
அதற்கு அந்த குழந்தை சிரித்தது.
இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது.
அதன் பிறகு என்னை பார்த்து கேட்டது.
இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள் அல்லவா. அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா? என்று இப்படி என்னிடம் அந்த குழந்தை கேட்டதும்...எனது ஆணவம் அழிந்தது.
நான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகிவிட்டது. எனது முட்டாள்தனத்தை நான் உணர்ந்தேன் என்றார் ஞானி.
இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·