- · 5 friends
-
I
பூரி ஜகந்நாதர் திருக்கோயில் பிரசாதம்
பூரி ஜகந்நாதர் திருக்கோயிலில் வழங்கப்படும் பிரசாதம் விசேஷமாகக் கருதப்படுகிறது. பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் சமையலறை உலகிலேயே மிகப்பெரியது என்கிறார்கள்.
300 சமையற்கலைஞர்களும், உதவியாளர்கள் 600 பேரும் ஒருநாளைக்கு 20,000 பேருக்கும் பண்டிகை நாள்களில் ஒரு லட்சம் பேருக்கும் சமைக்கிறார்கள். உலகத்தின் பெரிய சமையலறை இங்குள்ளது. 56 வகையான பிரசாதங்களுக்குப் புகழ்பெற்ற 'சப்பன் போக்’ இந்தக் கோயிலின் சிறப்பு!
சமையலறையில் சமைக்கப்பட்டு கடவுளிடம் எடுத்துச் செல்லும்போது அந்த உணவுகளுக்கு எந்த மணமும் இருப்பதில்லை. சாமிக்குப் படைக்கப்பட்டு, `ஆனந்த் பஸார்’ என்ற இடத்தில் பிரசாதங்கள் விநியோகிக்கப்படும். அப்போது அந்த உணவுகளின் வாசம் ஊரே மணக்கும். அந்த வாசனையை உணர முடிந்தவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றொரு நம்பிக்கை.
மண் பாத்திரங்களில் தான் சமைக்கிறார்கள். ஐந்து பானைகளை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைத்து, அடியில் விறகுகள் வைத்துச் சமைக்கிறார்கள். சமைக்கும் போது மேலே உள்ள பானையிலுள்ள உணவு முதலில் வெந்துவிடும். இப்படியோர் அதிசயத்தை வேறெங்கும் பார்க்க முடியாது. அதனால் மகாலட்சுமியே வந்து சமைப்பதாகவும் நம்பப்படுகிறது.
அந்த ஊருக்கான காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் மட்டுமே பயன்படுத்தப் படும். ஏலக்காய், பச்சைக் கற்பூரம் கிடையாது. சேப்பங்கிழங்கு, வாழைக்காய் போன்ற நாட்டுக் காய்கறிகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். சீசனுக்கேற்ப இந்த மெனு மாறும்.
வெயில் காலத்தில் மோர், நீராகாரம் போன்றவையும் பிரசாதங்களாகப் பரிமாறப்படுகின்றன. இந்த கோயிலில் மதிய நேரத்தில் செய்யப்படுகிற நைவேத்தியம் ரொம்பவே பிரபலம்.
இங்கு சமைக்கப்படும் உணவுகளை மகாலட்சுமியே நேரடியாக கண்காணிப்பதாக ஐதிகம். இதனால் இங்கே சமைக்கப்படும் உணவுகள் மிஞ்சுவதும் இல்லை பற்றாக்குறை ஏற்படுவதும் இல்லை என்கிறார்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·